குறுகிய கடல் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/குறுகிய கடல் பாம்பு
Hydrophis|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
குறுகிய கடல் பாம்பு
உயிரியல் வகைப்பாடு e
இனம்:
[[வார்ப்புரு:Taxonomy/குறுகிய கடல் பாம்பு
Hydrophis]]க. curtus
இருசொற் பெயரீடு
க curtus
(Shaw, 1802)

குறுகிய கடல் பாம்பு (Hydrophis curtus) ஆனால் பெரும்பாலும் ஹைட்ரோஃபிஸ் ஹார்ட்விக்கி [2] என்பது கடல் பாம்பு வகையாகும். பெரும்பாலான ஹைட்ரோஃபினே கடல் பாம்புகளைப் போலவே, இது ஒரு சீவசம், முழுவதும் கடலில் வாழக்கூடியது. இது அதிக நச்சு கொண்டது. [3] இது மனித மற்றும் விலங்கு உணவு தேவைக்காகவும், மருத்துவ நோக்கம், தோல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகவும் பிடிக்கப்படுகிறது. [4] இது ஒரு நஞ்சுள்ள பாம்பு என்றாலும், பெரும்பாலும் அது மனிதரைக் கொல்லும் அளவுக்கு இல்லை.

விளக்கம்[தொகு]

இந்த இனப் பாம்புகளின் அடிப்பகுதி செதில்களின் எண்ணிக்கையில் உள்ள பரவலான மாறுபாடுகளால் வகைப்படுத்தப்படுகிறது. [2] இரு பாலினத்தவையும் தங்கள் உடலுடன் முட்கள் போன்ற செதில்களைக் கொண்டுள்ளன. ஆனால் ஆண் பாம்புகளுக்கு அந்த முள்போன்ற செதில்கள் நன்கு வளர்ந்துள்ளன. இந்த மாதிரியான பால் ஈருருமை உடலமைப்பானது இந்த பாம்புகளுக்கிடையிலான காதலுக்கும், இடம்பெயர்தலுக்கும் உதவியாக இருக்கின்றன. [2]

இவற்றின் உடல் கடலில் நீந்துவதற்கும் ஏற்றதாக தட்டையாக இருக்கும். தலை கரிய நிறமாக இருக்கும். உடல் மஞ்சள் நிறமாக இருக்கும். உடலில் சராசரியாக 46 கரிய பட்டைகள் இருபுறமும் காணப்படும். இவற்றின் வால் துடுப்புபோல இருக்கும். இவை கடலில் வாழக்கூடியவையாக இருந்தாலும் அவ்வப்போது சுவாசிக்க கடலின் மேற்பரப்புக்கு வருகின்றன. இவை பெரும்பாலும் ஆழமற்ற கடற்பகுதியிலேயே வாழ்கின்றன.[5]

பரவல்[தொகு]

இது பரவலாக காணப்படும் இனமாகும். மேலும் பெரும்பாலான இந்தக் கடல் பாம்புகள் வெப்பமான, வெப்பமண்டல கடற்பகுதிகளில் காணப்படுகின்றன. அதன் வாழிட எல்லையில் பின்வரும் பகுதிகள் அடங்கும்:

  • பாரசீக வளைகுடா (ஓமன், பகுரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான்)
  • இந்தியப் பெருங்கடல் ( வங்காளதேசம், பாகித்தான், இலங்கை, இந்தியா)
  • தென் சீனக் கடல் (வடக்கே புஜியன் மற்றும் ஷான்டாங் கடற்கரைகள்)
  • தைவான் நீரிணை
  • இந்தோ-ஆத்திரேலிய தீவுக்கூட்டங்கள்
  • ஆத்திரேலியாவின் வடக்கு கடற்கரை (வடக்கு மண்டலம், குயின்சிலாந்து, மேற்கு ஆத்திரேலியா)
  • பிலிப்பைன்சு (பனே)
  • பசிபிக் பெருங்கடல் (மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா, யப்பான், நியூ கினியா)
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கம்போடியா மற்றும் சிங்கப்பூர் [1]

வகைபிரித்தல்[தொகு]

முதலில் ஹைட்ரோஃபிஸ் பேரினத்தின் இரண்டு இனங்கள் உள்ளதாகக் கருதப்பட்டது. அவை ஹைட்ரோஃபிஸ் கர்டஸ் மற்றும் ஹைட்ரோஃபிஸ் ஹார்ட்விக்கி என்பனவாகும். கிரிடிஸ் மற்றும் வோரிஸ் (1990) அதன் புவியியல் எல்லையில் 1,400 க்கும் மேற்பட்ட மாதிரிகளின் உருவவியல் மாறுபாட்டை ஆய்வு செய்து, இது பெரும்பாலும் ஒரே இனம் என்று முடிவு செய்தனர். [2] [4] டிஎன்ஏ மற்றும் உருவவியல் பகுப்பாய்வு முடிவுகள் அதன் தொகுதிப் பிறப்பு நிலையை ஒற்றை இனமாக கருதும் முடிவுக்கு கொண்டுவந்தது. [6] 2014 ஆம் ஆண்டில் இவற்றின் எண்ணிக்கை பகுப்பாய்வு, புவியியல் எல்லையில் உள்ள ஆழமான வேறுபாடு மற்றும் மரபணு தனிமைப்படுத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரங்களைக் கண்டறிந்தது, இது இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் குழு இனங்கள் பிரிக்கப்படுவதற்கு ஆதரவாக உள்ளன. மேலும் அந்த குழுக்களுக்குள் பூடகமான உயிரியல் வைப்படுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. [7]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Rasmussen, A.R.; Crowe-Riddell, J.M.; Courtney, T.; Sanders, K. (2021). "Hydrophis curtus". IUCN Red List of Threatened Species. 2021: e.T176746A132780885. doi:10.2305/IUCN.UK.2021-2.RLTS.T176746A132780885.en. Retrieved 18 November 2021.
  2. 2.0 2.1 2.2 2.3 Gritis, P. & H. K. Voris 1990 Variability and significance of parietal and ventral scales in the marine snakes of the genus Lapemis (Serpentes: Hydrophiidae), with comments on the occurrence of spiny scales in the genus.
  3. Heatwole H. 1999.
  4. 4.0 4.1 Lukoschek, V., Guinea, M., Cogger, H., Rasmussen, A., Murphy, J., Lane, A., Sanders, K. Lobo, A., Gatus, J., Limpus, C., Milton, D., Courtney, T., Read, M., Fletcher, E., Marsh, D., White, M.-D., Heatwole, H., Alcala, A., Voris, H. & Karns, D. 2010.
  5. "நல்ல பாம்பு -21: அரிய பாம்புகள் இரண்டு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.
  6. Sanders, K. L., Mumpuni, Lee M. S. Y. 2010 Uncoupling ecological innovation and speciation in sea snakes (Elapidae, Hydrophiinae, Hydrophiini.
  7. Ukuwela, Kanishka D. B.; de Silva, Anslem; Mumpuni; Fry, Bryan G.; Sanders, Kate L. (September 2014). "Multilocus phylogeography of the sea snake reveals historical vicariance and cryptic lineage diversity". Zoologica Scripta 43 (5): 472–484. doi:10.1111/zsc.12070. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுகிய_கடல்_பாம்பு&oldid=3642476" இலிருந்து மீள்விக்கப்பட்டது