குமாரகோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குமாரகோவில்
குமாரகோவில்
சிற்றூர்
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மொழிகள்
 • அலுவல்முறைதமிழ்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
பின்கோடு629180
வாகனப் பதிவுTN-74
அருகிலுள்ள நகரம்தக்கலை

குமாரகோவில் (Kumarakovil) கன்னியாகுரி மாவட்டத்திலுள்ள ஓர் சிற்றூர். கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 34 கிமீ தொலைவிலும் திருவனந்தபுர வானூர்திநிலையத்திலிருந்து 50 கிமீ தொலைவிலும் இந்தச் சிற்றூர் அமைந்துள்ளது. இங்கிருந்து 5 கிமீ தொலைவில் தக்கலை பேருந்துநிலையம் உள்ளது. இங்கிருந்து குமாரகோவிலுக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு நூருல் இசுலாம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

இங்குள்ள வெலிமலை முருகன் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இங்குள்ள 200 அடி உயரமுள்ள வெலிமலை என்ற குன்றில் "வெலிமலை குமாரசாமி கோவில்" குடவரைக் கோவிலாக கட்டப்பட்டுள்ளது. முருகரும் வள்ளியும் முதன்மைத் தெய்வங்களாக உள்ளனர்; இங்குதான் இவர்கள் திருமணம் நிகழ்ந்ததாக நம்பப்படுகின்றது. கேரளாவிலிருந்து இங்கு பெரும்பாலான பக்தர்கள் வருகின்றனர். கோவிலின் விழாக்களுக்கு கேரளக் காவல்துறையின் இசைக்குழு பங்கேற்கிறது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரகோவில்&oldid=2334193" இருந்து மீள்விக்கப்பட்டது