கீதா மிட்டல்
நீதிபதி கீதா மிட்டல் (Justice Gita Mittal) (பிறப்பு 9 டிசம்பர் 1958) ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் ஜம்மு -காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், அந்த நிலையில் பணியாற்றிய முதல் பெண் நீதிபதியும் ஆவார்.[1] இவர் தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கூடுதல் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்
[தொகு]கீதா மிட்டல், தில்லியில் உள்ள லேடி இர்வின் பள்ளியில் கல்வி பயின்றார். 1975இல் அறிவியலை மையமாகக் கொண்டு பட்டம் பெற்றார்.[2] ஒரு பள்ளி மாணவராக இவர் இந்தியாவில் பெண் வழிகாட்டி இயகத்தில் உறுப்பினராக இருந்தார். மேலும் பல நிகழ்வுகளில் சர்வதேச அளவில் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[3] 1978ஆம் ஆண்டில் தில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரியில் இருந்து கௌரவத்துடன் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். மேலும் கல்லூரியின் விளையாட்டுத் தலைவராக (1977-1978) செயல்பட்டு தடகளத்திலும் 1981இல் தில்லியில் உள்ள கேம்பஸ் சட்ட மையத்தில் இளங்கலைச் சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.[4]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர், தில்லி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 1981 முதல் 2004 வரை தில்லியில் வழக்கறிஞராக பயிற்சி செய்து வந்தார்.[4] தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் ஆலோசகராக சட்டவிரோத கட்டமைப்புகளை இடிப்பது தொடர்பான வழக்கில் அவர்களுக்காக ஆஜராகி, வாதாடவும் செய்தார்.[5]
நீதித்துறை வாழ்க்கை
[தொகு]தில்லி உயர் நீதிமன்றம்
[தொகு]இவர்,16 ஜூலை 2004 அன்று தில்லி உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 20 பிப்ரவரி 2006 அன்று நிரந்தர நீதிபதியாக உறுதி செய்யப்பட்டார்.[4] இவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில், குடிமை மற்றும் குற்றவியல் வழக்குகளை கையாண்டார் .
உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில், இவர் பல நிர்வாக மற்றும் நீதித்துறை குழுக்களில் பணியாற்றினார். இவர் தில்லி உயர் நீதிமன்றத்தின் மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்தின் தலைவராக இருந்தார். மேலும் பாலியல் துன்புறுத்தல், பணி நிலைமைகள், துணை நீதிமன்றங்களில் நீதிபதிகளின் செயல்திறன் மதிப்பீடு மற்றும் நீதித்துறை பயிற்சி தொடர்பான புகார்களைக் கையாளும் குழுக்களில் பணியாற்றினார்.[4] பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் குழந்தை சாட்சிகளை நிர்வகிக்கும் சட்ட வழிகாட்டுதல்களை செயல்படுத்துவது தொடர்பான குழுவிலும் பணியாற்றினார். [4] இதன் ஒரு பகுதியாக, தில்லி உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்படக்கூடிய சாட்சிகளுக்காக சிறப்பு நீதிமன்ற அறைகளை நிறுவுவதற்கான ஒரு முயற்சியை இவர் வழிநடத்தினார், இதுபோன்ற முதல் நீதிமன்ற அறை 2012இல் நிறுவப்பட்டது.[4] [6]
14 ஏப்ரல் 2017 அன்று, தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.[4]
தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதித்துறை
[தொகு]இவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பல குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை எழுதினார். அவற்றில் பல இந்தியாவில் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளில் சேவை மற்றும் ஆட்சேர்ப்பு நிலைமைகளைப் பற்றியது. 2011ஆம் ஆண்டில், நீதிபதி ஆர். மிதாவுடன் சேர்ந்து, திருநங்கைகளின் உரிமைகள் குறித்து ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பை நிறைவேற்றினார். இந்திய-நேப்பாளம் மற்றும் இந்திய-பூட்டான் எல்லைப் பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் [மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றான சசசுத்திர சீமா பல்லில் பிறவியிலேயே இயக்குநீர் கோளாறு உள்ள ஒரு பெண் காவலாக சேர தடை விதிக்கப்பட்டு நியாயமற்ற முறையில் பாகுபாடு காட்டப்பட்ட போது இத் தீர்ப்பினை அளித்தார். [7]
2013இல், நீதிபதி தீபா சர்மாவுடன் , மத்திய சேமக் காவல் படையில் பதவி உயர்வு சூழலில் நிறக் குறைபாடு ஒரு காரணமாக இருக்க முடியாது என்று இவர் கூறினார். [8]
2018 இல், இந்திய பிராந்திய இராணுவத்தில் பெண்கள் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க தடை செய்யும் விளம்பரங்கள், பிராந்திய இராணுவச் சட்டம், 1948 ஐ மீறியது, இது ஆண்களையும் பெண்களையும் விண்ணப்பிக்க அனுமதிக்கிறது என தீர்பளித்தார். [9] [10]
ஜம்மு காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்றம்
[தொகு]3 ஆகத்து 2018 அன்று, இவர் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[11] இவர் அந்த நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவார். இவர் 8 திசம்பர் 2020 அன்று ஓய்வு பெற்றார்.[12]
பிற செயல்பாடுகளும் விருதுகளும்
[தொகு]இவர் பல கல்வி நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். 2008 முதல் தில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும், 2013 முதல் புதுதில்லியில் உள்ள இந்திய சட்ட நிறுவனத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[4] [13] 1999 முதல் 2004 வரை தில்லி பல்கலைக்கழக நீதிமன்றத்தின் உறுப்பினராக இருந்தார். 1997 முதல் 1999 வரை தில்லியில் உள்ள ராம் லால் ஆனந்த் கல்லூரியின் ஆட்சிக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[4]
நீதிபதி மிட்டல். தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 'தில்லியின் சட்டப் படிப்பு' என்ற இதழின் ஆசிரியர் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றுகிறார்.[14]
2008ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர், முகம்மது அமீத் அன்சாரி, இவரது சட்டரீதியான பங்களிப்பை அங்கீகரித்து, லேடி சிறீராம் கல்லூரியின் 'தனித்துவமான முன்னாள் மாணவர் விருது' வழங்கினார்.[4] 2019ஆம் ஆண்டில், நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதில் இவரது பங்களிப்புகளுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றங்களை வடிவமைத்து அறிமுகப்படுத்தியதற்காகவும், தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி. என். பகவதி விருது பெற்றார்.[15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CJ And Sitting Judges". Delhihighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-05-17.
- ↑ Delhi High Court. "Biography - Justice Gita Mittal". Delhi High Court. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.
- ↑ High Court of Jammu and Kashmir. "Biography - Chief Justice Mittal". Jammu and Kashmir High Court. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.
- ↑ 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 Delhi High Court. "Biography - Justice Gita Mittal". Delhi High Court. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.Delhi High Court.
- ↑ "Prepare demolition plan within two weeks: Delhi HC". Zee News (in ஆங்கிலம்). 2003-11-28. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
- ↑ "India's first child witness court room inaugurated". News18. 2012-09-16. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
- ↑ "Faizan Siddiqui vs. Sashastra Seema Bal - South Asian Translaw Database - Congenital Anomaly". South Asian Translaw Database (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-06-27. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
- ↑ "Colour blindness not an obstacle for promotion in CRPF: Delhi High Court". India Today (in ஆங்கிலம்). August 3, 2013. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
- ↑ Delhi High Court (5 January 2018). "Kush Kalra v. Union of India". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.
- ↑ "Delhi High Court paves way for recruitment of women in Territorial Army". https://economictimes.indiatimes.com/news/defence/delhi-high-court-paves-way-for-recruitment-of-women-in-territorial-army/articleshow/62378468.cms?from=mdr.
- ↑ High Court of Jammu and Kashmir. "Biography - Chief Justice Mittal". Jammu and Kashmir High Court. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.High Court of Jammu and Kashmir.
- ↑ "J&K High Court Chief Justice Gita Mittal retires". The Indian Express (in ஆங்கிலம்). 2020-12-09. பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
- ↑ "National Law University Delhi". nludelhi.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
- ↑ National Law University, Delhi. "Journal of Legal Studies: Advisory Board" (PDF). பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.
- ↑ Bench, Bar &. "Justice PN Bhagwati Award conferred upon Justice Gita Mittal". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.