கிளைன்பெல்டர் நோய்த்தொகை
கிளைன்பெல்டர் நோய்த்தொகை | |
---|---|
ஒத்தசொற்கள் | எக்சு எக்சு ஒய் (XXY) நோய்த்தொகை, கிளைன்பெல்டர் நோய்த்தொகை, கிளைன்பெல்டர் –இரீப்பென்சுட்டீன்-ஆல்பிரைட் நோய்த்தொகை |
47,XXY கலக்கரு வகைமை | |
பலுக்கல் | |
சிறப்பு | மருத்துவ மரபியல் |
அறிகுறிகள் | மிகச் சிலவே[1] |
வழமையான தொடக்கம் | பிறக்கும்போது |
கால அளவு | நெடுங்காலம் நீடிக்கும் |
காரணங்கள் | ஆண்களில் இரண்டு அல்லது கூடுதலான எக்சு குறுமவகங்கள்[2] |
நோயறிதல் | கலக்கரு மரபியல் ஓர்வு[3] |
சிகிச்சை | இயன்மருத்துவம், பேச்சு மொழி மருத்துவம், கலந்துரையாடல்[4] |
முன்கணிப்பு | பெரிதும் இயல்பான ஆயுள் எதிர்பார்ப்பு[5] |
நிகழும் வீதம் | 500 பேரில் ஒஉருவர் முதல் 1000 பேரில் ஒருவர் வரை[6][7] |
எக்சு எக்சு ஒய் நோய்தொகை (XXY) அல்லது 47,எக்சு எக்சு ஒய் நோய்த்தொகை (47,XXY) எனப்படும் கிளைன்பெல்டர் நோய்த்தொகை (Klinefelter syndrome, KS) என்பது ஆண்களில் இரண்டு அல்லது கூடுதலான எக்சு குறுமவகங்கள் அமைவதால் ஏற்படும் நோய்த்தொகையாகும்.[2] இது இனப்பெருக்கத் திறனைக் குறைப்பதோடு சிறிய விரைப்பை/ விந்தகத்தை உருவாக்கும்.[2][8] இந்த அறிகுறிகள் நுட்பமானவை என்பதால் பலர் இவற்றை அறிவதில்லை.[1] சிலவேளைகளில் அறிகுறிகள் ஓங்கலாக அமையும். ஓங்கலான அறிகுறிகளாக வலிவற்ற தசை,கூடுதலான உயரம், குறைவான இயக்க ஒருங்கிணைதிறன், முடி குறைவான உடல், முலை பருத்தல், பாலியல் ஆர்வம் இன்மை ஆகியன அமையும்.[1] பெரும்பாலும் இந்த அறிகுறிகள் பூப்பு அடையும்போது வெளிப்படுகிறது.[3] அறிதிறன் இயல்பாக இருக்கும். இருந்தாலும் பலருக்கு படிக்கவும் பேசவும் எளிதில் இயலாது.[1] பல எக்சு குறுமவகங்கள் அமைந்தால் அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும் .[1]
இந்நோய்த்தொகை வழக்கமாக தற்போக்கில் தோன்றக்கூடியதாக உள்ளது.[6] அகவை கூடிய தாய் இந்நோய்த்தொகை உள்ள குழந்தையைப் பெறுவதில் சற்றுக் கூடுதலான இடர் அமையும்.[6] இது பெற்றோரிடம் இருந்து மரபாகக் கையளிக்கப்படுவதில்லை.[6] மாந்தனின் இயல்பான குறுமவகங்களின் எண்ணிக்கை 46 ஆகும். இவற்றுடன்டன் குறைந்தது ஓர் எக்சு குறுமவகம் கூடி 47 குறுமவகங்கள் கலக்கருவில் அமைந்தால் இந்நோய்த்தொகை ஏற்படுகிறது. இந்நிலை பாலினக் குறுமவக்ப் பிறழ் இணைவுநிலை எனப்படும்.[9] இந்நோய்த்தொகையைக் கலக்கரு வகைமை மரபியல் ஓர்வால் அறியலாம்.[3]
இதை முழுமையாக தீர்க்க முடியாது என்றாலும் சில மருத்துவ முறைகள் உதவிபுரிகின்றன.[5] இயன்மருத்துவம், பேச்சு, மொழி மருத்துவம், கலந்துரையாடல், கற்றல் முறைகளில் மாற்றம் ஆகியவை பயனுள்ளனவாக அமைகின்றன.[4]விந்தியக்க ஊக்கிகளை விந்து மட்டம் கணிசமாக குறைவானபோது பயன்படுத்தலாம்.[4] பருத்த முலைகளை அறுவையால் நீக்கலாம்.[4] இந்நோய்த்தொகை உள்ள ஆண்களில் பாதிபேர் இனப்பெருக்கத் தொழில்நுட்ப உதவியால் குழந்தைகளைப் பாலூட்டி வளர்க்கலாம். ஆனால் இது செலவு மிக்கதும் இடர்மிகுந்ததும் ஆகும்.[4] ஆண்களின் முலைப்புற்று உயர் இடர் மிகுந்ததாக மிகுந்தது. இருந்தாலும் இந்த இடர் பெண்களைவிட குறைந்ததுதான்.[10] இவர்களது ஆயுள் எதிர்பார்ப்பு ஓரளவு இயல்பாக அமைகிறது.[5]
வரலாறு
[தொகு]இந்த நோய்த்தொகை ஆரி கிளைன்பெல்டர் பெயரால் அழைக்க்ப்படுகிறது. இவர் 1942 இல் புல்லர் ஆல்பிரைட், ஈ. சி. இரைபென்சுட்டீன் ஆகிய இருவருடன் இணைந்து போசுட்டனில் உள்ள மசாசூசட் பொது மருத்துவ மனையில் கண்டுபிடித்தார். இதை அதே ஆண்டில் முதலில் விவரித்து ஓர் அறிக்கையாக வெளியிட்டார்.[11][12]
கிளைபெல்டர் நோய்த்தொகை கூடுதலாக ஒரு மிகையான குறுமவகம் அமைவதால் உருவாதல் 1956 இல் கண்டுபிடிக்கப்பட்டது.[13] பிளங்க்ட், பார் ஆகிய இருவரும் உடலின் கலக்கருவில் பாலினக் குறுமவகம் அமைவதைக் கண்டனர்.[14]
பாத்ரீசியா யாகோப்சு, ஜான் ஆண்டர்சன் சுட்டிராங் ஆகிய இருவரும் 1959 இல் உடலின் கலக்கருவில் எக்சு எக்சு ஒய் குறுமவக இணைவுநிலை அமைதலை விளக்கினர். இது பாலினக் குறுமவகப் பிறழ் இணைவுநிலையாகும்.[15]
47, எக்சு எக்சு ஒய் கலக்கரு வகைமை ஓர் ஆணில் அமைதலை 1959 இல் ஓர் அறிக்கையாக இசுகாட்லாந்தில் எடின்பர்கு நகர வெசுட்டர்ன் பொது மருத்துவ மனையில் பணிபுரிந்த பாத்ரீசியா யாகோப்சு, ஜான் ஆண்டர்சன் சுட்டிராங் ஆகிய இருவரும் முதலில் வெளியிட்டனர்.[16] இந்தக் கலக்கரு வகைமை கிளைன்பெல்டர் நோய்த்தொகை சார்ந்த அறிகுறிகள் அமைந்த 24 அகவை ஆணில் காணப்பட்டது. இந்த மாந்த அல்லது பாலூட்டிக் குறுமவகப் பிறழ் இணைவுநிலைக் கண்டுபிடிப்பைத் தனது 1981 ஆம் ஆண்டைய வில்லியம் ஆலன் நினைவு விருது உரையில் யாகோப்சு அறிவித்தார்.[17]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "What are common symptoms of Klinefelter syndrome (KS)?". Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human Development. 2013-10-25. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 15 March 2015.
- ↑ 2.0 2.1 2.2 "Klinefelter Syndrome (KS): Overview". nichd.nih.gov. Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human Development. 2013-11-15. Archived from the original on 18 March 2015. பார்க்கப்பட்ட நாள் 15 March 2015.
- ↑ 3.0 3.1 3.2 "How do health care providers diagnose Klinefelter syndrome (KS)?". Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human Development. 2012-11-30. Archived from the original on 17 March 2015. பார்க்கப்பட்ட நாள் 15 March 2015.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 "What are the treatments for symptoms in Klinefelter syndrome (KS)?". Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human Development. 2013-10-25. Archived from the original on 15 March 2015. பார்க்கப்பட்ட நாள் 15 March 2015.
- ↑ 5.0 5.1 5.2 "Is there a cure for Klinefelter syndrome (KS)?". Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human Development. 2012-11-30. Archived from the original on 17 March 2015. பார்க்கப்பட்ட நாள் 16 March 2015.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 "How many people are affected by or at risk for Klinefelter syndrome (KS)?". Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human Development. 2012-11-30. Archived from the original on 17 March 2015. பார்க்கப்பட்ட நாள் 15 March 2015.
- ↑ "Klinefelter syndrome". Genetics Home Reference. National Library of Medicine. 2012-10-30. Archived from the original on 2012-11-15. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02.
- ↑ Visootsak, Jeannie; Graham, John M. (24 October 2006). "Klinefelter syndrome and other sex chromosomal aneuploidies". Orphanet Journal of Rare Diseases 1: 42. doi:10.1186/1750-1172-1-42. பன்னாட்டுத் தர தொடர் எண்:1750-1172. பப்மெட்:17062147.
- ↑ Visootsak J, Graham JM; Graham Jr (2006). "Klinefelter syndrome and other sex chromosomal aneuploidies". Orphanet Journal of Rare Diseases 1: 42. doi:10.1186/1750-1172-1-42. பப்மெட்:17062147.
- ↑ Brinton, LA (June 2011). "Breast cancer risk among patients with Klinefelter syndrome". Acta Paediatrica 100 (6): 814–8. doi:10.1111/j.1651-2227.2010.02131.x. பப்மெட்:21241366.
- ↑ "Klinefelter's syndrome: historical background and development". Southern Medical Journal 79 (9): 1089–93. September 1986. doi:10.1097/00007611-198609000-00012. பப்மெட்:3529433. https://archive.org/details/sim_southern-medical-journal_1986-09_79_9/page/1089.
- ↑ The Klinefelter-Reifenstein-Albright syndrome. பரணிடப்பட்டது 2017-08-27 at the வந்தவழி இயந்திரம் on biomedsearch.com, retrieved 26 August 2017
- ↑ Odom, Samuel L. (2009). Handbook of developmental disabilities (Pbk. ed.). New York: Guilford. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781606232484.
- ↑ Science Direct – Klinefelter Syndrome
- ↑ "A case of human intersexuality having a possible XXY sex-determining mechanism". Nature 183 (4657): 302–3. 31 January 1959. doi:10.1038/183302a0. பப்மெட்:13632697. https://archive.org/details/sim_nature-uk_1959-01-31_183_4657/page/302.
- ↑ "A case of human intersexuality having a possible XXY sex-determining mechanism". Nature 183 (4657): 302–3. January 31, 1959. doi:10.1038/183302a0. பப்மெட்:13632697. https://archive.org/details/sim_nature-uk_1959-01-31_183_4657/page/302.
- ↑ Jacobs PA (September 1982). "The William Allan Memorial Award address: human population cytogenetics: the first twenty-five years". Am J Hum Genet 34 (5): 689–98. பப்மெட்:6751075.
மேலும் படிக்க
[தொகு]- Virginia Isaacs Cover (2012). Living with Klinefelter Syndrome, Trisomy X and 47,XYY: A Guide for Families and Individuals Affected by Extra X and Y Chromosomes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-615-57400-4.
வெளி இணைப்புகள்
[தொகு]வகைப்பாடு | |
---|---|
வெளி இணைப்புகள் |
|
- கிளைன்பெல்டர் நோய்த்தொகை குர்லியில்