தேர்னர் கூட்டறிகுறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேர்னர் கூட்டறிகுறி
Neck of girl with Turner Syndrome (before and after).jpg
தேர்னர் கூட்டறிகுறி உடைய பெண்ணொருவரின் கழுத்தின் இருபுறங்களிலும் சருமமடிப்புகள். இரண்டாவது படம் அறுவைச்சிகிச்சையின் பின்னர் எடுக்கப்பட்டது.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு Pediatrics, medical genetics
ஐ.சி.டி.-10 Q96.
ஐ.சி.டி.-9 758.6
நோய்களின் தரவுத்தளம் 13461
MedlinePlus 000379
ஈமெடிசின் ped/2330
Patient UK தேர்னர் கூட்டறிகுறி
MeSH D014424
Orphanet 881

தேர்னர் கூட்டறிகுறி (Turner syndrome) அல்லது தர்னர் நோய்த்தொகை என்பது எக்சு நிறப்புரி பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அற்றுக் காணப்படும் நிறப்புரிக் குறைபாடாகும். இது 45,X எனக் குறிக்கப்படுகின்றது. மாந்தரில் 22 சோடி தன்நிறப்புரிகளும், ஆண், பெண் வேறுபாட்டைத் தீர்மானிக்கும் ஒரு சோடி பால்குறி நிறப்புரிகளும் காணப்படுகின்றன. பால்குறி நிறப்புரிகளை X, Y என்ற ஆங்கில எழுத்துக்கள் மூலம் குறிப்பிடுவர். பெண்களில் இரு X நிறப்புரிகளும் (XX), ஆண்களில் ஒரு X மற்றும் ஒரு Y சேர்ந்து XY என்ற நிறப்புரி சோடியும் காணப்படுகின்றன. தேர்னர் கூட்டறிகுறியில் பெரும்பாலும் ஒரு எக்சு நிறப்புரி அற்றுக் காணப்படும். இதனால் சம்பந்தப்பட்ட பெண் சாதாரண பெண்களிலும் இருந்து வேறுபட்டுக் காணப்படுவார்.[1]

பாதிப்புற்றவருக்கிடையே அறிகுறிகள் வேறுபட்டுக் காணப்படும். கட்டையான இருபுறமும் மடிப்புள்ள அகண்ட கழுத்து, கட்டையான விரல்கள், பிறந்தவுடன் வீங்கியுள்ள கை மற்றும் கால்கள் என்பன பாதிப்புற்ற குழந்தைகளில் காணப்படும் பொதுவான அறிகுறிகளாகும். பதின்ம வயது மற்றும் இளவயதுடைய பெண்களில் வளர்ச்சி குன்றியிருத்தல், குட்டை உருவம், கணித சம்பந்தமான மற்றும் நுண்திறன் அறிவு குறைந்திருத்தல், பருவமடைதலில் குளறுபாடு போன்றன ஏற்படும். பருவம் அடைவதற்கு முன்னர் சூலகம் செயலாற்றுப் போனால் மார்பக வளர்ச்சி இல்லாது காணப்படும். தேர்னர் கூட்டறிகுறியுடைய பெண்கள் பெரும்பாலும் மலட்டுத்தன்மை உடையவர்களாக இருப்பர்.

உசாத்துணைகள்[தொகு]

  1. "Turner Syndrome: Overview". Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human Development (3 April 2013). பார்த்த நாள் 15 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேர்னர்_கூட்டறிகுறி&oldid=2592088" இருந்து மீள்விக்கப்பட்டது