கிறிசு இப்கின்சு
கிறிசு இப்கின்சு Chris Hipkins | |||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||
2022 இல் இப்கின்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
41-வது நியூசிலாந்து பிரதமர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||||||||||||||
பதவியேற்பு 25 சனவரி 2023 | |||||||||||||||||||||||||||||||||||||||
அரசர் | மூன்றாம் சார்லசு | ||||||||||||||||||||||||||||||||||||||
ஆளுநர் | சிண்டி கிரோ | ||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | யசிந்தா ஆடர்ன் | ||||||||||||||||||||||||||||||||||||||
18-வது தொழிற்கட்சித் தலைவர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||||||||||||||
பதவியேற்பு 22 சனவரி 2023 | |||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | யசிந்தா ஆடர்ன் | ||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
இரெமுத்தக்கா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||||||||||||||
பதவியேற்பு 8 நவம்பர் 2008 | |||||||||||||||||||||||||||||||||||||||
பெரும்பான்மை | 20,497 | ||||||||||||||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | கிறித்தோபர் யோன் இப்கின்சு 5 செப்டம்பர் 1978 வெலிங்டன், நியூசிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | தொழிற் கட்சி | ||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்க்கை துணைவர்(கள்) | யேட் இப்கின்சு
(தி. 2020; முறி. 2022) | ||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | 2 | ||||||||||||||||||||||||||||||||||||||
படித்த கல்வி நிறுவனங்கள் | வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம் (இளங்கலை) | ||||||||||||||||||||||||||||||||||||||
கையொப்பம் | ![]() | ||||||||||||||||||||||||||||||||||||||
இணையம் | முகநூல் பக்கம் | ||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர்(கள்) | சிப்பி[1] |
கிறித்தோபர் யோன் இப்கின்சு (Christopher John Hipkins, பிறப்பு: 5 செப்டம்பர் 1978) நியூசிலாந்து அரசியல்வாதி ஆவார். இவர் 2023 சனவரி 25 முதல் நியூசிலாந்தின் 41--ஆவது பிரதமராகவும், நியூசிலாந்து தொழிற் கட்சியின் தலைவராகவும் பதவியில் உள்ளார்.[2][3] இவர் 2008 முதல் ரெமுத்தாக்கா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இப்கின்சு தொழிற்கட்சியின் கல்வி செய்தித் தொடர்பாளராக எதிர்க்கட்சியில் பணியாற்றினார். ஆறாவது தொழிற்கட்சி அரசில், இவர் முன்பு கல்வி, காவல்துறை, பொது சேவை அமைச்சுகளிலும், சபைத் தலைவராகவும் பணியாற்றினார்.
2023 சனவரி 21 இல் பிரதமர் யசிந்தா ஆடர்ன் தொழிற்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தொழிற்கட்சியின் தலைவராக இப்கின்சு ஒரே வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் 2023 சனவரி 22 அன்று கட்சித் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கட்சியின் தலைவரானார். இதன் விளைவாக 2023 சனவரி 25 அன்று ஆளுநரால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.[4] இவர் 2023 பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ McClure, Tess (24 September 2021). "'People are tired': Chris Hipkins, the New Zealand minister battling to eliminate Covid". https://www.theguardian.com/world/2021/sep/25/people-are-tired-chris-hipkins-the-new-zealand-minister-battling-to-eliminate-covid.
- ↑ Whyte, Anna (2023-01-25). "Chris Hipkins formally sworn in as new prime minister". Stuff (ஆங்கிலம்). 2023-01-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Hipkins Named to Succeed Ardern as New Zealand Prime Minister". Bloomberg.com. 20 January 2023. https://www.bloomberg.com/news/articles/2023-01-20/hipkins-named-to-succeed-ardern-as-new-zealand-prime-minister.
- ↑ McClure, Tess (22 January 2023). "New Zealand: Chris Hipkins taking over from Jacinda Ardern on Wednesday". தி கார்டியன். https://www.theguardian.com/world/2023/jan/22/new-zealand-labour-caucus-votes-in-chris-hipkins-to-succeed-jacinda-ardern.
வெளி இணைப்புகள்[தொகு]
- Profile on the New Zealand Parliament website
- Profile at New Zealand Labour Party
- MPs webpage