யசிந்தா ஆடர்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யசிந்தா ஆடர்ன்
Jacinda Ardern
2018 இல் ஆடர்ன்
40-வது நியூசிலாந்து பிரதமர்
பதவியில்
26 அக்டோபர் 2017 – 25 சனவரி 2023
ஆட்சியாளர்கள்
ஆளுநர்
 • பட்சி ரெட்டி
 • சின்டி கிரோ
முன்னையவர்பில் இங்கிலீசு
பின்னவர்கிறிசு இப்கின்சு
தொழிற்கட்சித் தலைவர்
பதவியில்
1 ஆகத்து 2017 – 22 சனவரி 2023
முன்னையவர்ஆன்ட்ரூ லிட்டில்
பின்னவர்கிறிசு இப்கின்சு
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
1 ஆகத்து 2017 – 26 அக்டோபர் 2017
முன்னையவர்ஆன்ட்ரூ லிட்டில்
பின்னவர்பில் இங்கிலீசு
தொழிற்கட்சியின் துணைத் தலைவர்
பதவியில்
7 மார்ச் 2017 – 1 ஆகத்து 2017
தலைவர்அன்ட்ரூ லிட்டில்
முன்னையவர்அனெட் கிங்
பின்னவர்கெல்வின் டேவிசு
நியூசிலாந்து நாடாளுமன்றம்
for மவுண்ட் அல்பர்ட்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மார்ச் 2017
முன்னையவர்டேவிட் சியரர்
பெரும்பான்மை21,246
நியூசிலாந்து நாடாளுமன்றம்
for தொழிற்கட்சிப் பட்டியல்
பதவியில்
8 நவம்பர் 2008 – 8 மார்ச் 2017
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
யசிந்தா கேட் லோரெல் ஆடர்ன்

26 சூலை 1980 (1980-07-26) (அகவை 43)
ஆமில்டன், நியூசிலாந்து
அரசியல் கட்சிதொழிற்கட்சி
துணைகிளார்க் கேபோர்டு (2013 முதல்)
பிள்ளைகள்1
பெற்றோர்
 • ரொசு ஆடர்ன் (தந்தை)
முன்னாள் கல்லூரிவைக்காட்டோ பல்கலைக்கழகம் (இளங்கலை வணிகவியல்)

யசிந்தா ஆடர்ன் (Jacinda Ardern, பிறப்பு: 26 சூலை 1980) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். அக்டோபர் 2017 முதல் நியூசிலாந்தின் 40-ஆவது தலைமை அமைச்சராவும், நியூசிலாந்து தொழிற்கட்சியின் தலைவராகவும் இருந்தவர். இவர் ஆல்பெர்ட் மலைச்சிகரம் என்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் அன்டிரியு லிட்டில் 1 மார்ச் 2017 அன்று பதவி விலகினார்.[3] அதைத் தொடர்ந்து கட்சியின் தலைவராக ஜசிந்தா ஆர்டெர்ன் 1 ஆகஸ்ட் 2017 அன்று பதவியேற்றுக் கொண்டார். பிறகு 23 செப்டம்பர் 2017இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தன் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்தினார். அத்தேர்தலில் தொழிலாளர் கட்சி 46 இடங்களைக் கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்தது. பிறகு அக்கட்சி சிறு கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஜெசிந்தா ஆர்டெர்ன் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.[4] 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.[5] மார்ச் 2019 இல், கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலை நிகழ்வுகளின் பின்னர், துப்பாக்கிகள் வைத்திருப்பது சம்பந்தமாகக் கடுமையான விதிகளை நாட்டில் அறிமுகப்படுத்தினார்.[6] கோவிடு-19 பெருந்தொற்றை 2020 முழுவதும் வெற்றிகரமாகக் கையாண்டார்.[7][8] 2020 அக்டோபர் 17 இல் நடந்த பொதுத்தேர்தலில் இவரது தலைமையிலான தொழிற்கட்சி பெரும்பான்மையான தொகுதிகளை வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.[9]

2023 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் நாள் தான் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் நியூசிலாந்து நாட்டின் தலைமை அமைச்சர் பதவியிலிருந்தும் 2023 பிப்ரவரி 7 ஆம் நாள் விலகுவதாக அறிவித்தார்.[10][11][12] இவரது இடத்திற்கு கிறிசு இப்கின்சு கட்சித் தலைவராகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, யசிந்தா ஆடர்ன் பிரதமர் பதவியில் இருந்து 2023 சனவரி 25 இல் விலகினார்.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. "New Zealand Hansard – Members Sworn". Parliament of New Zealand. p. 2, volume 651. Archived from the original on 23 February 2013.
 2. "Australian journalist surprised by Jacinda Ardern's accessibility". Stuff. பார்க்கப்பட்ட நாள் 21 October 2017.
 3. "Andrew Little quits: Jacinda Ardern is new Labour leader, Kelvin Davis is deputy". The New Zealand Herald. 1 August 2017. பார்க்கப்பட்ட நாள் 1 August 2017.
 4. "2017 General Election – Official Results". Electoral Commission. Archived from the original on 7 October 2017. பார்க்கப்பட்ட நாள் 7 October 2017.
 5. "நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்னுக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது".
 6. Graham-McLay, Charlotte (10 April 2019). "New Zealand Passes Law Banning Most Semiautomatic Weapons, Weeks After Massacre" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2019/04/10/world/asia/new-zealand-guns-jacinda-ardern.html. 
 7. Ensor, Jamie (24 April 2020). "Coronavirus: Jacinda Ardern's 'incredible', 'down to earth' leadership praised after viral video". Newshub இம் மூலத்தில் இருந்து 21 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200421085636/https://www.newshub.co.nz/home/politics/2020/04/coronavirus-jacinda-ardern-s-incredible-down-to-earth-leadership-praised-after-viral-video.html. பார்த்த நாள்: 24 April 2020. 
 8. Khalil, Shaimaa (22 April 2020). "Coronavirus: How New Zealand relied on science and empathy". பிபிசி இம் மூலத்தில் இருந்து 22 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200422104113/https://www.bbc.com/news/world-asia-52344299. பார்த்த நாள்: 24 April 2020. 
 9. Roy, Eleanor Ainge; Graham-McLay, Charlotte (2020-10-17). "Jacinda Ardern hails 'very strong mandate' after New Zealand election landslide" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2020/oct/17/jacinda-arderns-labour-party-set-for-victory-in-new-zealand-election. 
 10. Malpass, Luke (2023-01-19). "Live: Jacinda Ardern announces she will resign as prime minister by February 7th". Stuff (in ஆங்கிலம்). Archived from the original on 19 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-19.
 11. McClure, Tess (19 January 2023). "Jacinda Ardern resigns as prime minister of New Zealand". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 19 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230119001531/https://www.theguardian.com/world/2023/jan/19/jacinda-ardern-resigns-as-prime-minister-of-new-zealand. 
 12. "Jacinda Ardern: New Zealand PM to step down next month". BBC News. 19 January 2023 இம் மூலத்தில் இருந்து 19 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230119005242/https://www.bbc.com/news/world-asia-64327224. 
 13. McClure, Tess (22 January 2023). "New Zealand: Chris Hipkins taking over from Jacinda Ardern on Wednesday". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 22 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230122020907/https://www.theguardian.com/world/2023/jan/22/new-zealand-labour-caucus-votes-in-chris-hipkins-to-succeed-jacinda-ardern. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யசிந்தா_ஆடர்ன்&oldid=3702323" இலிருந்து மீள்விக்கப்பட்டது