கிரைசோமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரைசோமா
மஞ்சள் கண் சிலம்பன், கிரைசோமா சையென்சி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சில்விடே
பேரினம்:
கிரைசோமா
மாதிரி இனம்
கிரைசோமா சையென்சி
பிராங்ளின், 1831
சிற்றினம்

உரையினை காண்க

கிரைசோமா (Chrysomma) என்பது பாடும் பறவைப் பேரினமாகும். இது கிளி அலகுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையது. எனவே இது பாரடாக்சோர்னிதிடே குடும்பத்தைச் சேர்ந்தது.

வகைப்பாட்டியல்[தொகு]

இங்கிலாந்து விலங்கியல் வல்லநரான எட்வர்ட் பிளைத் என்பவரால் 1843ஆம் ஆண்டு கிரைசோமா பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் இதன் மாதிரி இனமாக திமாலியா கைபோலூகா பிராங்க்ளின் 1831 என நியமித்தார்.[1] இந்த உயிரலகு இப்போது மஞ்சள்-கண் சிலம்பனின் துணையினங்களுள் ஒன்றாகும்.[2][3][4] பேரினப் பெயர் பண்டைய கிரேக்கச் சொல்களான குருசோசு அதாவது "தங்கம்" மற்றும் ஓமா என்றால் "கண்" ஆகியவற்றை இணைக்கிறது.[5]

இப்பேரினம் இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[4]

படம் பொது பெயர் அறிவியல் பெயர் விநியோகம்
மஞ்சள் கண் சிலம்பன் கிரைசோமா சையென்சி பர்மா, லாவோஸ், தாய்லாந்து.
செருடன் சிலம்பன் கிரைசோமா அல்டிரோசுட்ரே நேபாளம் முதல் வடகிழக்கு இந்தியா வரை

செம்பழுப்பு வால் சிலம்பன் முன்பு இந்த பேரினத்தில் வைக்கப்பட்டது, ஆனால் இது ஒற்றைச் சிற்றின பேரினமான மௌபினியாவுக்கு மாற்றப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Edward Blyth (1843). "Revision of previous Reports of the Society". Journal of the Asiatic Society of Bengal 12 (134): 167-182 [181]. https://www.biodiversitylibrary.org/page/40057550. 
  2. Ernst Mayr; Paynter, Raymond A. Jr, தொகுப்பாசிரியர்கள் (1964). Check-List of Birds of the World. 10. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. பக். 327. https://www.biodiversitylibrary.org/page/14486516. 
  3. The Howard & Moore Complete Checklist of the Birds of the World. 2: Passerines (4th ). Eastbourne, UK: Aves Press. 2014. பக். 512. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9568611-2-2. 
  4. 4.0 4.1 4.2 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2023). "Sylviid babblers, parrotbills, white-eyes". IOC World Bird List Version 13.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 11 August 2023.
  5. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2501-4. https://archive.org/stream/Helm_Dictionary_of_Scientific_Bird_Names_by_James_A._Jobling#page/n105/mode/1up. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரைசோமா&oldid=3806999" இலிருந்து மீள்விக்கப்பட்டது