கிரிகோர் வென்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிகோர் வென்சல்
பிறப்பு(1898-02-17)17 பெப்ரவரி 1898
தியூசல்டோர்ஃபு, செருமானியப் பேரரசு
இறப்பு12 ஆகத்து 1978(1978-08-12) (அகவை 80)
அஸ்கோனா, சுவிட்சர்லாந்து
தேசியம்ஜெர்மனி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்
லீப்சிக் பல்கலைக்கழகம்
சூரிக் பல்கலைக்கழகம்
சிக்காகோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கிரிப்ஸ்வால்டு பல்கலைக்கழகம்
மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்அர்னால்ட் சோமர்ஃபெல்ட்
அறியப்படுவதுகுவாண்டம் புலக்கோட்பாடு
விருதுகள்மேக்ஸ் பிளாங்க் பதக்கம் (1975)

கிரிகோர் வென்சல் (Gregor Wentzel) (17 பிப்ரவரி 1898 - 12 ஆகஸ்ட் 1978) குவாண்டம் இயக்கவியலின் வளர்ச்சிக்காக அறியப்பட்ட ஒரு ஜெர்மன் இயற்பியலறிஞர் ஆவார். எக்சு-கதிர், நிறமாலையியல் ஆகிய துறைகளில் இவர் பங்களித்தார். ஆனால் பின்னர் [குவாண்டம் இயங்கியல், குவாண்டம் மின்னியக்க திசை, மேசான் கோட்பாடு ஆகிய மூன்ற வகைகளை உள்ளடக்கி விரிவுபடுத்தினார்.[1][2][3][4]

வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஜெர்மனியின் தியூசல்டோர்ஃபு நகரில் ஜோசப் மற்றும் அன்னா வென்ட்செல் ஆகியோரின் நான்கு குழந்தைகளில் முதல் குழந்தையாகப் பிறந்தார். 1929ல் அண்ணா ஆனி போலிமேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு டொனாட் வென்ட்செல் என்ற குழந்தை பிறந்தது. இவரும் அன்னியும் 1970 இல் சுவிட்சர்லாந்தின் அஸ்கோனாவுக்குத் திரும்பும் வரை குடும்பம் 1948 இல் அமெரிக்காவில் இருந்தது.

தொழில்[தொகு]

வென்ட்செல், 1916ம் ஆண்டு ஃப்ரீ பர்க்கில் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியல் படிப்பைத் தொடங்கினார். பின்னர் 1917 மற்றும் 18ம் ஆண்டில் இராணுவ படைகளில் பணியாற்றி முதல் உலகப் போருக்குச் சென்றார். பின்னர் 1919ல் கிர்ப்ஸ் வால்டு பல்கலைகக்ழகத்தில் தனது படிப்பை மீண்டும் தொடங்கினார். பிறகு 1920ல் மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைகழகத்தில் மீண்டும் படிக்க ஆரம்பித்தார். 1921 இல் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.[5]

இவருடைய இயற்பியல் கோட்பாடுகள்

  • கிளாசிக்கல் அணுகுமுறை
  • கட்ட ஒருங்கிணைந்த முறை

1928ல் இயற்பியல் கோட்பாடு பேராசிரியாராக சூரிக் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். வென்ட்சல் மற்றும் வூல்ப்காங் பவுலி இருவரும் சேர்ந்து, கோட்பாட்டு இயற்பியலுக்கான மையமாக சூரிக்கின் நற்பெயரை உருவாக்கினர். 1948ல் வென்சல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். 1970ல் ஓய்வு பெற்றால். தனது ஓய்வு நாளை சுவிட்சர்லாந்தில் செலவிட்டார். 1975ல் மேக்ஸ் பிளாங்க் பதக்கம் இவருக்கு கிடைத்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mehra. Volume 1, Part 1, 2001, p. 356.
  2. Gregor Wentzel பரணிடப்பட்டது 2009-11-09 at the வந்தவழி இயந்திரம் – ETH Bibliothek.
  3. Jungnickel. Volume 2, 1990, p. 368.
  4. Valentine Telegdi (November 1978). "Obituary: Gregor Wentzel". Physics Today 31 (11): 85–86. doi:10.1063/1.2994844. Bibcode: 1978PhT....31k..85T. http://www.physicstoday.org/resource/1/phtoad/v31/i11/p85_s2?bypassSSO=1. 
  5. Dissertation title: Zur Systematik der Röntgenspekten.

மேலும் படிக்க[தொகு]

  • Peter G. O. Freund, Charles J. Goebel, and Yoichiro Nambu, Editors. Quanta: Collection of Papers Dedicated to Gregor Wentzel. University of Chicago Press, 1970.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிகோர்_வென்சல்&oldid=3706136" இருந்து மீள்விக்கப்பட்டது