உள்ளடக்கத்துக்குச் செல்

கிரண் நகார்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரண் நகார்கர்
2013 – செருமனியில் லைப்சிக் புத்தகக் கண்காட்சியில்
2013 – செருமனியில் லைப்சிக் புத்தகக் கண்காட்சியில்
தொழில்புதின எழுத்தாளர்
நாடக ஆசிரியர்
திரைக்கதை எழுத்தாளர்
இலக்கிய இயக்கம்இந்திய இலக்கியங்கள்
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது,
செருமானிய கூட்டாட்சிக் குடியரசின் தகுதித் தரநிலை விருது
துணைவர்துள்சி வத்சல்
இணையதளம்
kirannagarkar.com

கிரண் நகார்கர் (Kiran Nagarkar) (2 ஏப்ரல் 1942 - 5 செப்டம்பர் 2019) ஒரு இந்திய நாவலாசிரியரும், நாடக ஆசிரியரும் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இந்திய ஊடகங்களில் புகழ்பெற்ற நாடக மற்றும் திரைப்பட விமர்சகருமான நாகர்கர் காலனித்துவத்திற்கு பிந்தைய இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.[1]

இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் சாத் சக்கம் ட்ரெச்சாலிஸ் (1974), ராவண் மற்றும் எட்டி (1994) ஆகியவை ஆகும். குக்கோல்ட் (1997) என்றழைக்கப்படும் அவரது நூல் 2001 ஆம் ஆண்டுக்கான ஆங்கிலத்திற்கான சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்றுள்ளது.[2] இவரது ஆங்கிலப் புதினங்கள் ஜெர்மன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டு செருமனியின் கூட்டாட்சிக் குடியரசு தகுதிமிகு தர மனிதருக்கான விருதினை வழங்கியது.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

நகார்கர் ஏப்ரல் 2, 1942 அன்று பம்பாயில் ஒரு நடுத்தர வர்க்க மராத்தியக் குடும்பத்தில் பிறந்தார். சுலோச்சனா மற்றும் கமல்காந்த் நாகர்கரின் இரு மகன்களில் இவர் இளையவர் ஆவார்.[4][5] அவரது தாத்தா, பி.பி.நாகர்கர், ஒரு பிரம்ம சமாஜத்தைச் சார்ந்தவராக இருந்தார். மேலும் 1893 ஆம் ஆண்டில் சிகாகோவில் நடந்த உலக சமயங்களின் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டார்.[6] புனேவில் உள்ள பெர்குசன் கல்லூரி மற்றும் மும்பையில் உள்ள SIES கல்லூரியில் படித்தார் .[7][8] 1964 இல் இளங்கலைப் பட்டமும், 1967 இல் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அதன்பிறகு, விளம்பர நகல் எழுத்தாளராக 15 ஆண்டுகள் பணியாற்றினார்.

தொழிலதிபர் ஆனந்த் மேத்தாவின் சகோதரியான துளசி வட்சலை அவர் திருமணம் செய்து கொண்டார்.[7][9] விநாயக சதுர்த்தி திருவிழா கொண்டாட்டத்தின் போது நண்பர் ஒருவருடன் இருக்கும் போது மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டதால், நாகர்கர், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் இரண்டு நாட்கள் கோமாவில் இருந்தார். 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று இறந்தார்.

புதினங்கள்

[தொகு]

நகார்கர் இந்திய எழுத்தாளர்களிடையே ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் புதினங்கள் எழுதியமைக்காக பாராட்டப்பட்ட எழுத்தாளர் ஆவார். இவருடைய முதல் புதினமான , சாட் சக்கம் ட்ரெச்சாலிஸ் 1974 ஆம் ஆண்டு மராத்திய மொழியில் எழுதப்பட்டது. இநதப் புதினம், 1980 ஆம் ஆண்டில் சுபா ஸ்லீ என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, 1995 ஆம் ஆண்டில் செவன் சிக்சஸ் ஆர் ஃபார்ட்டி திரீ என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டது. இந்த நாவல் மராத்தி இலக்கியத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.[10] இவருடைய புதினமான இராவண் அண்ட் எட்டி, மராத்திய மொழியில் தொடங்கபப்பட்டு ஆங்கிலத்தில் முடிக்கப்பட்டது. ஆங்கிலப் புதினமானது 1994 ஆம் ஆண்டு வரை பதிப்பிக்கப்படாமல் இருந்தது.[11] இராவண் அண்ட் எட்டி தொடங்கி நகார்கரின் அனைத்துப் புதினங்களும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. இவருடைய அனைத்துப் புதினங்களும் இடாய்ச்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.[12]

இவருடைய மூன்றாவது புதினமான, குக்கோல்ட் அகநிலை உணர்வு பெற்ற மீராபாயின் கணவர் போஜ் ராஜ் பற்றிய புதினம் 1997 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்தப் புதினம் 2001 ஆம் ஆண்டு விருது சாகித்ய அகாதமி விருதினை வென்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sanga, p. 177
  2. Sahitya Akademi Awards 1955–2007: English பரணிடப்பட்டது 11 சூன் 2010 at the வந்தவழி இயந்திரம் Sahitya Akademi Official website.
  3. Staff writer (7 November 2012). "Germany confers Cross of Order of Merit, to Babasaheb Kalyani, Kiran Nagarkar". ANI. Archived from the original on 9 November 2012. பார்க்கப்பட்ட நாள் 18 February 2013.
  4. "Kiran Nagarkar: God's little soldier". rediff.com. 2 May 2006. http://specials.rediff.com/news/2006/may/02kiran1.htm. பார்த்த நாள்: 6 September 2019. 
  5. "Kiran Nagarkar, Novelist Who Chronicled Mumbai Life, Dies at 77". The New York Times. 11 September 2019. https://www.nytimes.com/2019/09/11/books/kiran-nagarkar-dead.html. பார்த்த நாள்: 19 September 2019. 
  6. "Unapologetically Nagarkar". Harmony Magazine. https://www.harmonyindia.org/people_posts/unapologetically-nagarkar/. பார்த்த நாள்: 6 September 2019. 
  7. 7.0 7.1 "Sahitya Akademi Award-winning writer Kiran Nagarkar dies at 77". The Hindu. 6 September 2019. https://www.thehindu.com/news/national/sahitya-akademi-awardee-novelist-kiran-nagarkar-dead/article29344962.ece. பார்த்த நாள்: 6 September 2019. 
  8. "Sahitya Akademi awardee novelist Kiran Nagarkar dead". Mint. 5 September 2019. https://www.livemint.com/news/india/sahitya-akademi-awardee-novelist-kiran-nagarkar-dead-1567707443501.html. பார்த்த நாள்: 6 September 2019. 
  9. "Humour and honours" (in en). Ahmedabad Mirror. 12 November 2012. https://ahmedabadmirror.indiatimes.com/ahmedabad/cover-story/humour-and-honours/articleshow/36085910.cms. பார்த்த நாள்: 6 September 2019. 
  10. "Unapologetically Nagarkar, Harmony Magazine". பார்க்கப்பட்ட நாள் 6 September 2019.
  11. "'The terrorist is inside us'". The Tribune. 15 April 2006 இம் மூலத்தில் இருந்து 5 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605230813/http://www.tribuneindia.com/2006/20060415/saturday/main1.htm. 
  12. "Kiran Nagarkar - The born storyteller no more" (in en). mid-day. 6 September 2019. https://www.mid-day.com/articles/the-born-storyteller-no-more/21686010. பார்த்த நாள்: 7 September 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_நகார்கர்&oldid=3931643" இலிருந்து மீள்விக்கப்பட்டது