கியூரியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியூரியம்(III) அயோடைடு
Curium(III) iodide
பெயர்கள்
வேறு பெயர்கள்
கியூரியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
14696-85-6
InChI
 • InChI=1S/Cm.3HI/h;3*1H/q+3;;;/p-3
  Key: UVXBBRRWLDYFRE-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101943143 (charge error)
 • [I-].[I-].[I-].[Cm+3]
பண்புகள்
CmI3
வாய்ப்பாட்டு எடை 627.71 g·mol−1
தோற்றம் வெண் படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கியூரியம்(III) அயோடைடு (Curium(III) iodide) CmI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். கியூரியம் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3] கியூரியத்தின் அனைத்து ஓரிடத்தான்களும் செயற்கையாக மட்டுமே தயாரிக்கப்படுவதால், இச்சேர்மம் இயற்கையில் தோன்றுவதில்லை.

தயாரிப்பு[தொகு]

தனிமநிலை கியூரியமும் அயோடினும் சேர்ந்து வினைபுரிந்தால் கியூரியம்(III) அயோடைடு உருவாகிறது.[4]

2Cm + 3I2 → 2CmI3

கியூரியம்(III) குளோரைடு சேர்மத்துடன் அமோனியம் அயோடைடு வினைபுரிவதாலும் கியூரியம்(III) அயோடைடு உருவாகிறது:[5][6]

CmCl3 + 3NH4I → CmI3 + 3NH4Cl

இயற்பியல் பண்புகள்[தொகு]

கியூரியம்(III) அயோடைடு என்பது Cm3+ மற்றும் I அயனிகளைக் கொண்ட நிறமற்ற அயனிச் சேர்மமாகும். ஓர் அலகு செல்லிற்கு ஆறு அலகுகள் கொண்டு அணிக்கோவை அளவுருக்கள் a = 744 பைக்கோமீட்டர் மற்றும் c = 2040 பைக்கோமீட்டர் உடன் R3 என்ற இடக்குழுவில் (எண். 148) அறுகோண படிக அமைப்புடன் வெள்ளை நிற படிகங்களாக உருவாகிறது. இதன் படிக அமைப்பு பிசுமத்(III) அயோடைடுடன் ஒத்த சமநிலையில் உள்ளது. [5][7]

மேற்கோள்கள்[தொகு]

 1. Lumetta, Gregg J.; Thompson, Major C.; Penneman, Robert A.; Eller, P. Gary (2006). "Curium". The Chemistry of the Actinide and Transactinide Elements (in ஆங்கிலம்). Springer Netherlands. pp. 1397–1443. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/1-4020-3598-5_9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3598-2. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
 2. Brown, David; Canterford, J. H.; Colton, Ray (1968). Halides of the Transition Elements: Halides of the lanthanides and actinides, by D. Brown (in ஆங்கிலம்). Wiley. p. 260. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-10840-6. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
 3. "WebElements Periodic Table » Curium » curium triiodide". winter.group.shef.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
 4. Seaborg, G. T.; James, R. A.; Ghiorso, A. (1949). "The Transuranium Elements". Science (McGraw-Hill) 104 (2704): 1554–1571. https://www.jstor.org/stable/1675046. பார்த்த நாள்: 3 July 2023. 
 5. 5.0 5.1 Asprey, L. B.; Keenan, T. K.; Kruse, F. H. (July 1965). "Crystal Structures of the Trifluorides, Trichlorides, Tribromides, and Triiodides of Americium and Curium" (in en). Inorganic Chemistry 4 (7): 985–986. doi:10.1021/ic50029a013. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50029a013. பார்த்த நாள்: 3 July 2023. 
 6. Koch, Günter (5 October 2013). Transurane: Teil C: Die Verbindungen (in ஜெர்மன்). Springer-Verlag. p. 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-11547-3. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
 7. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3046. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூரியம்(III)_அயோடைடு&oldid=3758128" இலிருந்து மீள்விக்கப்பட்டது