உள்ளடக்கத்துக்குச் செல்

கியாகோமோ காசநோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியாகோமோ காசநோவா
ஓவியர் அலெசாண்ட்ரோ லாங்கி வரைந்த காசநோவாவின் ஓவியம், அண். 1774
பிறப்பு(1725-04-02)2 ஏப்ரல் 1725
வெனிசு, வெனிசு குடியரசு (நவீன இத்தாலி)
இறப்பு4 சூன் 1798(1798-06-04) (அகவை 73)
பொகேமியா, புனித உரோமைப் பேரரசு (நவீன செக் குடியரசு)
பெற்றோர்
  • கேடானோ கியூசெப்பே காசநேவா
  • சனெட்டா பாருஸி

கியாக்கோமோ கிரோலாமோ காசநோவா (Giacomo Girolamo Casanova[1][2][3] (ஏப்ரல் 2,1725-ஜூன் 4,1798) ஒரு இத்தாலிய சாகச வீரரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.[4][5] ஹிஸ்டரி டி மா விய் (எனது வாழ்க்கைக் கதை) என்ற இவரது சுயசரிதை 18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின் சமூக வாழ்க்கையின் பழக்க வழக்கங்கள் மற்றும் விதிமுறைகளைப் பற்றிய மிகுந்த நம்பத்தகுந்த மூலாதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[6]

எழுத்துப் பணி

[தொகு]

காசநோவா, பரோன் அல்லது பரூசி கவுண்ட் அல்லது செவாலியர் டி சீன்கால்ட் போன்ற புனைப்பெயர்களைப் பயன்படுத்தி எழுதி வந்தார்.[7] வெனிசிலிர்நுது இரண்டாவது முறையாக நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவர் பிரான்சிய மொழி மொழியில் எழுதத் தொடங்கிய பிறகு, அடிக்கடி "ஜாக் காசநோவா டி சீன்கால்ட்" என்ற பெயரில் எழுதினார். இவர் ஐரோப்பிய அரச குடும்பத்தினர், திருத்தந்தையர்கள் மற்றும் கர்தினால்கள், வோல்ட்டயர், கேத்தே மற்றும் மொசார்ட் போன்றவர்களுடன் நெருங்கி பழகியதாகவும் அறியப்படுகிறது.[a]

பெண்களுடனான இவரது தொடர்புகளுக்காக இவர் மிகவும் பிரபலமானார்.[8] இவரது இறுதி ஆண்டுகள் செக் குடியரசிலுள்ள போகேமியாவின் கவுண்ட் வால்ட்ஸ்டீன் எனுமிடத்தில் ஒரு வீட்டிலுள்ள நூலகத்தில் கழித்தன. அங்கு தனது சுயசரிதையையும் எழுதினார்.

இளமை வாழ்க்கை

[தொகு]

கியாகோமோ கிரோலாமோ காசநோவா வெனீசிசில் 1725 ஆம் ஆண்டில் நடிகை சனெட்டா பாருஸி, நடிகர் மற்றும் நடனக்கலைஞர் கேடானோ கியூசெப்பே காசநோவாவின் ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார். [9]

இவரது காலத்தில் வெனிசு குடியரசு அதன் உச்சபட்ச நாவற்படை மற்றும் வணிக சக்தியினை கடந்து சென்றிருந்தது. பதிலாக வெனிசு ஐரோப்பாவின் இன்பத் தலைநகரமாக தழைத்தோங்கியிருந்தது. அரசியல் மற்றும் மத பழமைவாதிகளின் ஆட்சியிலிருந்தது அவர்கள் சமூக தீமைகளையும் சகித்துக்கொண்டு சுற்றுலாவை ஊக்குவித்தனர். நீண்ட சுற்றுப்பயணத்தின்போது குறிப்பாக இளம் ஆண்களுக்கு வெனிசு ஒரு ஓய்வெடுக்கும் இடமாக இருந்தது. பிரபலமான திருவிழா, சூதாட்ட விடுதிகள், அழகிய பணிப்பெண்கள் ஆகியவையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்தச் சூழல் இவருக்குப் பல வடிவ அனுபவங்களை அளித்தது.[10]

ஒரு நடிகையாக இருந்ததால் தாய் நாடக குழுவோடு ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். இவர் தனது பாட்டியால் வளர்க்கப்பட்டார். இவருக்கு எட்டு வயதாக இருந்தபோது இவரது தந்தை இறந்துவிட்டார். ஒன்பதாவது வயதில் பாதுவாவிலிருந்த பெருநிலப்பகுதியின் ஒரு தங்கும் இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். காசநோவாவைப் பொறுத்தவரை, இவரது தாயாரின் புறக்கணிப்பு ஒரு கசப்பான நினைவாக இருந்தது.[10]

விடுதி வாழ்க்கை

[தொகு]

விடுதி இல்லத்தின் நிலைமைகள் மோசமானதாக இருந்தன. அதனால், முதன்மை ஆசிரியர் அப்பே கோஸியின் கவனிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டினார். அவர் காசநோவாவிற்கு கலைக்கழகம் சார்ந்த பாடங்களையும் வய்லினையும் கற்பித்தார். பின்னர், காசநோவா அப்பே கோஸியின் குடும்பத்தினருடன் தங்கவைக்கப்பட்டார். தனது இளமைக் காலம் முழுவதும் அங்கேயே கழித்தார்.[11] இவருகு 11 வயது இருக்கும்போது கோஸியின் தங்கை பெட்டினா இவரை காதலித்தார். பின்னர் பெட்டினா வேறொருவரை திருமணம் செய்து கொண்டாலும், காசநோவா பெட்டினாவுடன் வாழ்நாள் முழுவதும் பிணைப்பைப் பேணி வந்தார்.[12]

பாதுவா பல்கலையில் பன்னிரெண்டாம் வயதில் நுழைந்த காசநோவா தனது பதினேழாம் வயதில் 1742 இல், சட்டத்தில் பட்டம் பெற்றார். இவர் ஒரு திருச்சபை வழக்கறிஞராக வருவார் என்று இவரது பாதுகாவலர் கோஸி நம்பினார்.[11] காசநோவா தார்மீக தத்துவம், வேதியியல் மற்றும் கணிதத்தையும் படித்திருந்தார். மேலும் மருத்துவத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.[13][14] பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, காசநோவா சூதாடத் தொடங்கினார். விரைவில் கடனில் மூழ்கினார். இதனால் இவரது பாட்டி இவரை வெனிசுக்கு திரும்ப அழைத்துக் கொண்டார். ஆனாலும் சூதாட்டப் பழக்கத்தில் உறுதியாக இருந்தார்.

பிற்கால வாழ்க்கை

[தொகு]

வெனிசில், காசநோவா தனது சட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். தனது பல்கலைக்கழக படிப்பைத் தொடர பாதுவாவுக்கு அடிக்கடி சென்று வந்தார். தனது வீட்டிற்கு அருகில் உள்ள 76 வயதான வெனிஸ் நகர் மன்ற உறுப்பினர் அல்விஸ் காஸ்பரோ மாலிபியேரோ என்பவருடன் தொடர்பு கொண்டார். [15] மாலிபியரோ இவருக்கு சமூகத்தில் எப்படி நடந்துகொள்வது என்பது பற்றி நிறைய கற்றுக்கொடுத்தார்.[12] பெண்களைப் பற்றிய காசநோவாவின் ஆர்வம் காரணமாக 14 மற்றும் 16 வயதான நானெட்டா மற்றும் மார்டன் சவோர்கனன் ஆகிய இரண்டு சகோதரிகளுடன் இவரது முதல் முழுமையான பாலியல் அனுபவத்திற்கு வழிவகுத்தது. [16]

காசநோவாவின் பாலியல் ஆர்வம் இவரது தேவாலய வாழ்க்கையிலிருந்து வெளியேற வழிவகுத்தது.[17] பின்னர் உரோமில் ஒரு எழுத்தாளராக ஒரு வேலையைப் பெற்றார். புதிய தொழில் வாழ்வைத் தேடிய காசநோவா வெனிசு குடியரசில் இராணுவ அதிகாரியாக முயற்சி செய்தார். கோர்ஃபு தீவில் இருந்த வெனிசு படைப்பிரிவில் சேர்ந்தார். ஆனாலும் தனது முன்னேற்றம் மிகவும் மெதுவாக இருப்பதைக் கண்டறிந்த இவர், விரைவில் தனது இராணுவ வாழ்க்கையை கைவிட்டு வெனிசுக்குத் திரும்பினார்.

இசைக்கலைஞர்

[தொகு]

21 வயதில், இவர் ஒரு தொழில்முறை சூதாட்டக்காரராக மாறத் தொடங்கினார். இதனால் தன்னிடமிருந்த அனைத்து பணத்தையும் இழந்தார். பின்னர் ஒரு இசைக்கலைஞராக வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

ஒரு இசைக்கலைஞராகவும் மகிழ்ச்சியடையாத காசநோவா, ஒரு சமயம் வெனிசின் நகரமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அவரை காப்பாற்றினார். நகரமன்ற உறுப்பினர் தனது நோயிலிருந்து மீண்டார். இவரது மருத்துவ அறிவின் காரணமாக காசநோவாவை தனது வீட்டிற்கு அழைதுச் சென்றார். மேலும் வாழ்நாள் முழுவதும் இவரை ஆதரித்தார்.[18]

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவரது ஆதரவின் கீழ், பெயரளவில் ஒரு சட்ட உதவியாளராக பணிபுரிந்த காசநோவா, ஒரு பிரபுவின் வாழ்க்கையை வழிநடத்தினார். அற்புதமாக ஆடை அணிந்திருந்தார், அவருக்கு இயல்பானதைப் போலவே, சூதாட்டத்திலும், காதல் முயற்சிகளிலும் தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்.[19] இதன் காரணமாக நகரமன்ற உறுப்பினர் இவரை எச்சரித்தார். இதனால் சிறு காலத்திற்குப் பிறகு, காசநோவா வெனிசை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் இவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. தனது எதிரி ஒருவரை பழிவாங்குவதற்காக புதைக்கப்பட்ட ஒரு பிணத்தை தோண்டி எடுத்திருந்தார். ஒரு இளம் பெண் இவர் மீது பாலியல் குற்றம் சாட்டினார்.  காஸநோவா பின்னர் ஆதாரங்கள் இல்லாததால் இந்த குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் இவர் ஏற்கனவே வெனிசிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டார்.

அவமதிப்பிற்கும், மனச்சோர்வுற்றும் இருந்த காசநோவா வெனிசுக்கு மீண்டும் திரும்பினார். ஒரு நல்ல சூதாட்டத்திற்குப் பிறகு, பெரிய பயணம் மேற்கொண்ட இவர்1750 இல் பாரிஸை அடைந்தார்.[20] லியோனில் இவர் விடுதலைக் கட்டுநர் சமூகத்தில் நுழைந்தார். இந்த இரகசிய கூட்டமைப்பின் சடங்குகளில் ஆர்வம் கொண்டார்.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. He always signed his Italian works as simply "Giacomo Casanova" since nobiliary particles were never used in Venice and everybody knew he was Venetian.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Casanova". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. Retrieved 1 June 2019.
  2. "Casanova". Collins English Dictionary. HarperCollins. Retrieved 1 June 2019.
  3. "Casanova, Giovanni Jacopo" (US) and "Casanova, Giovanni Jacopo".. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 
  4. "Giacomo Casanova | Italian adventurer". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்.
  5. "CASANOVA, Giacomo in "Dizionario Biografico"".
  6. Zweig, Paul (1974). The Adventurer. New York: Basic Books. p. 137. ISBN 978-0-465-00088-3.
  7. Casanova, Histoire de ma vie, Gérard Lahouati and Marie-Françoise Luna, ed., Gallimard, Paris (2013), Introduction, p. xxxvii.
  8. I. Gilbert (PM, PDDGM). "Giovanni Giacomo Casanova: libertine, gambler, spy, statesman, freemason" (PDF). chicagolodge.org (in ஆங்கிலம்). Archived from the original (PDF) on April 2, 2017. Retrieved Sep 20, 2018.
  9. Childs 1988, ப. 3.
  10. 10.0 10.1 Casanova (2006). History of My Life. New York: Everyman's Library. page x. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-307-26557-9
  11. 11.0 11.1 Masters 1969, ப. 15.
  12. 12.0 12.1 Childs 1988, ப. 7.
  13. Casanova (2006), p. 64.
  14. Childs 1988, ப. 6.
  15. Masters 1969, ப. 15–16.
  16. Masters 1969, ப. 19.
  17. Masters 1969, ப. 34.
  18. Masters 1969, ப. 54.
  19. Childs 1988, ப. 41.
  20. Masters 1969, ப. 77.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியாகோமோ_காசநோவா&oldid=4240892" இலிருந்து மீள்விக்கப்பட்டது