உள்ளடக்கத்துக்குச் செல்

கித்தாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கித்தாப்
கதை
  1. ரபீக் மங்கலாச்சேரி
வெளியீட்டு திகதி2018 November (2018 November)
வெளியீட்டு இடம்வடகரை (கேரளம், இந்தியா)
மொழிமலையாளம்
மையம்முஸ்லீம் பெண்களின் பாலினச் சமனிலை
கருப்பொருள்நகைச்சுவை

கித்தாப் (Kithaab) இது மலையாள மொழியில் நகைச்சுவையாக எழுதப்பட்ட ஒரு நாடகமாகும். பாங்கு சத்தம் தன்னை அழைக்குமென்ற கனவோடு இருக்கின்ற ஒரு பெண்ணின் கதையாகும். பாங்கு என்பது ஒரு முஸ்லீம் ஆண் அல்லது முக்ரி மூலம் சாதாரணமாக ஓதப்படும் இஸ்லாமிய வழிபாட்டு அழைப்பாகும். தனது இஸ்லாமிய சமூகத்தில் பெண்களின் மேல் நடக்கும் அடக்கு முறைகளை , அவர்களின் அடிமைத்தனத்தை கேள்வி கேட்கிறாள்.. அவள் தனது தோழிகளுடன் நடனமாடியதால் அவளுக்கு உணவு மறுக்கப்படுவது போன்ற இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் அடக்கு முறைகளுக்கு எதிராக பாங்கு அழைக்க வாய்ப்பு கோரும் புதினமாகும்.[1][2]

இந்த நாடகம் எழுத்தாளர் மற்றும் இயக்குனருமான ரபீக் மங்கலாச்சேரியால் எழுதப்பட்டது.[3][4][5] 2018 நவம்பர் மாதம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் வெளிவந்தது. பெண்களின் உரிமைகள் இயக்கம் முன்னெடுத்துச் சென்ற சபரிமலை கோவிலில் வழிபாடு செய்யும் உரிமையை பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்பதையும், இஸ்லாமிய பெண்கள் உரிமையான தங்கள் மத சடங்குகளில் பெண்கள் பங்கேற்கவும், மதச்சார்பான இடங்களில் பாலினச் சமனிலையை நிலைநாட்டவும், இஸ்லாமிய பெண்கள் இமாமாக நியமனம் செய்வது உட்பட, மேலும், மசூதிகளில் பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தும் உரிமையையும் வலியுறுத்துகிறது..[1]

அகத் தூண்டுதல்

[தொகு]

ரபீக் மங்கலாசேரி தனது நாடகமான "கிதாப்" நேரடியாக "வாங்கு" என்ற கதையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்கிறார், ஆனால் "உண்ணி. ஆர்" கதையான '"வாங்கு"விலிருந்து தூண்டப்பட்ட ஒரு சுயாதீனமான தழுவலாகும். "உண்ணி. ஆர்" மங்கலாச்சேரியின் நாடகத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார், அது அவரது கருத்துக்களுக்கு இசைவாக இல்லை என்றும், ஆன்மீக மதிப்பும் குறைவாகவுள்ளது என்றும் கூறியுள்ளார்.[6] மலையாள இயக்குநர் வி. கே. பிரகாஷிற்கு உண்ணியின் கதையான வாங்குவை திரைப்படமாக எடுக்கும் திட்டம் இருந்தது.[7]

கதை

[தொகு]

ஒரு முஸ்லிம் பெண் தனது தந்தையை போல ஒரு மூஸென் ஆக விரும்புகிறாள், மேலும் பாங்கு அழைக்கவும் விரும்புகிறாள். அவள் வீட்டிலுள்ள ஆண்களுக்கு சமைக்கப்படும் வறுத்த மீன்களை அவள் திருடுகிறாள், ஆனால் அவ்வாறு செய்வது தவறல்ல என்று தன்னைப் படைத்த கடவுளுக்குத் தெரியுமென்று நம்புகிறாள். மேலும், பெண்களுக்கு போதுமான உணவை வழங்குவதில்லை என்பதை புரிந்துகொள்வார் என்றும் நினைக்கிறாள். இதற்காக அவளுடைய தந்தை அவளைக் குறை கூறுகிறார், பெண்களுக்கு ஆண்களுக்கான அனைத்திலிருந்தும் பாதியளவு மட்டுமே கிடைக்கும் என்று அவளிடம் கூறுகிறார். இதற்கு அவள், பெண்கள் ஏன் ஆண்கள் அணியும் ஆடையில் பாதியளவு அணியக்கூடாது என்று கேட்கிறாள்[8]

இந்த போராட்டத்தின்போது, அவள் பாங்கு அழைக்கும் செயலை விரும்புவதாக தந்தையிடம் தெரிவிக்கிறாள். அவளது தந்தை "கித்தாப்" என்ற பெரிய புத்தகத்திலுள்ள குறிப்புகளின் மூலம் அவளது கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், அவர் அவளை ஒரு அறையினுள் வைத்து பூட்டிவிட்டு சென்று விடுகிறார். மேலும், அவளது தந்தை அவள் இது போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் சொர்கத்தை அடைந்துவிட மாட்டாய் என்று அவளிடம் கூறுகிறார்.[8]

"நான் பாடுவதும், நடனமாடுவதும் சொர்க்கத்திற்குள் நுழைவதற்கு தடையாக இருந்தால், அந்த சொர்க்கத்தை நான் விரும்பவில்லை," என அவள் கூறுகிறாள். பள்ளியில் அவள் விருப்பத்திற்கு நடனமாடினால் அவளது தந்தை தனது பெண்ணை கொலை செய்யவும் தயாராக இருக்கிறார். அவளது தாயார் அவரிடம் அவர் மூஸின் மட்டுமல்ல, ஒரு மகளுக்குத் தந்தையாகவும் இருப்பதை நினைவுபடுத்துகிறாள், பின்னர் அவர் அந்த பெண்ணை பாங்கு அழைக்க அனுமதிக்கிறார். அந்த முஸ்லிம் பெண் பாங்கு அழைப்பதும் அவர்கள் வழிபடுவதுமாக நாடகம் முடிகிறது.[8]

சர்ச்சை

[தொகு]

கோழிக்கோடு மேமுன்டா மேல்நிலைப் பள்ளி வடகரையில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் இந்த நாடகத்தை அரங்கேற்றியது. இது மாவட்ட அளவிலான சிறந்த நாடகத்திற்கும் சிறந்த நடிப்பிற்குமான பரிசுகளை வென்றது, மேலும் கேரளா மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையே நடைபெறவுள்ள போட்டிகளுக்கு தொடர்ந்து செல்ல வேண்டியிருந்தது. "கிதாப்"' பாரம்பரிய முஸ்லீம் குடும்பத்தின் பெண்களுக்கு எதிராக ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை பேசியது. வீட்டில் உணவு வழங்கல், கல்வி வழங்குவதில் பாகுபாடு போன்றவையும் அடங்கும், மேலும் அவர்களிடையே நிலவும் பலதார திருமணத்தைப் பற்றியும் பேசியது.[9]

இஸ்லாமிய சூழலில் மத-அரசியல் , மரபுவழி மற்றும் பழமைவாதிகளின் நம்பிக்கை போன்றவற்றால் இந்நாடகமானது எதிர்க்கப்பட்டது, இருப்பினும் மேமுன்டா மேல்நிலைப் பள்ளியினால் இது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.[1][3] பாலினச் சமனிலை மற்றும் மத சகிப்புத்தன்மையையும் இந்நாடகம் பேசியது. பின்னர் ஒரு நாளில் நாடகம் தனியாகவும் நிகழ்த்தப்பட்டது.[10]

வாஹாபிஸம், "கித்தாபிலே கூரா" போன்ற கருத்துகளிலும், மத சுதந்திரத்தைப் பெற விரும்பும் பெண்களைப் பற்றியும் மலையாள நாடங்கங்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன . மலையாள சினிமா ஆர்வலர்களில் ஒருவரான அப்பாஸ் கலத்தோட் முஸ்லிம் சமுதாயத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாததற்காக, மங்கலாச்சேரியின் "கிதாப்"பை விமர்சித்தார். " சமூகத்திற்கு எதிராக மூக்ரியை சித்தரிக்கும் குறைபாடு இந்நடகத்தில் உள்ளது, ஏனென்றால் மற்ற எதிரிகளும் முஸ்லிம்களிடையே தோன்றியிருக்கின்றனர்," என்று அவர் கூறினார். மங்கலாச்சேரி இதை மறுத்து, முஸ்லிம் சமூகம் சமூக வாழ்வில் நிலையான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது என்று சொல்வது சரியல்ல என்று பதிலளித்தார்.

மற்ற சமூகங்களால் முஸ்லிம்களிடையே மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் முஸ்லீம் பிற்போக்கு சக்திகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பர்தா, இது கேரளாவில் புறக்கணிக்கத்தக்க சிறுபான்மையாக ஆனது. இது தற்போதைய முஸ்லிம் பெண்களின் அடையாளம் ஆகும் முஸ்லிம் மசூதியில் ஓர் ஊழியராக மட்டுமே இருப்பார் என்று எனக்கு தெரியும், ஆனால் அவர் முஸ்லிம்களையும்,அவர்களாது குருமார்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்நாடகம் முஸ்லிம் சமூகத்திற்கான புதிய காட்சிகளைத் திறந்து விடுகிறது."[11] இங்கே கதையின் பின்னணி ஒரு முஸ்லீம் குடும்பம், எனவே அது முஸ்லீம் வாழ்க்கையைச் சொல்கிறது. எந்த குறிப்பிட்ட மதத்தையும் அவமானப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என மங்கலாச்சேரி கூறுகிறார்.[3]

சமூக ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கே. சச்சிதானந்தன் மற்றும் ஹரீஷ் போன்றோர் கேரள மாநிலத் திருவிழாவில் "கிதாப்"பின் விலக்கலுக்கெதிராக குரல் எழுப்பினர். அவர்கள், இது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரானது இருவரும் இணைந்து கண்டனம் செய்தனர்.[5][6] ஒளிப்பதிவாளர் பிரதாப் ஜோசப் ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தை நடத்தி, அதில் நாடகத்தை திரும்பப் பெறுதல் என்பது "மறுமலர்ச்சி மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் ஆகியவற்றிற்கு அச்சுறுத்தல்" என்று கூறினார்.

நாடக ஆசிரியரான சாந்த குமார், "நாடகத்தை திரும்பப் பெறுதல் என்பது மதத் தலைவர்களின் கட்டளைகளுக்கு அப்பள்ளி சரணடைவதை உறுதி செய்கிறது" என்கிறார். மேலும், நாடக ஆசிரியரான "ரபீக் மங்கலாச்சேரியை தனிமைப்படுத்தியதாக அவர் புகார் கூறுகிறார், மேலும், "மறுமலர்ச்சி மதிப்புகள்" பற்றி பேசுகிறவர்கள் ஏன் "சிறுபான்மை அடிப்படைவாதத்தின் கைகளால் மங்கலாச்சேரியை தனிமைப்படுத்தும்போது மௌனமாக இருந்தனர்" என்று கேட்கிறார்.[5]

ரபீக் மங்கலாசேரி

[தொகு]

ரபீக் மங்கலாசேரி இந்தியாவிலுள்ள கேரளாவின் மலப்புறம் பகுதியைச் சேர்ந்த செட்டிப்பாடி என்ற ஊரைச் சார்ந்த மலையாள எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவரது நாடகமான "அன்னபூர்ணா" உணவுப்பொருட்களை வீணடிப்பதால், பலர் பசியால் வாடுவதை சித்தரிக்கின்றது.[12] "கோட்டம் கரீம்" என்ற நாடத்தையும் இயக்கியுள்ளார்.[3]

2013இல் "ஜின்னு கிருஷ்ணன்" நாடகத்திற்காக கேரள சாஹித்ய அகாடமி விருதினைப் பெற்றார்;[13][14] மற்றும் "இரட்ட ஜீவிதங்களிலூடே" என்ற நாடகத்திற்கு கேரள சங்கீத நாடக அகாடமி விருதினையும் பெற்றார்[15] அவர் குழந்தைகளுக்கான நாடக அரங்கில் ஒரு முக்கிய நபராக உள்ளார்.[16]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "In Kerala's Kozhikode, a play about a girl who dreams about giving azaan call has Muslim conservatives up in arms". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2019.
  2. "Kozhikode School Withdraws Play Calling out Gender Disparity After Muslim Groups Protest". The Wire. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 "Kozhikode: SDPI, MSF up in arms against Kithab". Deccan Chronicle. 25 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2019.
  4. "Play showing girl performing 'azaan' raises conservatives' ire". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2019.
  5. 5.0 5.1 5.2 Reporter, Staff; Jayanth, A. s (5 December 2018). "Campaign for Kithaab takes off". The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/cultural-activists-launch-campaign-for-kithaab/article25672943.ece. 
  6. 6.0 6.1 "Controversial play 'Kitab' dropped from Kerala school art festival". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2019.
  7. "Unni R short story Vanku to be adapted on screen by V K Prakash daughter Kavya Prakash Shabna Mohammed: വാങ്ക് വിളിക്കാൻ ആഗ്രഹിച്ച റസിയയുടെ കഥ സിനിമയാകുന്നു: ഉണ്ണി ആറിന്റെ കഥയ്ക്ക് ദൃശ്യഭാഷ്യമൊരുക്കാന്‍ രണ്ടു പെണ്‍കുട്ടികള്‍". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 17 சனவரி 2019.
  8. 8.0 8.1 8.2 "Following protests by Muslim groups Kozhikode school withdraws students play". thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2019. {{cite web}}: Italic or bold markup not allowed in: |website= (help)
  9. "After dropped by school Kalolsavam, 'Kithaab' to be staged across Kerala". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2019.
  10. "ക്ലബുകളും വായനശാലകളും സാംസ്കാരിക സംഘടനകളും ഏറ്റടുത്തു; ബാലസംഘവും ഡിവൈഎഫ്ഐയും നാടകം പ്..." marunadanmalayali.com. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2019. {{cite web}}: Italic or bold markup not allowed in: |website= (help)
  11. "Purdah phobia". Times of India Blog. 1 திசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 17 சனவரி 2019.
  12. Krishnakumar, G. (7 January 2018). "The show will go on, with aplomb". The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/the-show-will-go-on-with-aplomb/article22392357.ece. 
  13. "2013–ലെ കേരള സാഹിത്യ അക്കാദമി അവാര്‍ഡുകള്‍ പ്രഖ്യാപിച്ചു" (PDF). Kerala Sahitya Akademi. 20 December 2014. Archived from the original (PDF) on 13 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 18 January 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "Sahitya Akademi award for Meera's 'Aarachar'". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2019.
  15. Reporter, Staff (8 May 2018). "Beedi wins best short play award of akademi". The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/beedi-wins-best-short-play-award-of-akademi/article23816629.ece. 
  16. "Ennu Mammali Enna Indiakkaran". Archived from the original on 6 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கித்தாப்&oldid=4165523" இலிருந்து மீள்விக்கப்பட்டது