கிட்டப்பார்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிட்டப்பார்வை
Myopia.gif
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு ophthalmology
ICD-10 H52.1
ICD-9-CM 367.1
நோய்களின் தரவுத்தளம் 8729
MedlinePlus 001023
MeSH D009216
கிட்டப்பார்வை குழி வில்லைகளின் மூலம் சரி செய்யப்படுதல்.

கிட்டப்பார்வை எனப்படும் மையோபியா (Myopia) கண் வில்லையின் புற வளைவுப் பகுதி அதிகரிப்பதினாலும் கண்கோளம் நீட்சியுறுவதாலும் ஏற்படுகிறது. உட் செல்லும் ஒளிக்கதிர்கள் தேவைக்கு அதிகமாகச் சிதறலடையும் போது, ஒளிக்கதிர் விழித்திரைக்கு முன்னாலேயே குவிக்கப்படுகிறது. இதனால் பிம்பம் தெளிவற்றதாக உணரப்படுகிறது. இந்நிலை கிட்டப்பார்வை எனப்படும், ஏனெனில் தூரத்தில் உள்ள பொருட்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் சரியாக விழித்திரையின் மேல் குவிக்கப்பட இயலவில்லை. இந்நிலையைக் குழி வில்லைகளின் மூலம் சரி செய்யலாம். எவ்வாறு எனில் குழி வில்லையின் புறப்பகுதியின் வழியாக உள் செல்லும் ஒளிக்கதிர்கள் சற்றே விலக்கப்படுவதால் ஒளிச்சிதறலடைதலும் மாறுபாடு அடைகிறது. இம்மாற்றத்தினால் கிட்டப்பார்வை நிலையுடைய கண்ணில் ஒளி சரியான முறையில் விழித்திரையில் குவிக்கப்படுகிறது.

கண் மருத்துவர்கள் இக்குறைபாட்டினை பொருத்தமான குழிவில்லைகள் கொண்ட மூக்குக் கண்ணாடிகள் மூலமோ அல்லது தொடுவில்லைகள் மூலமோ சரிசெய்கின்றனர். அண்மைக்காலங்களில் அறிவியல் வளர்ச்சியால் சீரொளி உதவியுடன் குறைதிருத்த அறுவையும் மேற்கொள்ளப்படுகிறது; இவை தற்போது விலை உயர்ந்த சிகிச்சையாக இருப்பதாலும் சிகிச்சைக்குப் பிறகான சில சிக்கல்கள் எழ வாய்ப்பிருப்பதாலும் பரவலாகப் பயன்பாட்டில் இல்லை.

கிட்டப்பார்வைக்குத் தரப்படும் திருத்த வில்லைகளின் திறன் எதிர்ம எண்களில் குறிக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள் :[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்டப்பார்வை&oldid=2229304" இருந்து மீள்விக்கப்பட்டது