பார்வை அளவையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பார்வை அளவையியல் (Optometry) கண் ஆரோக்கியம் சார்ந்த துணை மருத்துவப் படிப்பு ஆகும். இது கண் நலன் மற்றும் பார்வை கூர்மை, பார்வையோடு இணைந்த மூளையின் ஆரோக்கியம், கண் கண்ணாடிகள், கண் பரிசோதனைகள், ஒளிக் கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பட்டப் படிப்பாக கருதப்படுகிறது. பார்வை அளவையியல் படித்தவர்கள் கண் பார்வை பரிசோதனை நிபுணர்கள் என அழைக்கப் படுகிறார்கள்.

கண் பார்வை பரிசோதனை நிபுணர்கள், கண் மருத்துவர்கள் அல்லர். கண் சார்ந்த மருத்துவர்கள் கண் மருத்துவர் (ophthalmologist) அல்லது கண் நரம்பியலாளர் அல்லது அறுவை மருத்துவர் (Eye Surgeon) எனப்படுவர்கள் கண் மருத்துவம் மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்ய சிறப்பு மருத்துவ பட்டப் படிப்பை படித்த மருத்துவர்கள் ஆவர். பார்வை பரிசோதனை நிபுணர்கள் கண் மருத்துவர்களுக்கு உதவிசெய்கிறார்கள். மேற்கண்ட படிப்பு கண் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்பாக கருதப்படுகிறது.

பார்வை அளவியல் பட்டப்படிப்பு[தொகு]

இந்தியாவில் பார்வை அளவியல் நான்கு ஆண்டுகள் படிக்கக்கூடிய பட்டப் படிப்பாக பல்வேறு பல்கலைக் கழகங்களால் வழங்கப் படுகிறது.[1] இது இரண்டு ஆண்டுகள் படிக்கக்கூடிய பட்டயப் படிப்பாகவும் வழங்கப் படுகிறது.

ஆப்டோமெட்ரி படிப்புகளுக்கான அங்கீகாரம்[தொகு]

ஆப்டோமெட்ரி இளம் நிலை ( B.optom) மற்றும் ஆப்டோமெட்ரி முதுநிலை (M.optom) ஆகிய படிப்புககள் பல்கலைக் கழக மானியக் குழுவால் (University Grants commission of India) அங்கீகரிக்கப் பட்டுள்ளன.[UGC / Specification of Degrees][1]அதுமட்டுமல்லாமல், இப்படிப்பை திறந்தநிலைப் பல்கலைக் கழங்களும் வழங்க ஏதுவாக தொலைக்நிலைக் கல்வி இயக்கக ( Directorate of Distance Education) அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. திறந்த நிலை வழி ஆப்டோமெட்ரி படிப்பை இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் வடிவமைத்து வழங்கி வருகிறது. ஆப்டோமெட்ரி துணை மருத்துவப் படிப்பாகையால், மருத்துவப் பல்கலைக் கழங்கங்கள் மட்டுமல்லாமல், பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு பல்கலைக் கழகத்தின் வாயிலாகவும் வழக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் 38 பல்கலைக் கழங்கள் வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்டோமெட்ரி கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

தமிழ் நாட்டில் பார்வை அளவியல் படிப்பை வழங்கும் பல்கலைக் கழகங்கள்[தொகு]

பின் வரும் பல்கலைக் கழகங்கள் ஆப்டோமெட்ரி பட்டப் படிப்பை அங்கீகரிகப்பட்ட கல்லூரிகள் மூலம் வழங்குகின்றன

 1. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம்
 2. பெரியார் பல்கலைக் கழகம், சேலம்
 3. அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி
 4. பாரதியார் பல்கலைக் கழகம், கோயமுத்தூர்.

மேற்கண்ட பல்கலைக் கழகங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் பல்கலைக் கழகங்கள் ஆகும். இதுமட்டுமல்லாமல் பின்வரும் பல்கலைக் கழகங்களும் மேற்கண்ட பட்டப் படிப்பை வழங்குகின்றன.

 1. இராமச்சந்திரா பல்கலைக் கழகம், சென்னை
 2. வினாயகா மிஷன் பல்கலைக் கழகம், சேலம்
 3. எஸ் ஆர் எம் பல்கலைக் கழகம், சென்னை

இந்திய அளவில், இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப் பட்ட கல்லூரிகள் வாயிலாகவும் தமிழகத்தில் ஆப்டோமெட்ரி படிப்புகள் வழங்கப் படுகின்றன.

தமிழக ஆப்டோமெட்ரி கல்லூரிகளின் பட்டியல்[தொகு]

 1. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, பிரகாஷ் இன்ஸ்டியூட் ஆப் ஆப்டோமெட்ரி, சென்னை
 2. வாசன் இன்ஸ்டியூட் ஆப் ஆப்தால்மாலஜி, சென்னை
 3. எலைட் ஸ்கூல் ஆப் ஆப்டோமெட்ரி, சங்கர நேத்தராலயா சென்னை
 4. எம் என் ஸ்கூல் ஆப் ஆப்டோமெட்ரி , சென்னை
 5. டாக்டர். ஆனந்த் காலேஜ் ஆப் ஆப்டோமெட்ரி மற்றும் பார்வை அறிவியல் கல்லூரி, சேலம்
 6. லோட்டஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி, கோயமுத்தூர்
 7. ஜோசப் ஸ்கூல் ஆப் ஆப்டோமெட்ரி , ஜோசப் கண் மருத்துவமனை , திருச்சி.
  • UGC Regulation of Degrees
  "https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வை_அளவையியல்&oldid=1754409" இருந்து மீள்விக்கப்பட்டது