காளை (திரைப்படம்)
காளை | |
---|---|
![]() | |
இயக்கம் | தருண் கோபி |
தயாரிப்பு | ஜீ.கே. பிலிம்ஸ் கார்பரேசன் |
இசை | ஜி.வி.பிரகாஷ் குமார் |
நடிப்பு | சிலம்பரசன் வேதிகா மீரா சோப்ரா சங்கீதா லால் சீமா சந்தானம் |
ஒளிப்பதிவு | நிரவ் சா |
வெளியீடு | ஜனவரி 14, 2008[1] |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ரூ. 45 மில்லியன் |
காளை (Kaalai) தருன் கோபி இயக்கத்தில் வேதிகா, மீரா சோப்ரா, சங்கீதா ஆகியோருடன் சிலம்பரசன் முக்கிய வேடத்தில் நடிக்க 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். ஜி. வி. பிரகாஷ் குமார் படத்துக்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக சென்னையில் இருந்து மதுரை, மோசமானவன், அகராதி போன்றப் பெயர்கள் இப்படத்துக்கு முன்மொழியப்பட்டன.
கதைச்சுருக்கம்
[தொகு]இத்திரைப்படத்தில் மூன்று காதாபாத்திரங்கள் ஜீவா என்ற பெயரைக் கொண்டுள்ளன இதன் மூலம் திரைப்படத்தின் தொடக்கத்தில் சுவாரசியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜீவாவின் (சிலம்பரசன்) பாட்டி பத்து வயதாக இருக்கும் போது கிராமத்தில் கள்ளச் சாரயம் காய்ச்சிய 5 பேரை கொலை செய்துவிட்டு சிறைச் செல்கிறார். சிறையிலிருந்து திரும்பும் அவரை கிராம மக்கள் தமது தலைவியாக பதவியேற்றுகின்றனர். அவரது ஆட்சியின் கீழ் கிராமத்தில் தீய நடவடிக்கைகள் இல்லாமல் நல்லாட்சி நிலவுகிறது. இதன் போது அங்கே வரும் காவல்துறை அதிகாரி ஒருவர் அக்கிராமத்தில் பிழை செய்யும் ஒருவரையேனும் பிடிக்க முற்பட்டு தோல்வியடைகிறார். இதனால் கோபமுற்ற காவல்துறை அதிகாரி சிம்புவின் பாட்டியை உயிருடன் எரிக்கின்றார்.
இதனால் கோபமுற்ற ஜீவா (சிலம்பரசன்) அவரை எவ்வாறு பழிவாங்குகிறார் என்பதே கதையின் மிகுதி பாகமாகும்.
பாத்திரங்கள்
[தொகு]- சிலம்பரசன் ... ஜீவா
- வேதிகா ... பிருந்தா
- லால் ...ஜீவானந்தம் ஐபிஎஸ்
- சுலில் குமார் ...ஜீவா
- சந்தானம்
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "எரிச்சலூட்டும் திரைக்கதை, ஹிஸ்டீ ரியா கேரக்டர்கள், கண்டபடி அலையும் கேமரா, காதைப் பதம் பார்க்கும் பின்னணி இசை என மொத்தமாகச் சேர்ந்து நம்மை குந்த வைத்து கும்மி அடிக்கின்றன... ஜல்லிக்கட்டுகளில், காளைகள்தான் மனிதர்களால் துன்புறுத்தப்படுவதாகப் புகார் எழுந்த சமயம் பார்த்து, இப்படியரு உல்டா 'காளை'?!" என்று எழுதி 37100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sizzling Kaalai". Galatta.com. Archived from the original on 2008-01-21. Retrieved 11 January 2008.
- ↑ "சினிமா விமர்சனம்: காளை". விகடன். 2008-01-30. Retrieved 2025-06-01.