சங்கீதா (நடிகை)
Appearance
(சங்கீதா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சங்கீதா மாதவன் நாயர் Sangita Madhavan Nair | |
---|---|
பிறப்பு | கோட்டக்கல், மலப்புறம் மாவட்டம், கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1978–2000 2014, 2023–தற்போது வரை |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | எஸ். சரவணன் (தி. 2000) |
பிள்ளைகள் | 1 |
சங்கீதா மாதவன் நாயர் (Sangita Madhavan Nair) ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழிலும் மலையாளத்திலும் நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி வரை 50-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மகாநதி படத்தில் பெரிய காவேரியாக நடித்துள்ளார். இவர் பூவே உனக்காக படத்திலும் எல்லாமே என் ராசாதான் படத்திலும் பிரபலமானவர்.[1][2][3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சங்கீதா ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சரவணனனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவருக்கு சாய் தேஜாஸ்வினி என்ற மகள் உள்ளார். இவரது கணவர் இயக்கிய சிலம்பாட்டம் படத்தில் உதவியாக இருந்துள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படங்கள் | கதாபாத்திரம் | மொழி |
---|---|---|---|
1990 | வாழ்ந்து காட்டுவோம் | தமிழ் | |
1991 | இதயவாசல் | தமிழ் | |
1992 | நாடோடி | சிந்து | மலையாளம் |
1992 | சின்ன பசங்க நாங்க | தமிழ் | |
1992 | வசந்த மலர்கள் | தமிழ் | |
1992 | தேவர் வீட்டு பொண்ணு | தமிழ் | |
1994 | மகாநதி | பெரிய காவேரி | தமிழ் |
1994 | கேப்டன் | தமிழ் | |
1994 | என் ராஜாங்கம் | தமிழ் | |
1994 | சரிகமபதநீ | தமிழ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sudharsan's starry wedding reception". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 14 July 2012. பார்க்கப்பட்ட நாள் 18 July 2018.
- ↑ "16 വര്ഷത്തിനു ശേഷം സംഗീത വന്നപ്പോള് | mangalam.com". Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
- ↑ "വിജയേട്ടന് വിളിച്ചു; ശ്യാമള വന്നു | mangalam.com". Archived from the original on 4 October 2014. பார்க்கப்பட்ட நாள் 30 September 2014.