காலனித்துவ கால சென்னை மாகாண ஆட்சியாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலனித்துவ கால சென்னை மாகாண ஆட்சியாளர்கள் (List of colonial Governors and Presidents of Madras), காலனித்துவ காலத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் சென்னை மாகாணத்தின் முகவர்கள், ஆளுநர்கள், மற்றும் தலைவர்களின் பட்டியல்:

பிரித்தானிய முகவர்கள்[தொகு]

பிரித்தானியப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நிர்வாகி பிரான்சிஸ் டே என்பவர், 1639ல் சந்திரகிரி மன்னரின் அனுமதியுடன் சென்னையின் கடற்கரையை ஒட்டியப் பகுதிகளில் வணிகம் மேற்கொள்ள கட்டுமானங்களை துவக்கினார். முன்னர் மசூலிப்பட்டினத்தில் கம்பெனியினர் நிறுவியியிருந்த தொழிற்சாலைகளை, 1640ல் ஆண்ட்ரூ கோகன் என்பவர் சென்னைக்கு மாற்றினர். புனித ஜார்ஜ் கோட்டை கட்டி, அதில் கம்பெனியின் தலைமை அலுவலகத்தை நிறுவினர்.

இவ்வாறக முதன்முதலில் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை முகமை 1 மார்ச் 1640ல் நிறுவப்பட்டது. சென்னை முகமையின் முதல் முகவராக ஆண்ட்ரூ கோகன் நியமிக்கப்பட்டார்.

சென்னை முகவரி அலுவல் பெயர் புனித ஜார்ஜ் கோட்டையின் ஆளுநர் ஆகும். இருப்பினும் ஆளுநரை முகவர் என்றே அழைக்கப்பட்டார்.

ஆண்ட்ரூ கோனின் மூன்றாண்டு பணிக்குப் பின்னர் பிரான்சிஸ் டே சென்னை முகவராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் பதவியேற்ற நான்கு முகவர்களுக்குப் பின் வந்த ஆரோன் பேக்கர் முகவராக இருந்த காலத்தில், சென்னை முகமை, 1684ல் சென்னை மாகாணமாக தரம் உயர்த்தப்பட்டது.


பெயர் பதவியேற்ற நாள் பதவி முடிந்த நால்
ஆண்ட்ரூ கோகன் 1மார்ச் 1640 1643
பிரான்சிசு டே (1605–1673) 1643 1644
தாமசு வி (1605–1673) 1644 1648
தாமஸ் கிரீன்ஹில் (1611–1658) 1648 1652
ஆரோன் பேக்கர் (தலைவர்) (1610–1683) 1652 1655
தாமஸ் கிரீன்ஹில் (1611–1658) 1655 1658
சர் தாமஸ் சேம்பர்ஸ் 1658 1661
சர் எட்வர்டு விண்டர் (1622–1686) 1661 ஆகஸ்டு 1665
ஜார்ஜ் பாக்ஸ்குரோப்ட் (1634–1715) ஆகஸ்டு 1665 16 செப்டம்பர் 1665
சர் எட்வர்டு விண்டன் (இரண்டாம் முறை) (1631–1715) 16 செப்டம்பர் 1665 22 ஆகஸ்டு 1668
ஜார்ஜ் பாக்ஸ்குரோப்ட் (இரண்டாம் முறை) (1634–1715) 22 ஆகஸ்டு 1668 சனவரி 1670
சர் வில்லியம் லாங்கோர்ன் சனவரி 1670 27 சனவரி 1678
ஸ்டேரேன்சாம் மாஸ்டர் 27 சனவரி 1678 3 சூலை 1681
வில்லியம் கிப்போர்டு 3 சூலை 1681 8 ஆகஸ்டு1684

கம்பெனி தலைவர்கள்[தொகு]

சென்னை, 1684 முதல் 12 பிப்ரவரி 1785 முடிய மாகாணமாக விளங்கியது. 1784ல் இயற்றப்பட்ட பிட்டின் இந்தியச் சட்டத்தின் படி, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளை கம்பெனியும், பிரித்தானியப் பேரரசும் கூட்டாக நிர்வாகம் செய்ய ஒரு தலைவரின் கீழ் கட்டுப்பாட்டு வாரியத்தை அமைத்தது.

சென்னை மற்றும் மும்பை மாகாணங்களில் ஆளுனர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் உரிமையை இழந்து, கொல்கத்தா மாகாண ஆளுனரின் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கினர். கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் தலைநகராக கல்கத்தா விளங்கியது.

இலிகு யேல் 8 ஆகஸ்டு 1684 அன்று சென்னை மாகாணத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார்.

இலிகு யேல், தாமஸ் பிட், மற்றும் ஜார்ஜ் மெகர்டினி ஆகியோர் சென்னை மாகாணத்தின் புகழ் பெற்ற தலைவர்கள் ஆவார்.

பெயர் படம் பதவியேற்ற நாள் பதவி விலகிய நால்
இலிகு யேல் (முதன் முறை) (தற்காலிகம்) 8 ஆகஸ்டு 1684 26 சனவரி 1685
வில்லியம் கிப்போர்டு 26 சனவரி 1685 25 சூலை1687
இலிகு யேல் (இரண்டாம் முறை) 25 சூலை1687 3 அக்டோபர் 1692
நத்தானியேல் ஹிக்கின்சன் 3 அக்டோபர் 1692 7 சூலை 1698
தாமஸ் பிட் 7 சூலை 1698 18 செப்டம்பர் 1709
குல்ஸ்டோன் அடிசன் 18 செப்டம்பர் 1709 17 அக்டோபர் 1709
எட்மண்ட் மாண்டேகும் (தற்காலிகம்) 17 அக்டோபர் 1709 13 நவம்பர் 1709
வில்லியம் பிராசர் 14 நவம்பர் 1709 (தற்காலிகம்) 11 சூலைஅ 1711
எட்வர்டு ஹாரிசன் 11 சூலை 1711 8 சனவரி 1717
ஜோசப் கோலத் 8 சனவரி 1717 18 சனவரி 1720
பிரான்சிஸ் ஹேஸ்டிங்ஸ் (தற்காலிகம்) 18 சனவரி 1720 15 அக்டோபர் 1721
நத்தேனியல் எல்விக் 15 அக்டோபர் 1721 15 சனவரி1725
ஜேம்ஸ் மெக்கரே 15 சனவரி 1725 14 மே 1730
ஜார்ஜ் மோர்ட்டன் பிட் 14 சூலை 1730 23 சனவரி 1735
ரிச்சர்டு பென்னியான் 23 சனவரி 1735 14 சனவரி 1744
நிக்கோலஸ் மோர்ஸ் 14 சனவரி 1744 10 செப்டம்பர் 1746

பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆளுநர்கள்[தொகு]

1746ல், தூப்ளேயின் படைகள் சென்னை நகரத்தை முற்றுகையிட்டு, கைப்பற்றியது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சென்னைப் பகுதிகள், பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் கட்டுப்பாட்டில் இருந்தது. 1749ல் இருதரப்பினரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, சென்னை மீண்டும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஒப்படைக்கப்பட்டது.

1749ல் சென்னையை மீண்டும் பிரித்தானியர்களிடம் வழங்கும் வரை சென்னை ஆளுநராக ஜீன்-ஜாக்ஸ் டுவால் டிபிரெம்மேன் ஆட்சி செய்தார்.

பெயர் படம் பதவியேற்ற நாள் பதவி விலகிய நாள்
மஹே டி லா பர்ட்டோனாய்ஸ் (தற்காலிகம்) 10 செப்டம்பர் 1746 2 அக்டோபர் 1746
ஜீன்-ஜாக்ஸ் டுவால் டிபிரெம்மேன் 2 அக்டோபர் 1746 ஆகஸ்டு 1749

பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் தலைவர்கள்[தொகு]

1746 முதல் 1749 முடிய சென்னை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டில் இருந்த போது, பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடம் தற்காலிகமாக, சென்னையிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில், ஆந்திரா கடற்கரையில் உள்ள புனித டேவிட் கோட்டையில் இயங்கியது.

1752ல் சென்னையின் தலைவர் ஜான் சாண்டர்ஸ், கம்பெனியின் தலைமையிடத்தை மீண்டும் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார்.

1760ல் வந்தவாசிப் போரில், பிரஞ்ச் கம்பெனிப் படைகளை வென்றதன், மூலம், சென்னை மாகாணத்தில் ஆங்கிலேய கம்பெனி ஆட்சி பன்மஅடங்கு விரிவடைந்தது.

1785ல் சென்னை மாகாணம் நிறுவப்பட்டு, அதன் தலைவரே, மாகாண ஆளுநராக பதவியேற்றார்.

பெயர் பதவியேற்ற நாள் பதவி விலகிய நாள்
ஜான் ஹிண்டே (புனித டேவிட் கோட்டையில் ) 10 செப்டம்பர் 1746 14 ஏப்ரல் 1747
சார்லஸ் பிளேயர் (புனித டேவிட் கோட்டையில்) 14 ஏப்ரல் 1747 19 செப்டம்பர் 1750
தாமஸ் சாண்டர்ஸ் (புனித டேவிட் கோட்டையில்) - 5 ஏப்ரல் 1752 முடிய) 19 செப்டம்பர் 1750 14 சனவரி 1755
ஜார்ஜ் பிக்கோட் (முதன்முறை) 14 சனவரி 1755 14 நவம்பர் 1763
இராபர்ட் பால்க் 14 நவம்பர் 1763 25 சனவரி 1767
சார்லஸ் போர்ச்சியர் 25 சனவரி 1767 31 சனவரி 770
ஜோசியா டு பிரே 31 சனவரி 1770 2 பிப்ரவரி 1773
அலெக்சாண்டர் விஞ்ச் 2 பிப்ரவரி 1773 11 டிசம்பர் 1775
ஜார்ஜ் பிக்கோட் (இரண்டாம் முறை) 11 டிசம்பர் 1775 23 ஆகஸ்டு 1776
ஜார்ஜ் ஸ்டிராட்டன் 23 ஆகஸ்டு 1776 31 ஆகஸ்டு 1777
ஜான் ஒயிட் ஹில் (முதன் முறை - தற்காலிகம்) 31 ஆகஸ்டு 1777 8 பிப்ரவரி 1778
சர் தாமஸ் ரம்போல்டு 8 பிப்ரவரி 1778 6 ஏப்ரல் 1780
ஜான் ஒயிட் ஹில் (இரண்டாம் முறை - தற்காலிகம்) 6 ஏப்ரல் 1780 8 நவம்பர் 1780
சார்லஸ் ஸ்மித் (தற்காலிகம்) 8 நவம்பர் 1780 22 சூன் 1781
ஜார்ஜ் மார்ட்னி 22 சூன் 1781 12 பிப்ரவரி 1785

ஆளுநர்கள் (பிரித்தானிய இந்தியா)[தொகு]

பிரித்தானியப் பேரரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள்

பெயர் படம் பதவியேற்ற நாள் பதவி விலகிய நாள்
ஜார்ஜ் மார்ட்னி 12 பிப்ரவரி 1785 14 சூன் 1785
அலெக்சாண்டர் டேவிட்சன் (தற்காலிகம்) 14 சூன் 1785 6 ஏப்ரல் 1786
ஆர்ச்பால்ட் காம்பெல் 6 ஏப்ரல் 1786 7 பிப்ரவரி 1789
ஜான் ஹாலந்து (தற்காலிகம்) 7 பிப்ரவரி 1789 13 பிப்ரவரி 1790
எட்வர்டு ஜெ. ஹாலந்து (தற்காலிகம்) 13 பிப்ரவரி 1790 20 பிப்ரவரி 1790
வில்லியம் மெடோஸ் 20 பிப்ரவரி 1790 1 ஆகஸ்டு 1792
சர் சார்லஸ் ஒக்கேலே 1 ஆகஸ்டு 1792 7 செப்டம்பர் 1794
இராபர்ட் ஹோபர்ட் 7 செப்டம்பர் 1794 21 பிப்ரவரி 1798
ஜார்ஜ் ஹாரிஸ் (தற்காலிகம்) 21 பிப்ரவரி 1798 21 ஆகஸ்டு 1798
எட்வர்டு கிளைவ் 21 ஆகஸ்டு 1798 30 ஆகஸ்டு 1803
வில்லியம் பென்டிங்கு பிரபு 30 ஆகஸ்டு 1803 11 செப்டம்பர் 1807
வில்லியம் பெட்ரி (தற்காலிகம்) 11 செப்டம்பர் 1807 24 பிப்ரவரி 1808
சர் ஜார்ஜ் பார்லோ 24 பிப்ரவரி 1808 21 மே 1813
ஜான் ஆபேர்கிராம்பி (தற்காலிகம்) 21 மே 1813 16 செப்டம்பர் 1814
ஹக் எலியட் 16 செப்டம்பர் 1814 1820
தோமஸ் முன்ரோ

1820 10 சூலை 1827
ஹென்றி சல்லிவன் கிரேம் (தற்காலிகம்) 10 சூலை 1827 18 அக்டோபர் 1827
ஸ்டீபன் ரம்போல்டு லஸ்சிங்டன் 18 அக்டோபர் 1827 25 அக்டோபர் 1832
பிரடெரிக் ஆடம் 25 அக்டோபர் 1832 4 மார்ச் 1837
ஜார்ஜ் எட்வர்டு ரஸ்ஸல் (தற்காலிகம்) 4 மார்ச் 1837 6 மார்ச் 1837
ஜான் எல்பின்ஸ்டோன் 6 மார்ச் 1837 24 செப்டம்பர் 1842
ஜார்ஜ் ஹே 24 செப்டம்பர் 1842 23 பிப்ரவரி 1848
ஹென்றி டிக்கின்சன் (தற்காலிகம்) 23 பிப்ரவரி 1848 7 ஏப்ரல்1848
ஹென்றி பாட்டிங்கர் 7 ஏப்ரல் 1848 24 ஏப்ரல் 1854
டேனியல் எலியட் (தற்காலிகம்) 24 ஏப்ரல் 1854 28 ஏப்ரல்1854
ஜார்ஜ் ஹாரிஸ் 28 ஏப்ரல் 1854 28 மார்ச்1859
சர் சார்லஸ் திரவேல்யன் 28 மார்ச் 1859 8 சூன் 1860
வில்லியம் அம்புரோஸ் மோர்ஹெட் (முதல்முறை) (தற்காலிகம்) 8 சூன் 1860 5 சூலை 1860
ஹென்றி ஜார்ஜ் வார்டு 5 சூலை 1860 2 ஆகஸ்டு 1860
வில்லிய அம்புரோஸ் மோர்ஹெட் (இரண்டாம் முறை) (தற்காலிகம்) 4 ஆகஸ்டு 1860 18 பிப்ரவரி 1861
சர் வில்லியம் டெனிசன் (முதன்முறை) 18 பிப்ரவரி 1861 26 நவம்பர் 1863
எட்வர்டு மால்ட்பி (தற்காலிகம்) 26 நவம்பர் 1863 18 சனவரி 1864
சர் வில்லியம் டெனிசன் (இரண்டாம் முறை) 18 January 1864 27 March 1866
பிரான்சிஸ் நேப்பியர் 27 மார்ச் 1866 19 பிப்ரவரி 1872
அலெக்சாண்டர் ஜான் அர்புத்னாட் (தற்காலிகம்) 19 பிப்ரவரி 1872 15 மே 1872
வேரி ஹென்றி ஹோபர்ட் 15 மே 1872 29 ஏப்ரல் 1875
வில்லியம் ரோஸ் ராபின்சன் (தற்காலிகம்) 29 ஏப்ரல் 1875 23 நவம்பர் 1875
ரிச்சர்டு டெம்பிள் 23 நவம்பர் 1875 20 டிசம்பர் 1880
வில்லியம் பாட்ரிக் ஆடம் 20 டிசம்பர் 1880 24 மே 1881
வில்லியம் ஹட்டில்ஸ்டோன் (தற்காலிகம்) 24 மே 1881 5 நவம்பர் 1881
மவுண்ட்ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் 5 நவம்பர் 1881 8 டிசம்பர் 1886
ராபர்ட் பௌர்க் 8 டிசம்பர் 1886 1 டிசம்பர் 1890
ஜான் ஹென்றி கர்ட்ஸ்டின் 1 டிசம்பர் 1890 23 சனவரி 1891
பெயில்பி லாலே 23 சனவரி 1891 18 மார்ச் 1896
ஆர்தர் எலிபாங்க் ஹாவ்லாக் 18 மார்ச் 1896 28 டிசம்பர் 1900
ஆர்தர் ரஸ்சல் (முதன்முறை) 28 டிசம்பர் 1900 30 ஏப்ரல் 1904
ஜேம்ஸ் தாம்சன் (தற்காலிகம்) 30 ஏப்ரல் 1904 13 டிசம்பர் 1904
ஆர்தர் ரஸ்சல் (இரண்டாம் முறை) 13 டிசம்பர் 1904 15 பிப்ரவரி 1906
சர் காப்பிரியல் ஸ்டோக்ஸ் (தற்காலிகம்) 15 பிப்ரவரி 1906 28 மார்ச் 1906
சர் ஆர்தர் லாலே 28 மார்ச் 1906 3 நவம்பர் 1911
தாமஸ் கிப்சன் கார்மைக்கேல் 3 நவம்பர் 1911 30 மார்ச் 1912
சர் முர்ரே ஹம்மிக் (தற்காலிகம்) 30 மார்ச் 1912 30 அக்டோபர் 1912
ஜான் சிங்கிலயர் 30 அக்டோபர் 1912 29 மார்ச் 1919
அலெக்சாண்டர் கார்டுவ் 29 மார்ச் 1919 10 ஏப்ரல் 1919
பிரிமேன் - தாமஸ் 10 ஏப்ரல் 1919 12 ஏப்ரல் 1924
சார்லஸ் டோட்ஹண்டர் (தற்காலிகம்) 12 ஏப்ரல் 1924 14 ஏப்ரல் 1924
ஜார்ஜ் கோசென் 14 ஏப்ரல் 1924 29 சூன் 1929
நார்மன் மார்ஜோரிபாங்க்ஸ் (தற்காலிகம்) 29 சூன் 1929 11 நவம்பர் 1929
ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லி (முதன்முறை) 11 நவம்பர் 1929 16 மே 1934
முகமத் உஸ்மான், சென்னை (தற்காலிகம்) 16 மே 1934 16 ஆகஸ்டு 1934
ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லி (இரண்டாம் முறை) 16 ஆகஸ்டு 1934 15 நவம்பர் 1934
ஜான் எர்ஸ்கின் (முதன்முறை) 15 நவம்பர் 1934 18 சூன் 1936
கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (தற்காலிகம்) 18 June 1936 1 October 1936
ஜான் எர்ஸ்கின் பிரபு (இரண்டாம் முறை) 1 அக்டோபர் 1936 12 மார்ச் 1940
ஆர்தர் ஓஸ்வால்டு ஜேம்ஸ் ஹோப் 12 மார்ச் 1940 26 பிப்ரவரி 1946
சர் ஹென்றி நைட் (தற்காலிகம்) 26 பிப்ரவரி 1946 5 மே 1946
சர் ஆர்ச்சிபோல்டு எட்வர்டு நய் 5 மே 1946 15 ஆகஸ்டு 1947

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]