காரணித் தேற்றம்
இயற்கணிதத்தில் காரணித் தேற்றம் (factor theorem) என்பது ஒரு பல்லுறுப்புக்கோவையின் காரணிகளையும் மூலங்களையும் இணைக்கும் தேற்றமாகும். இத்தேற்றமானது பல்லுறுப்புக்கோவை மீதியத் தேற்றத்தின் சிறப்பு வகையாகும்.[1]
காரணித் தேற்றத்தின் கூற்று:
- என இருந்தால், இருந்தால் மட்டுமே ஆனது பல்லுறுப்புக்கோவை இன் ஒரு காரணியாகும் (அதாவது, ஒரு மூலம்).[2]
பல்லுறுப்புக்கோவைகளைக் காரணிப்படுத்தல்[தொகு]
பல்லுறுப்புக்கோவைகளின் காரணிகளையும் மூலங்களையும் கண்டுபிடிப்பதற்கு காரணித் தேற்றம் பயன்படுகிறது. மேலும் இத்தேற்றத்தைக் கொண்டு, ஒரு பல்லுறுப்புக்கோவையின் தெரிந்த காரணியை அப்பல்லுறுப்புக்கோவையிலிருந்து நீக்கி அதனைச் சிறிய படிகொண்ட பல்லுறுப்புக்கோவையாக மாற்றியபின்னர் அப்புதுக்கோவையின் மூலங்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இம்முறையை செயற்படுத்தும் படிகள்:[3]
- முதலில் பல்லுறுப்புக்கோவை இன் ஒரு மூலம் ஊகிக்கப்படுகிறது.
- அடுத்து காரணித் தேற்றத்தில் மூலம் ஆனது இன் காரணி என உறுதிசெய்யப்படுகிறது.
- பல்லுறுப்புக்கோவை நெடுமுறை வகுத்தல் அல்லது தொகுமுறை வகுத்தல் முறைகளைப் பயன்படுத்தி பல்லுறுப்புக்கோவை காணப்படுகிறது.
- பல்லுறுப்புக்கோவை இன் படி இன் படியைவிட ஒன்று குறைவு என்பதால் அதன் மூலங்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.
எடுத்துக்காட்டு[தொகு]
- இன் காரணிகளைக் காணல்:
சில முயற்சிகள் மூலம் இக்கோவையின் மதிப்பை பூச்சியமாக்கக் கூடிய x இன் ஒரு மதிப்பைக் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும். ஒரு காரணியா என்பதைச் சோதிக்க பல்லுறுப்புக்கோவையில் எனப் பிரதியிட:
கிடைக்கும் மதிப்பு பூச்சியமாக இல்லாமல் 18 ஆக இருப்பதால் தரப்பட்ட பல்லுறுப்புக்கோவையின் காரணி இல்லை. அடுத்ததாக காரணியா என்று சோதித்துப் பார்ப்பதற்கு எனப் பிரதியிட:
எனவே ஒரு காரணி; ஒரு மூலம்
இப்பொழுது கோவையை காரணியால் வகுக்க:
- ஒரு இருபடிக்கோவை என்பதால் இருபடி வாய்பாடு கொண்டு இதன் மூலங்களை எனக் காணலாம்.
எனவே இன் மூன்று காரணிகள்:
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Sullivan, Michael (1996), Algebra and Trigonometry, Prentice Hall, p. 381, ISBN 0-13-370149-2.
- ↑ Sehgal, V K; Gupta, Sonal, Longman ICSE Mathematics Class 10, Dorling Kindersley (India), p. 119, ISBN 978-81-317-2816-1.
- ↑ Bansal, R. K., Comprehensive Mathematics IX, Laxmi Publications, p. 142, ISBN 81-7008-629-9.