காயத்திரி ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காயத்திரி ஐயர் (Gayathiri Iyer) என்பவர் ஊர்மிளா காயத்ரி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் ஆவார். இவர் கேரளாவில் கொச்சியில் வளர்ந்தார். இவர் இந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் வங்காள மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

திரைப்படங்கள்[தொகு]

கன்னடத்தில் இவரது முதல் குறிப்பிடத்தக்கப் படம் நமோ பூட்டாத்மா ஆகும். இதன் மறுஆக்கம் தமிழில் யாமிருக்க பயாமேன் என 1983ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதனை ஆர். எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் எல்ட்ரெட் குமார் தயாரித்து வெளியிட்டார். கோமல் மற்றும் ஹரிஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். நமோ பூத்தாத்மா கருநாடகாவில் 100 நாட்கள் ஓடியது. இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இத்திரைப்படம் பெற்றது.[2]

ஐயரின் அடுத்த வெளியீடு மலேசியா, பெங்களூர் மற்றும் ஐதராபாத்தின் சில பகுதிகளில் படமாக்கப்பட்ட வேகா என்டர்டெயின்மென்ட் மூலம் கன்னடத்தில் வெளியான ஓயிஜா ஆகும்.[3][4] இதில் சிரத்தா தாஸ், மாதுரி இட்டாகி, சாயாஜி சிண்டே மற்றும் பாரத் ஆகியோர் நடித்தனர்.[5] ஏக்தா கபூரின் ஹைவான் தி மான்ஸ்டர் என்ற தொடரில் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர், தனது இயற்கையான எதிர்மறைத் தோற்றத்தில் நடித்தற்காகப் பாராட்டப்பட்டார்.

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் கதாபாத்திரம் மொழி மேற்கோள்
2011 ஷ்ரவண கன்னடம்
2012 ஆறு திரிபுரா தெலுங்கு
2013 சிருஷ்டி பெங்காலி [6]
2014 நினைவில் நின்றவள் தமிழ்
நமோ பூதாத்மா கன்னடம் [7]
2015 Ouija க்ஷேத்திரம் [8][9][10]
டைசன் [11]
2016 ஜகு தாதா [12]
மியாவ் சுகனா தமிழ் [13]
2017 ரைட் ஆங்கிலம் [14]
2018 ரெய்டு முக்தா யாதவ் இந்தி [15][16]
2019 பேய் பர்கா கண்ணா இந்தி
2023 பருந்தாகுது ஓர் குருவி தமிழ்
2024 பசூகா அறிவிக்கப்படும் மலையாளம்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தொடர் கதாபாத்திரம் குறிப்புகள்
2019 ஹைவான்-அசுரன் ஜியானா" ஜியா " கரேவால் எதிரி
2022 நாகின் 6 ரீம் கட்டாரியா

மேற்கோள்கள்[தொகு]

  1. Pasupulate, Karthik (8 October 2012). "Gayatri Iyer, the new girl on the block". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 1 April 2018. பார்க்கப்பட்ட நாள் 15 August 2014.
  2. "Namo Bhootatma is a big Surpirse for me Gayatri Iyer". moviemint.com. Archived from the original on 22 May 2015. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  3. "Gayathri has a special connection with horror films". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 23 March 2015. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015.
  4. "Risk lurks beyond glitz". Bangalore Mirror. Archived from the original on 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 12 February 2015.
  5. "Ouija Movie Shooting Experience by Urmila Gayathri". itimes.com. Archived from the original on 23 March 2015. பார்க்கப்பட்ட நாள் 18 December 2014.
  6. "Sikkimese Actor Uttam Pradhan in Bengali Film "Shristi"". Archived from the original on 14 May 2014. பார்க்கப்பட்ட நாள் 15 August 2014.
  7. "Namo Boothatma". vijaykarnatakaepaper.com. 14 January 2015. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 15 August 2014.
  8. "When girls sabotaged Bharath's scenes". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  9. "Ouija Kannada/Telugu movie". Archived from the original on 8 November 2015. பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.
  10. "Gayathri Wants to be Studious in Filmdom". The New Indian Express. Archived from the original on 11 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
  11. "Gayathri Enters Commercial Cinema With Vinod Prabhakar's "Tyson"". Archived from the original on 17 April 2015. பார்க்கப்பட்ட நாள் 9 April 2015.
  12. "Injury Can't Stop Gayathri". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 15 November 2015. பார்க்கப்பட்ட நாள் 18 August 2015.
  13. "Meow Movie Review {2/5}: Critic Review of Meow by Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  14. "Gayathri Looks To Shine At Home". Deccan Chronicle. 14 January 2015. Archived from the original on 28 July 2015. பார்க்கப்பட்ட நாள் 18 September 2017.
  15. "Ajay Devgn is a prankster: Raid actress Gayathiri Iyer recalls working with the star". Deccan Chronicle. 14 January 2018. Archived from the original on 14 January 2018. பார்க்கப்பட்ட நாள் 14 January 2018.
  16. "Model-turned-actress Gayathri Iyer gets big break in Bollywood". The New Indian Express. 9 January 2018. Archived from the original on 13 January 2018. பார்க்கப்பட்ட நாள் 9 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்திரி_ஐயர்&oldid=3920432" இலிருந்து மீள்விக்கப்பட்டது