காட் ஆஃப் வார் III
காட் ஆஃப் வார் III (God of War III ) ஒரு மூன்றாம் நபர் சாகச கானொளி விளையாட்டு ஆகும் சான்டா மோனிகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு சோனி கம்ப்யூட்டர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மார்ச் 16, 2010 அன்று பிளேஸ்டேஷன் 3 (பிஎஸ் 3) முனையத்திற்காக வெளியிடப்பட்டது, இந்த விளையாட்டு காட் ஆஃப் வார் தொடரின் ஐந்தாவது பதிப்பாகும், ஏழாவது காலவரிசைப்படி, மற்றும் 2007 இன் காட் ஆஃப் வார் II இன் தொடர்ச்சியாகும்.கிரேக்க புராணங்களில் உள்ள பழிதீர்க்கும் கதையினை அடிப்படையாகக் கொண்டது.ஒலிம்பியன் கடவுள்களுக்கு சேவை செய்யும் ஸ்பார்டன் வீரரான கதாநாயகன் க்ராடோஸை இந்த விளையாட்டினை விளையாடும் வீரர் கட்டுப்படுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. கிராடோசினைக் எராஸ் குழப்பமுறச் செய்து அவரின் மனைவிமற்றும் குழந்தைகளைக் கொலை செய்கிறது. அவரைப் பழி வாங்குவதற்காக பண்டோராவின் பெட்டி என்பதனைத் தேடிச் செல்கிறார்.
விளையாட்டு
[தொகு]காட் ஆஃப் (God of War ) ஒரு மூன்றாம் நபர் சாகச கானொளி விளையாட்டு ஆகும். மெய்நிகர் ஒளிப்படக் கருவி அமைப்பு மூலமாக இதனைக் கானும்வகையில் விளையாட்டானது அமைக்கப்பட்டிருக்கும். இந்த விளையாட்டினை விளையாடுபவர்கள் கதையின் நாயகனான கிராடோஸ் என்பவரினைக் கட்டுப்படுத்தலாம் மேலும் புதிர் விளையாட்டு மற்றும் போர்களில் கிரேக்கம் புராண இறவாத வீரர்கள், உள்ளிட்ட பகைவர்களை , மெதூசா மற்றும் கோர்கன், சைக்ளோப்ஸின், ராய்த்ஸ , செண்ட்டார்கள், மற்றும் எதிரிகள்- ஹைட்ரா மற்றும் பண்டோராவின் கார்டியன் என்று அழைக்கப்படும் ஒரு மாபெரும் மினோட்டோர் போன்றவற்றில் கிராடோசின் செயல்களைக் கட்டுப்படுத்தலாம்.[1] விளையாடும் போது அந்த வீரர் சுவர்கள் மற்றும் ஏணிகளை ஏற வேண்டும், இடைவெளிகளில் குதிக்க வேண்டும், கயிறுகளில் ஊசலாடலாம், மேலும் விளையாட்டின் பிரிவுகளைத் தொடர விட்டங்களின் குறுக்கே சமப்படுத்த வேண்டும். சில புதிர்கள் பெட்டியை நகர்த்துவது போன்று எளிதானதாக இருக்கும். ஆனால் மற்றவை மிகவும் சிக்கலானவை, அதாவது விளையாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பல உருப்படிகளைக் கண்டுபிடிப்பது அடுத்த பகுதிக்குச் செல்வற்கான ஒரு கதவைத் திறக்க வேண்டும்.[1]
விருதுகள் மற்றும் பாராட்டுகள்
[தொகு]2009 ஆம் ஆண்டின் ஸ்பைக் வீடியோ கேம் விருதுகளில் காட் ஆஃப் வார் விளையாட்டானது 2010 ஆம் ஆண்டில் மிகவும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டிற்கான விருதினைப் பெற்றது.[2] 2010 ஸ்பைக் வீடியோ கேம் விருதுகளில், இது சிறந்த பிஎஸ் 3 கேம் மற்றும் சிறந்த வரைகலை விருது வழங்கப்பட்டது, மேலும் க்ராடோஸ் கதாப்பத்திரம் பிக்கெஸ்ட் பாடாஸ் விருதைப் பெற்றது. இது ஆண்டின் சிறந்த விளையாட்டு, சிறந்த அதிரடி சாகச விளையாட்டு, சிறந்த பின்னணி இசை போன்ற பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.[3] பிற தனிப்பட்ட விருதுகளான சிறந்த அதிரடி / சாகச விளையாட்டு ( கேம் ட்ரெய்லர்ஸ் இணையத்தளம் ),[4] சிறந்த அதிரடி விளையாட்டு கேம்ஸ்பை வலைத்தளத்திலும்,[5] கேன்ஸ் ரிவோல்யசனின் சிறந்த பிஎஸ் 3 விளையாட்டு விருது,[6] மற்றும்ஷேக் நியூசின் சிறந்த பிஎஸ் 3 பிரத்தியேக விளையாட்டு விருது [7] 2011 ஆம் ஆண்டு பிரித்தானிய அகாடமி ஆஃப் பிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாஃப்டா) நிகழ்பட விளையாட்டு விருதுகளில், காட் ஆஃப் வார் கலை சாதனை விருதைப் பெற்றது,[8] மேலும் இது அதிரடி மற்றும் விளையாட்டு விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டதாகும்.[9]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 SCE Santa Monica Studio, ed. (2005)
- ↑ "Spike TV Announces 2009 'Video Game Awards' Winners". PR Newswire. December 13, 2009. Archived from the original on October 8, 2012. பார்க்கப்பட்ட நாள் July 8, 2010.
- ↑ "Spike TV Announces 2010 'Video Game Awards' Winners". PR Newswire. December 11, 2010. Archived from the original on June 27, 2013. பார்க்கப்பட்ட நாள் July 8, 2012.
- ↑ "2010 GameTrailers awards, Best Action/Adventure Game". GameTrailers. Viacom. December 22, 2010. Archived from the original on May 26, 2013. பார்க்கப்பட்ட நாள் July 13, 2012.
- ↑ GameSpy Staff (December 22, 2010). "2010 GameSpy awards, Best Action Game". GameSpy. IGN Entertainment. Archived from the original on April 25, 2012. பார்க்கப்பட்ட நாள் July 13, 2012.
- ↑ Severino, Anthony (December 22, 2010). "2010 Game Revolution awards, Best PS3 Game". Game Revolution. Net Revolution Inc. Archived from the original on June 22, 2013. பார்க்கப்பட்ட நாள் July 13, 2012.
- ↑ Shack Staff (December 29, 2010). "Best of 2010 Awards: PS3 Exclusive". Shacknews. GameFly. Archived from the original on October 24, 2012. பார்க்கப்பட்ட நாள் July 13, 2012.
- ↑ Gallagher, James (March 17, 2011). "Heavy Rain and God Of War III Celebrated by BAFTA". PlayStation.Blog. Sony Computer Entertainment Europe. Archived from the original on January 5, 2012. பார்க்கப்பட்ட நாள் March 17, 2011.
- ↑ "2011 Winners & Nominees". BAFTA Games. British Academy of Film and Television Arts. February 15, 2011. Archived from the original on December 28, 2012. பார்க்கப்பட்ட நாள் June 16, 2013.