காசிவிசுவேசுவரர் கோயில், இலக்குண்டி


காசிவிசுவேசுவரர் கோயில் (Kasivisvesvara temple) சில நேரங்களில் காசிவிசுவநாதர் கோயில் எனவும் அழைக்கப்படும் இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் கதக் மாவட்டத்தின் இலக்குண்டியில் அமைந்துள்ளது. இது கதக் - பெட்டகேரி நகரத்திலிருந்து 11 கி.மீ தொலைவிலும், தம்பாலில் இருந்து 24 கி.மீ தொலைவிலும், குக்னுவிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் உள்ளது. [1]
கலாச்சாரம்
[தொகு]மேலை சாளுக்கிய சாம்ராச்சியத்தின் கலாச்சாரமும் கோயில் கட்டும் நடவடிக்கைகளின் மையமும் துங்கபத்திரை ஆற்றுப் பகுதியில் அமைந்திருந்தது. இங்கு பெரிய இடைக்கால பட்டறைகள் ஏராளமான நினைவுச்சின்னங்களை கட்டின. [2] இந்த நினைவுச்சின்னங்கள், முன்பே இருக்கும் திராவிடக் கோயில்களின் பிராந்திய வகைகள், கர்நாடா திராவிட பாரம்பரியத்தை வரையறுத்தன. [3] குறிப்பாக இலக்குந்தி மேலை சாளுக்கிய கட்டிடக்கலை முதிர்ச்சியடைந்த கட்டத்தின் இருப்பிடமாக இருந்தது. [4] காசிவிசுவேசுவரர் கோயில் இந்த சாதனைகளில் ஒரு உயர்ந்த புள்ளியைக் குறிக்கிறது. வரலாற்றாசிரியர் ஹென்றி கௌசன்ஸ் கருத்துப்படி, இது இந்தியாவின் கன்னட மொழி பேசும் பகுதியில் மிகவும் அலங்கரிக்கப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். [5]
அலங்காரங்கள்
[தொகு]கோவில் மண்டபத்தில் ஒரு தூண் மீது பொ.ச. 1087ஐச் சேர்ந்த கல்வெட்டு இருப்பதும், கோயிலின் அந்த பகுதியின் தெளிவும் அசல் கட்டுமானம் எளிமையாக இருந்திருக்கலாம் என்று கூறுகிறது. சாளுக்கிய பிரதேசத்தின் மீது சோழப் படையெடுப்புகளின் முடிவில், பிற்காலத்தில் கோயிலின் மற்ற பகுதிகளில் அலங்காரத்தின் பரவலானது சேர்க்கப்பட்டிருக்கலாம். [5] இலக்குந்தியில் உள்ள பெரும்பாலான கல்வெட்டுகள் பொ.ச. 1170 ஆம் ஆண்டிலிருந்து இருக்கிறது. போசள மன்னன் இரண்டாம் வீர வல்லாளன்தேவகிரியின் தேவகிரி யாதவப் பேரரசிலிருந்து இலக்குந்தியை (லோகிகுந்தி என்றும் அழைக்கப்படுகிறது) இணைத்து கி.பி 1193 இல் தனது தலைநகராக மாற்றினார். அவரது ஆட்சியின் போது கோவிலுக்கு அழகு கிடைத்திருக்கலாம். [6]

சன்னதி
[தொகு]கிழக்கு நோக்கி எதிர்கொள்ளும் இந்த ஆலயம் காசிவிசுவேசுவரருக்கு (இந்துக் கடவுள் சிவன் ) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அதன் உலகளாவிய சின்னமான இலிங்கம் கருவறையில் மூன்று அடி உயரத்தில் உள்ளது. பிரதான சன்னதியை எதிர்கொள்ளும் மற்ற சன்னதி சூரியக் கடவுளான சூரிய தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது சூரியநாராயணன் என்று அழைக்கப்படுகிறது. இந்த சன்னதி மேற்கு நோக்கி உள்ளது. சூரியக் கோயில்களில் ஒரு அசாதாரயே அமைந்திருக்கும். [7] இக்கோயில் சாளுக்கிய கலை சாதனைகளில் ஏற்பட்ட மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. முந்தைய கட்டுமானங்களில் காணப்படாத கூர்மையான மற்றும் மிருதுவான கல் வேலைகளை நோக்கி, ஒளி மற்றும் நிழலின் விளைவை முழுமையாகப் பயன்படுத்துகிறது. கோபுரத்தின் மீது கட்டுமானங்கள், வளைவுகள் மற்றும் பிற பணிகள், கதவுகளின் அலங்காரங்கள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. [6]

மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kamiya, Takeo (1996-09-20). "Architecture of the Indian Subcontinent". Gerard da Cunha-Architecture Autonomous, Bardez, Goa, India. Archived from the original on 2008-10-13. Retrieved 2007-10-27.
- ↑ Hardy (1995), p 156
- ↑ Hardy (1995), pp 6–7
- ↑ Hardy (1995), p 158
- ↑ 5.0 5.1 Cousens (1926), p. 79
- ↑ 6.0 6.1 Cousens (1926), p. 80
- ↑ Cousens (1926), p. 81–82
குறிப்புகள்
[தொகு]- Cousens, Henry (1996) [1926]. The Chalukyan Architecture of Kanarese Districts. New Delhi: Archaeological Survey of India. கணினி நூலகம் 37526233.
- Hardy, Adam (1995) [1995]. Indian Temple Architecture: Form and Transformation-The Karnata Dravida Tradition 7th to 13th Centuries. Abhinav Publications. ISBN 81-7017-312-4.
- Foekema, Gerard (2003) [2003]. Architecture decorated with architecture: Later medieval temples of Karnataka, 1000–1300 AD. New Delhi: Munshiram Manoharlal Publishers Pvt. Ltd. ISBN 81-215-1089-9.
- Kamiya, Takeyo. "Architecture of Indian subcontinent". Indian Architecture. Gerard da Cunha. Archived from the original on 2015-04-02. Retrieved 2008-08-16.
