உள்ளடக்கத்துக்குச் செல்

கல்வி நகரம் விளையாட்டரங்கம்

ஆள்கூறுகள்: 25°18′39″N 51°25′28″E / 25.310822°N 51.424418°E / 25.310822; 51.424418
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்வி நகரம் விளையாட்டரங்கம்
Education City Stadium
முழுமையான பெயர்கல்வி நகரம் விளையாட்டரங்கம்
அமைவிடம்கல்வி நகரம், அல் ரயான், கத்தார்
ஆட்கூற்றுகள்25°18′39″N 51°25′28″E / 25.310822°N 51.424418°E / 25.310822; 51.424418
இருக்கை எண்ணிக்கை45,350
Construction
Broke ground2016
திறக்கப்பட்டது15 சூன் 2020
வடிவமைப்பாளர்பென்விக்கு இரிபேரன் கட்டிடக்கலைஞர்கள் நிறுவனம்.
வடிவ வடிவமைப்பு
திட்ட மேலாளர்ASTAD
Structural engineerபுரோ ஆப்போல்டு
அருப் குழுமம்
Main contractorsஇயோனௌ & பரசுகேவைட்சு
கான்சுபெல் கத்தார்

கல்வி நகரம் விளையாட்டரங்கம் (Education City Stadium) கத்தார் நாட்டின் அல் ரய்யான் நகரத்தில் அமைந்துள்ள ஒரு கால்பந்து விளையாட்டு மைதானமாகும். கத்தாரில் நடைபெறவிருக்கும் 2022 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்காக கட்டப்பட்டது. கத்தார் அறக்கட்டளையின் கல்வி நகரத்தில் உள்ள பல பல்கலைக்கழக வளாகங்களுக்குள் இந்த மைதானம் அமைந்துள்ளது.[1] பிஃபா உலகக் கோப்பையைத் தொடர்ந்து, பல்கலைக்கழக தடகள அணிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ப 25000 இருக்கைகளை மைதானம் தக்க வைத்துக் கொள்ளும். 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமான 2020–2021 ஆண்டுக்கான கத்தார் நட்சத்திரங்கள் பூர்வாங்க காற்பந்து போட்டி கால்பந்து போட்டி இங்கு நடைபெற்றது.[2]

கட்டுமானம்[தொகு]

தலைநகர் தோகாவின் புறநகரில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் 40,000 பார்வையாளர் இருக்கைகள் உள்ளன. அரங்கத்திற்கு "பாலைவனத்தில் உள்ள வைரம்" என்ற புனைப்பெயர் வழங்கப்பட்டது.[3][4] அரங்கத்தின் கட்டுமானப் பொருட்களில் 20 சதவிகிதம் பச்சை நிறமாக அடையாளம் காணப்படுகின்றன. உலகின் மிகவும் சுற்றுச்சூழல் நிலைப்புத்தன்மை கொண்ட விளையாட்டரங்குகளில் இதுவும் ஒன்றாகும். உலகளாவிய நிலைத்தன்மை மதிப்பீட்டு அமைப்பின் ஐந்து நட்சத்திர தகுதி 2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் கல்விநகரம் விளையாட்டரங்கத்திற்கு வழங்கப்பட்டது.[5][6]

கட்டுமான ஒப்பந்ததாரரான இயோனௌ & பரசுகேவைட்சு நிறுவனத்தினர் வடிவ வடிவமைப்பை முன்னணி வடிவமைப்பு வடிவமைப்பாளர்களையும், புரோ ஆபோல்ட்டு நிறுவனத்தை பொறியியல் வடிவமைப்பிற்காகவும் நியமித்தனர்.[7] 2022 பிஃபா உலகக் கோப்பை காற்பந்து போட்டியின் நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட மற்ற விளையாட்டரங்குகளைப் போலவே இதுவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வேலை நிலைமைகளுக்காக விமர்சிக்கப்பட்டது. பன்னாட்டு மன்னிப்பு அவையும் விமர்சனங்களை முன்வைத்தது.[8]

15 மார்ச் 2022 அன்று, பிஃபா அமைப்பின் தலைவர் கத்தார் தொழிலாளர் அமைச்சர் டாக்டர். அலி பின் சமிக் அல் மரியை தோகாவில் சந்தித்து, நாட்டில் நடைபெற்று வரும் தொழிலாளர் சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்தார்.[9] புலம்பெயர்ந்த தொழிலாளர் சீர்திருத்தங்கள் தொழிலாளர் சந்தையில் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதில் கத்தார் அதிகாரிகளின் வலுவான அர்ப்பணிப்பைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று இன்ஃபான்டினோ 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் தேதியன்று ஒரு நேர்காணலில் உரையாற்றினார்.[10]

2022 பிஃபா உலகக் கோப்பை[தொகு]

கல்வி நகரம் விளையாட்டரங்கம் 2022 பிஃபா உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகளுக்காக கட்டப்பட்ட எட்டு மைதானங்களில் ஒன்றாகும்.[11] 2020 சூன் மாதத்தில் அரங்கத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.[6] மூன்றாவதாக கட்டிமுடிக்கப்பட்டு தயாரான உலகக் கோப்பை காற்பந்து போட்டி மைதானம் கல்வி நகரம் விளையாட்டரங்கமாகும். அதிகாரப்பூர்வமாக இது 15 சூன் 2020 அன்று திறக்கப்பட்டது.[12]

வரலாறு[தொகு]

30 செப்டம்பர் 2019 அன்று, பிஃபா கழக உலகக் கோப்பையின் மூன்றாவது இடத்திற்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டி, உலகக் கோப்பை போட்டி போன்றவை நடைபெறும் இடமாக கல்வி நகரம் விளையாட்டரங்கம் திகழும் என பிஃபா அமைப்பு அறிவித்தது. அரையிறுதியில் லிவர்பூல் அணியின் முதல் போட்டியும் இந்த அரங்கத்தில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் கல்வி நகரம் விளையாட்டரங்கத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.[13] இதனால், லிவர்பூல் அணியின் தொடக்க ஆட்டம், இறுதிப் போட்டி மற்றும் மூன்றாவது இடத்திற்கான போட்டி அனைத்தும் தோகாவில் உள்ள கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கத்திற்கு மாற்றப்பட்டன.

2020 ஆம் ஆண்டு பிஃபா கழக உலகக் கோப்பை மீண்டும் கத்தாரில் நடைபெற்றது. கல்வி நகரம் விளையாட்டரங்கம் இதற்கான அரங்குகளில் ஒன்றாக இருந்தது.[14] ஓர் இரண்டாவது சுற்றுப் போட்டி, ஓர் அரையிறுதிப் போட்டி, மூன்றாவது இடத்திற்கான போட்டி மற்றும் பேயர்ன் முனிச் விளையாடிய இறுதிப் போட்டி அனைத்தும் அரங்கத்தில் நடந்தன.[15] 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிய காற்பந்து கூட்டமைப்பின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டல போட்டிகளை அரங்கம் நடத்தியது.[14]

2021 ஆம் ஆண்டுக்கான பிஃபா அமைப்பின் அரபுக் கோப்பை காற்பந்து போட்டிகளும் இங்கு நடைபெற்றன.[16]

2022 பிஃபா உலகக் கோப்பை காற்பந்து போட்டிகளுக்கா கட்டப்பட்ட மற்ற மைதானங்களைப் போலவே, கல்வி நகரம் விளையாட்டு அரங்கமும் கட்டுமானத் தளங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை காரணமாக சர்ச்சைக்கு உட்பட்டது.[17] கத்தாருக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்புகளை விசாரிக்கவும், தீர்வு செய்யவும் மற்றும் தடுக்கவும் தவறிவிட்டதாக பன்னாட்டு மன்னிப்பு அவை ஓர் அறிக்கையில் விமர்சித்துள்ளது.[18]

கத்தார் வெளிநாட்டு ஊழியர்களை நடத்தும் விதத்தில் கணிசமாக மாறிவிட்டது என்றும் தற்போது 2022 ஆம் ஆண்டில் பிஃபா உலகக் கோப்பையை நடத்த தகுதி பெற்றுள்ளது என்றும் பன்னாட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதியன்று கூறினார். நவம்பர் 20 ஆம் தேதி பன்னாட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பு, வெளிநாட்டு தொழிலாளர்களை கத்தார் எவ்வாறு நடத்துகிறது என்பது குறித்த அதன் சாதனைக்காக இந்நாடு கடந்த காலங்களில் சரமாரியான விமர்சனங்களைப் பெற்றது. “தொழிலாளர்களின் உரிமைகள் இல்லாமல் உலகக் கோப்பை இருக்கக்கூடாது என்று நாங்கள் 2015 ஆம் ஆண்டில் சொன்னோம். அதனடிப்படையில் உலகக் கோப்பைக்குச் செல்லுங்கள், மகிழ்ச்சியோடு இருங்கள் என்று ரசிகர்களுக்கு எனது அறிவுரையை இப்போது நேர்மையாகச் சொல்ல முடியும் என்று பன்னாட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரன் பர்ரோ செய்தி நிறுவனத்திற்கு தெரிவிக்கிறார்.[19] சரன் பர்ரோவின் கூற்றுப்படி, புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கத்தார் இன்னும் முன்னேற வேண்டும் எனத் தெரிகிறது. மற்றும் கடந்த தசாப்தத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் 6000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மரணம் ஒரு கட்டுக்கதை என்றும் இவர் குறிப்பிடுகிறார்.[20]

நடைபெற்ற போட்டிகள்[தொகு]

2021 பிஃபா அராபியக் கோப்பை[தொகு]

நாள் நேரம்(QST) அணி #1 முடிவு அணி #2 சுற்று
1 திசம்பர் 2021  சவூதி அரேபியா 0–1  யோர்தான் குழு C
3 திசம்பர் 2021  ஓமான் 1–2  கத்தார் குழு A
4 திசம்பர் 2021  பலத்தீன் 1–1  சவூதி அரேபியா குழு C
7 திசம்பர் 2021  லெபனான் 1–0  சூடான் குழு D
10 திசம்பர் 2021  தூனிசியா 2-1  ஓமான் காலிறுதி

2022 பிஃபா உலகக் கோப்பை[தொகு]

கல்வி நகரம் விளையாட்டரங்கில் 2022 பிஃபா உலகக் கோப்பையின் எட்டு போட்டிகள் நட்டைபெறுகின்றன.

நாள் நேரம் அணி. 1 முடிவு அணி. 2 சுற்று வருகை
22 நவம்பர் 2022 16:00  டென்மார்க்  தூனிசியா குழு D
24 நவம்பர் 2022 16:00  உருகுவை  தென் கொரியா குழு H
26 நவம்பர் 2022 16:00  போலந்து  சவூதி அரேபியா குழு C
28 நவம்பர் 2022 16:00  தென் கொரியா  கானா குழு H
30 நவம்பர் 2022 18:00  தூனிசியா  பிரான்சு குழு D
2 திசம்பர் 2022 18:00  தென் கொரியா  போர்த்துகல் குழு H
6 திசம்பர் 2022 18:00 குழு F வெற்றியாளர் குழு E இரண்டாமிடம் சுற்று 16 இன் வெற்றியாளர்
9 திசம்பர் 2022 18:00 போட்டி 53 வெற்றியாளர் போட்டி 54 வெற்றியாளர் காலிறுதி ஆட்டம்

மேற்கோள்கள்[தொகு]

 1. "The official completion of Education City Stadium". qatar2022.qa. பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
 2. "Cazorla dazzles as football arrives at Education City". FIFA. பார்க்கப்பட்ட நாள் 4 September 2020.
 3. "Education City Stadium set for COVID-19-themed inauguration". thestadiumbusiness.com. 5 July 2020. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
 4. "'Diamond in the Desert' will shine for FIFA Club World Cup 2020 Final". iloveqatar.net. 10 February 2021. பார்க்கப்பட்ட நாள் 23 November 2021.
 5. "Educaton City Stadium …. Jewel of the Desert". gulf-times.com. 15 May 2019. பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
 6. 6.0 6.1 "Education City stadium will house two Qatar Foundation schools after Qatar 2022 World Cup". thepeninsulaqatar.com. 20 June 2020. பார்க்கப்பட்ட நாள் 25 October 2021.
 7. "Education City Stadium Design". Supreme Committee for Delivery & Legacy. 9 July 2018. Archived from the original on 11 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 8. "Qatar: "In the prime of their lives": Qatar's failure to investigate, remedy and prevent migrant workers' deaths". amnesty.org. 26 August 2021. பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
 9. "FIFA President and Qatar Minister of Labour meet to discuss progress of labour rights". www.fifa.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-07.[தொடர்பிழந்த இணைப்பு]
 10. "FIFA chief Infantino lauds Qatar's labour reforms". ESPN.com (in ஆங்கிலம்). 2022-03-16. பார்க்கப்பட்ட நாள் 2022-04-07.
 11. "Qatar 2022: Football World Cup stadiums at a glance". aljazeera.com. 22 October 2021. பார்க்கப்பட்ட நாள் 15 November 2021.
 12. "Education City Stadium completed". gulf-times.com. 4 June 2020. பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
 13. "Qatar 2022 World Cup venue to host Liverpool games at Club World Cup". bbc.com. 30 September 2019. பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
 14. 14.0 14.1 "600 days to go: Qatar's FIFA World Cup stadiums are looking incredible". thepeninsulaqatar.com. 31 March 2021. பார்க்கப்பட்ட நாள் 9 November 2021.
 15. "Education City and Ahmad Bin Ali stadiums to host FIFA Club World Cup 2020™". 18 January 2021. https://www.fifa.com/clubworldcup/news/education-city-and-ahmad-bin-ali-stadiums-to-host-fifa-club-world-cup-2020tm. 
 16. "2021 FIFA Arab Cup: Participating teams, fixtures and all you need to know". goal.com. 18 December 2021. பார்க்கப்பட்ட நாள் 10 October 2022.
 17. "Amnesty report: Qatar migrant workers trapped and exploited before World Cup". the Guardian (in ஆங்கிலம்). 2021-11-16. பார்க்கப்பட்ட நாள் 2022-09-13.
 18. "Qatar: "In the prime of their lives": Qatar's failure to investigate, remedy and prevent migrant workers' deaths". Amnesty International (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-13.
 19. "WC host Qatar sees 'incredible progress' in labour rights: union head". France 24 (in ஆங்கிலம்). 2022-10-05. பார்க்கப்பட்ட நாள் 2022-10-11.
 20. "WC host Qatar sees 'incredible progress' in labour rights: union head". RFI (in ஆங்கிலம்). 2022-10-05. பார்க்கப்பட்ட நாள் 2022-10-11.