கல்லாறுகுட்டி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லாறுகுட்டி அணை
Kallarkutty Dam
2021-ல் கல்லாறுகுட்டி அணை
கல்லாறுகுட்டி அணை is located in கேரளம்
கல்லாறுகுட்டி அணை
Location of கல்லாறுகுட்டி அணை
Kallarkutty Dam in கேரளம்
கல்லாறுகுட்டி அணை is located in இந்தியா
கல்லாறுகுட்டி அணை
கல்லாறுகுட்டி அணை (இந்தியா)
நாடுஇந்தியா
அமைவிடம்இடுக்கி மாவட்டம், கேரளம்
புவியியல் ஆள்கூற்று9°58′48″N 77°00′05″E / 9.98000°N 77.00139°E / 9.98000; 77.00139
நோக்கம்மின் ஆற்றல்
நிலைசெயல்பாட்டில் உள்ளது
திறந்தது1961 (1961)
உரிமையாளர்(கள்)கேரள மாநில மின்சார வாரியம்
அணையும் வழிகாலும்
வகைபுவியீர்ப்பு அணை
தடுக்கப்படும் ஆறுமுத்திரபுழா ஆறு
உயரம் (அடித்தளம்)43 m (141 அடி)
நீளம்182.88 m (600.0 அடி)
வழிகால்கள்5
வழிகால் வகைஅலைவரை வகை- 5. வட்ட வாயில்கள், ஒவ்வொன்றும் 10.97 x 6.4 மீ அளவு
நீர்த்தேக்கம்
இயல்பான ஏற்றம்456.90 m (1,499.0 அடி)
இணையதளம்
KSEB - Official website

கல்லாறுகுட்டி அணை (Kallarkutty Dam) என்பது இந்தியாவின் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் வெள்ளத்தூவல் பஞ்சாயத்தில் கல்லார்குட்டியில் உள்ள நேரியமங்கலம் நீர்மின் திட்டத்தின்[1] பகுதியாக, பெரியாற்றின் கிளை நதியான முத்திரபுழா ஆற்றின் மீது கட்டப்பட்ட ஈர்ப்பு அணையாகும். செங்குளம் அணையின் நீர்மின் உற்பத்தி நிலையம் மற்றும் முத்திரபுழா ஆற்றிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பாம்பிளா அணைக்கு மேல் உள்ள பனம்குட்டி அருகே உள்ள நேரியமங்கலம் நீர் மின் நிலையத்திற்குத் திருப்பி விடப்படுகிறது. 15 மெகாவாட் திறன் கொண்ட 3 விசையாழிகளைப் பயன்படுத்தி 45 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக 27 சனவரி 1961-ல் நீர் மின் திட்டம் தொடங்கப்பட்டது. 2006ல், இத்திட்டம் 45 மெகாவாட்டிலிருந்து 52.65 மெகாவாட்டாக திட்டமாக மேம்படுத்தப்பட்டது.[2] உடும்பஞ்சோலை, தேவிகுளம், இடுக்கி, கொத்தமங்கலம், மூவாட்டுப்புழா, குன்னத்துநாடு, ஆலுவா, கொடுங்கல்லூர் மற்றும் பரவூர் ஆகிய வட்டங்கள் வழியாக வெளியேற்றும் தண்ணிர்ர் செல்கின்றது.

விவரக்குறிப்புகள்[தொகு]

  • அட்சரேகை: 9⁰ 58′ 48" வ
  • தீர்க்கரேகை: 77⁰ 00′ 05" கி
  • பஞ்சாயத்து: வெள்ளத்தூவல்
  • கிராமம்: வெள்ளத்தூவல்
  • மாவட்டம்: இடுக்கி
  • வடிநிலம்: முத்திரபுழா
  • ஆறு: முத்திரபுழா
  • அணையிலிருந்து ஆற்றுக்கு விடுவிப்பு: முத்திரபுழா
  • நிறைவு ஆண்டு: 1961[3]
  • அணையின் வகை: கொத்து- ஈர்ப்பு
  • வகைப்பாடு: உயர் உயரம்
  • அதிகபட்ச நீர் நிலை (MWL): உயர் மட்டம் 456.90மீ[4]
  • முழு நீர்த்தேக்க நிலை (FRL): உயர் மட்டம் 456.90மீ
  • FRL-ல் சேமிப்பு: 6.8 மிமீ3
  • ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 43.00 மீ
  • நீளம்: 182.88 மீ
  • நீர்க்கசிவு வழி: அலைவரை வகை- 5. வட்ட வாயில்கள், ஒவ்வொன்றும் 10.97 x 6.4 மீ அளவு[5]

நீர்த்தேக்கம்[தொகு]

கல்லாறுகுட்டி அணையானது முத்திரபுழா துணைப் படுகையின் இரு பகுதியிலிருந்தும் நீரைப் பெறுகிறது.[6] இவ்வாறு உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் சுமார் 0.648 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 6.88 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவு கொண்டது.[7] கல்லார்குட்டி நீர்த்தேக்கம் படகு சவாரி மற்றும் பிற நீர்வழிச் சுற்றுலா செயல்பாடுகளை வழங்குகிறது.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Photo Gallery Album | DRIP - Dam Rehabilitation and Improvement Project". damsafety.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.
  2. "Kerala State Electricity Board Limited - Mudirappuzha Basin Hydro Projects". www.kseb.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
  3. "Dams In Idukki – Idukki" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.
  4. "Heavy rain continues: Shutters of Pambla, Kallarkutty dams to be raised". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.
  5. "KALLARKUTTY DAM – KSEB Limted Dam Safety Organisation" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.
  6. "Understanding the 42-year-old Idukki dam which is now saving Kerala". 13 August 2018.
  7. "Reservoirs of Kerala | Fisheries Department - Kerala".
  8. KALLARKUTTY DAM | IDUKKI | Kerala (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-07-25
  9. "kallarkutty dam and boating – CHANNEL TODAY" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லாறுகுட்டி_அணை&oldid=3907263" இலிருந்து மீள்விக்கப்பட்டது