கல்லார் ஆறு (பம்பா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லார் ஆறு

கல்லார் ஆறு (Kallar River (Pamba) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பம்பையாற்றின் துணை ஆறுகளில் ஒன்றாகும். பம்பை ஆறானது தென்னிந்தியாவின் மூன்றாவது நீளமான ஆறாகும். பத்தனம்திட்டா மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள இராண்ணி காடுகளில் கல்லார் ஆறு உருவாகிறது. பெயர் குறிப்பிடுவது போல நதி படுக்கை பெரும்பாலும் கல்லால் ஆனது (கல்லு + ஆர் = கல்லார் ஆறு). வடசெறிக்கறையில் பம்பை ஆற்றுடன் இணைவதற்கு முன்பு அதன் முழு நீளத்தையும் வளமான காடுகள் வழியாக பாய்கிறது. சிறிய கிராமங்களான தண்ணித்தோடு, தெக்குத்தோடு மற்றும் மன்னீரா ஆகியவை இந்த ஆற்றின் கரையில் உள்ள முக்கிய மனித குடியிருப்புகளாகும். கொன்னி வனப் பிரிவில் மன்னீராவில் உள்ள காடு சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது, அங்கு மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள பரிசல் சவாரி செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஆறு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வளமான பன்முகத்தன்மையை ஆதரிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லார்_ஆறு_(பம்பா)&oldid=3775795" இருந்து மீள்விக்கப்பட்டது