உள்ளடக்கத்துக்குச் செல்

கலோனாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலோனாசு
நிக்கோபார் புறா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
கலோனாசு

கலோனாசு (Caloenas) என்பது புறாப் பேரினமாகும் . நிக்கோபார் புறா (சி. நிகோபரிகா ) இன்றைக்கு வாழும் சிற்றினம் ஆகும்.

ஒன்று அல்லது இரண்டு அழிந்துபோன இனங்கள் அறியப்படுகின்றன: கனகா புறா என்பது நியூ கலிடோனியா மற்றும் தொங்காவில் காணப்பட்ட சிற்றினமாகும் இது துணை புதை படிவ எச்சங்களால் மட்டுமே அறியப்படுகிறது. இது ஆரம்பக்கால குடியேற்றக்காரர்களால் வேட்டையாடப்பட்டதால் அழிந்திருக்கலாம். புள்ளி பச்சைப் புறா என்பது அழிந்துபோன மற்றொரு புறா. இதன் கழுத்து இறகுகள் ஒப்புமை காரணமாக நிக்கோபார் புறாவுடன் சிறிது ஒற்றுமையைக் கொண்டுள்ளது. பறவையியலாளர்கள் இதை இந்த பேரினத்தில் வைத்திருந்த போதிலும், இதில் ஒருமனதாக உடன்பாடு இல்லை. இன்று உயிரோடிருக்கும் சிற்றினம் ஒன்று லிவர்பூல் அருங்காட்சியகத்தில் உள்ளது.

வகைப்பாட்டியல்

[தொகு]

1840ஆம் ஆண்டில் இங்கிலாந்து விலங்கியல் வல்லுநர் ஜார்ஜ் ராபர்ட் கிரே என்பவரால் கலோனாசு பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நிக்கோபார் புறா இதில் வைக்கப்பட்டது.[1][2] இதன் பேரினப் பெயர் பண்டைய கிரேக்க காலோசு அதாவது "அழகானது" மற்றும் "புறா" என்று பொருள்படும் ஒய்னாசு என்ற சொல்லினால் இடப்பட்டது.[3]

இந்தப் பேரினத்தில் இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[4]

  • நிக்கோபார் புறா (கலோனாசு நிகோபரிகா)
  • † புள்ளி பச்சை புறா (கலோனாசு மகுலாட்டா)

2,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்ட ஒரு சிற்றினம் சில நேரங்களில் இந்தப் பேரினத்தில் சேர்க்கப்பட்டுகிறது.

  • † கனக புறா (கலோனாசு கனகோரம்) பலுட் & ஓல்சன், 1989

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gray, George Robert (1840). A List of the Genera of Birds : with an Indication of the Typical Species of Each Genus. London: R. and J.E. Taylor. p. 59.
  2. Check-List of Birds of the World. Cambridge, Massachusetts: Harvard University Press. 1937. p. 139.
  3. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 85.
  4. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 22 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலோனாசு&oldid=3848720" இலிருந்து மீள்விக்கப்பட்டது