கறி அரவைக்கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைவிசை கறி அரவைக்கருவி (Alfa Inc)

கறி அரவைக்கருவி (Meat grinder, "meat mincer") என்பது இல்லப் பயன்பொருட்களில் ஒன்றாகும். வேகவைக்காத அல்லது வேகவைத்த இறைச்சி, மீன், காய்கறி அல்லது பிற உணவுகளை, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, இழை போன்றாக்கப் பயன்படுத்தும் கருவியாகும். இது நறுக்குக் கத்திக்கு (mincing knife) மாற்றாக பயன்படும் கருவியாகும். நறுக்கி நசுக்கப்படவேண்டிய உணவு, இக்கருவியின் மேற்பகுதியிலுள்ள, புனலின் உள்ளே வைக்கப்படுகிறது. அதிலிருந்து, அவ்வுணவுப் பொருளை, கிடைமட்டத்தில் சுழலும் திருகாணி முன்செலுத்தும். இவ்வாறு செலுத்த, இக்கருவியின் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் அமைவு உள்ளது. இந்த அமைவு, கையால் இயக்கும்படியாகவோ அல்லது மின்சார விசைப்பொறியாலோ இயக்கப்படும். இத்திருகாணி இட்ட உணவுப் பொருளை நசுக்கி, கலக்குகிறது. திருகாணியின் மறுபுறம் நிலையான தகடு இருக்கும். இது இக்கருவியின் வெளிப்புற கருவிப் பகுதியாக இருக்கும். இக்கருவியிலுள்ள துளையின் அளவைப் பொருத்து, வெளி வரும் நசுக்கப்பட்ட, கலக்கப்பட்ட உணவு தோற்றம் பெறுகிறது. இந்த அரவைக் கருவியை 19ஆம் நூற்றாண்டில் முதலில் கண்டறிந்தவர் கார்ல் திராய்சு (Karl Drais).[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bock, Thomas. "Wenn der Wolf heult". Niedersächsischer Jäger. Digitalmagazin.de. பார்க்கப்பட்ட நாள் 20 October 2023.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கறி_அரவைக்கருவி&oldid=3920183" இலிருந்து மீள்விக்கப்பட்டது