திருகாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலவகையான திருகாணிகள்
பலவகையான திருகாணிகள்

திருகு (screw) மரையாணியைப் பொன்ற பொன்மத் திருகுபுரி (வெளிப்புரி அல்லது துருத்துபுரி (ஆண்புரி) அமைந்த ஒருவகைப் பிணைப்பி/பூட்டி ஆகும்.திருகுபுரி ஆணிமேல் சுருளை அல்லது எழுசுருள் வடிவில் இருக்கும். எனவே, திருகாணி என்பது அழுத்தி முறுக்கித் திருகினால் மரம் அல்லது வேறு செலுத்தப்படும் ஒரு பொருளுள் நகர்ந்து அப்பொருளுள் பதிந்து பற்றிக் கொள்ளும் திருகுபுரி உள்ள ஓர் ஆணி. ஆணி அடித்து சட்டங்களை இணைப்பதுபோல், திருகாணியால் முடுக்கி இணைப்பதும் பரவலாக கைக்கொள்ளும் இணைப்பு முறையாகும். பல வகையான திருகாணிகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.

வலஞ்சுழி திருகாணி. முறுக்கித் திருகும் திசையும், திருகாணி பொருளுள் நகரும் திசையும் காட்டப்பட்டுள்ளன

விளக்கம்[தொகு]

திருகு என்பது ஓர் ஆணியில் சுற்றிவைத்த சாய்தளம் ஆகும். சில திருகு புரிகள் நிரப்பு புருயுடன் இணையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிரப்பு புரி பெண்புரி அல்லது ஏற்பு புரி எனப்படுகிறது. பின்னது ஒரு மரையாகவோ அகப்புரி வெட்டிய குழலாகவோ அமையலாம். பிற திருகுகள் மென்மையான பொருளில் திருகும்போது ஊடுருவி சுருளை அல்லது எழுசுருள் வகைக் காடியை வெட்டும்படி வடிவமைக்கபட்டுள்ளன. பொதுவாக திருகுகள் பொருள்களை ஒன்றாகச் சேர்த்துப் பிடிக்கவும் குறிப்பிட்ட இருப்புகளில் அவற்றை நிறுத்தவும் பயன்படுகின்றன.

பெரும்பாலான திருகுகள் கடிகாரச் சுழல்முறையில் திருப்பி இறுக்கப்படுகின்றன. இது வலஞ்சுழி புரியமைப்பு எனப்படுகிறது; "வலதே இறுக்கு; இடதே தளர்த்து" எனும் பொதுவான நினைவுகொள் மொழி திருகின் இயக்கத்தில் பயன்படுகிறது திருகை முடுக்குவதற்கான மற்றொரு விதி பன்வருமாறு: திருகை வலது கையால் பிடிக்கும்போது கட்டை விரல் காட்டும் திசையில் திருகு நகரும். திருகு வலஞ்சுழியினதாக இருந்தால் முடுக்குதல் விரல்களின் திசையில் இருக்கும்போது திருகு கட்டை விரல் திசையில் நகரும். இடஞ்சுழித் திருகுகள் சில விதிவிலக்குகளில் மட்டுமே பயன்படும். குறிப்பாக திருகு இடஞ்சுழித் திருக்கத்துக்கு ஆட்படும்போது, வலஞ்சுழி புரி கழன்றுவிடும் என்பதால், இடஞ்சுழி புரிதான் சரியான தகுந்த தேர்வாகும். மிதிவண்டியின் வலது பக்க மிதியில் இடஞ்சுழி திருகுபுரிகள் அமைந்துள்ளன.

திருகின் ஒரு முனையில் தலை அமையும். தலை கருவியால் திருப்ப அல்லது முடுக்கிச் செருக ஏற்றபடியான சிறப்பு வடிவமைப்பைப் பெற்றிருக்கும். திருகுகளை முடுக்க பொதுவாக திருகுமுடுக்கிகளும் கவ்விகளும் பயன்படுகின்றன. தலை திருகுடலை விட பெரியதாக இருக்கும். இது திருகு நீளத்தை விட திருகை ஆழமாக திருகவிடாமல் காக்கும். மேலும் தலை தாங்கும் பரப்பு ஆகவும் அமையும். இதற்கு விதிவிலக்குகள் உண்டு;எடுத்துகாட்டாக, உள்முடுக்கத் தேவையற்ற ஊர்தி மரையாணிகலின் தலைகள் குவிமுக வடிவில் அமைகின்றன; அமைப்புத் திருகுகளின் தலைகள் திருகின் வெளி விட்டத்தைக் காட்டிலும் சிறியனவாக அமைகின்றன. உள்முடுக்கத் தேவையற்ற J-திரிகுகள்J-வடிவத் தலையைப் பெற்றுள்ளன. இவை உள்ளே முடுக்கப்படுவதில்லை; மாறாக கற்காரைக்குள் புதைக்கப்படுகின்றன. எனவே இவை நங்கூர மரையாணிகளாகப் பயன்படுகின்றன. தலை முதல் நுனி வரை தலைக்குக் கீழே உள்ள உருளைப் பகுதி உடல் அல்லது தண்டு எனப்படுகிறது; இதில் புரிகள் முழுவதுமோ அல்லது ஒரு பகுதி வரை மட்டுமோ வெட்டப்பட்டிருக்கலாம்.[1] ஒவ்வொரு புரிக்கும் நடிவில் அமையும் தொலைவு புரியிடைத் தொலைவு அல்லது வெறுமனே "புரியிடை" எனப்படும்.

மிகப்பொதுவாக, திருகு என்பது பற்றி, நுண்ணளவி, கப்பல் முற்செலுத்தி, அல்லதுஆர்க்கிமெடீசு திருகு நீரெக்கி போன்ற எதையும் குறிப்பிடலாம்.

மரையாணி, திருகாணி வேறுபாடு[தொகு]

சதுர மரை உள்ள ஊர்தி/ஏந்தி மரையாணி
அணைவலயமும் அறுகோண மரையும் உள்ள கட்டக மரையாணி

மரையாணி, திருகாணி இடையே உலகளாவியளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணிசமான வேறுபாடு எதுவும் இல்லை.

மிக எளிய வேறுபாடு இருப்பது கண்கூடான உண்மை என்றாலும், தெளிவான வேறுபாட்டை வகைப்படுத்த இயலவில்லை, அதாவது மரையாணி இணைக்கப்படவேண்டிய இரு பொருள்கள் வழியாக நுழைந்து அப்பொருளின் மற்றொரு பக்கத்திலுள்ள மரைவில்லையினுள்ளே(NUT) திருகுவதின் மூலம் அவ்விரு பொருட்களை இணைக்கிறது; அதே நேரத்தில் ஒரு திருகாணி எந்தவிதமான கூடுதல் கருவிகளின் உதவியுமின்றி நேரடியாகவே இருபொருள்களினுள்ளேயுள்ள மறையின் வழியே திருகுவதின் மூலம் எளிதில் இருபொருட்களையும் இணைக்கிறது.திருகு ஒரு பொருளுக்குள் முடுக்கப்படுகிறது; மரையாணி பல பொருள்களை இணைக்கிறது. எனவே பொதுவாக திருகுகளை வாங்கும்போது மரைகள் ஏதும் தரப்படுவதில்லை. ஆனால், மரையாணிகள் எப்போதும் மரைகளுடனே விற்கப்படுகின்றன.வட்டார அல்லது திசை மொழி வேறுபாட்டலும் இந்தக் குழப்பம் விளைகிறது. எந்திரங்களின் கையேடு இந்த வேறுபாட்டைப் பின்வருமாறு விவரிக்கிறது:

A bolt is an externally threaded fastener designed for insertion through holes in assembled parts, and is normally intended to be tightened or released by torquing a nut. A screw is an externally threaded fastener capable of being inserted into holes in assembled parts, of mating with a preformed internal thread or forming its own thread, and of being tightened or released by torquing the head. An externally threaded fastener which is prevented from being turned during assembly and which can be tightened or released only by torquing a nut is a bolt. (Example: round head bolts, track bolts, plow bolts.) An externally threaded fastener that has thread form which prohibits assembly with a nut having a straight thread of multiple pitch length is a screw. (Example: wood screws, tapping screws.)[2]

சில அகராதிகளின் வரையறைகளுடனும் ASME B18.2.1 பிரிவுடனும் திருகு[3][4] மரையாணி யின் வேறுபாடு ஒத்துபோகிறது.[5][6][7]

எந்திரங்களின் கையேடு வழி எது திருகு, எது மரையாணி எனும் வேறுபாட்டுச் சிக்கல் முழுமையாகத் தீர்க்கப்படுவதில்லை. என்றாலும், இந்த முரண்பட்ட சொற்களால் சில பகுதிப் பெயர்களின் வேறுபாடும் பயன்பாடும் குழப்பம் தருவதாகவே உள்ளது.[8][not in citation given] இந்தச் சில சிக்கல்கள் கீழே விவரிக்கப்படுகின்றன:

எந்திரத் திருகுகள்[தொகு]

ASME செந்தரங்கள் பலவகை "எந்திரத் திருகுகள்" பற்றிக் குறிப்பிடுகிறது[9] இவற்றின் விட்டங்களது நெடுக்கம் 0.75 அங்குலம் (19.05 மி.மீ) வரை வேறுபடுகிறது. இவை அடிக்கடி மரைகளுடன் பயன்படுகின்றன. ஆனால், இவை மரைகள் இல்லாமலும் மடுத்தப் துளைகளில் முடுக்கப்படுவதுண்டு. எந்திரங்கலின் கையேட்டு வேறுபாட்டின்படி இவற்றைத் துருகாகவோ மரையாணியாகவோ கருதலாம். நடைமுறையில், இவை பெரும்பாலும் சிறிய திருகுகளுக்கே குறிப்பிடப்படுகின்றன. சிறிய திருகுகள் எப்போதுமே எந்திரத் திருகுகள் என்றே அழைக்கப்படுகின்றன. என்றாலும் சிலவகை எந்திரத் திருகுகள் அடுப்பு மரையாணிகள் எனப்படுவதும் உண்டு.

மரையாணி எப்பொழுது மரைவில்லையுடன் சேர்த்தே பயன்படும். திருகாணிகளை திருகுவதற்கு திருப்புளிகள் மட்டுமே பயன்படுத்தலாகாது, சில சமயங்களில் திருகுச்சாவிகளும் பயன்படுத்த நேரிடும்.

அறுபக்கக் கவிப்புத் திருகுகள்[தொகு]

ASME செந்தரம் B18.2.1-1996 பிரிவு விட்டத்தில் 0.25–3 அங்குலம் (6.35–76.20 மி.மீ) உருவளவு நெடுக்கம் உள்ள அறுபக்கக் கவிப்புத் திருகுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவை மிக நெருக்கமாக அறுகோண மரையாணிகளைப் போன்றவையே ஆகும். ஒரே வேறுபாடு இவை அறுகோண மரையாணிகளை விட கூடுதல் பொறுதியுடன் செய்யப்படுகின்றன என்பதே ஆகும். எந்திரங்களின் கையேடு இவற்றைச் " சீர்பட்ட அறுகோண மரையாணிகள்" எனக் கூறுகிறது" [10]

திருகாணியின் தலை வடிவங்கள்[தொகு]

(அ) கிண்ணம்(pan), (ஆ) குவிமுகம் அல்லது பொருத்தான், (இ) உருண்டை (ஈ) தூலம் (காளான்), (உ) தட்டை (உள்பட்டை வெட்டியது), (ஊ) முட்டை வடிவிலான (எழுநிலைத் தலை)
கணினியில் பயன்படுத்தப்படும் அறுகோண விளிம்பும் பிலிப்ஸ்-தலையும் அமைந்த திருகு
கிண்ணத் தலை
ஒர் உருண்ட வெளிப்புற விளிம்புடன் கூடிய குழிந்த வட்டு அமைப்பில் இருக்கும்.
பொருத்தான் (அ) குவிமுகத் தலை)
உச்சி குவிந்த உருளை வடிவத் தலை.)
உருண்டைத் தலை
குவிமுகத் தலை அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.[11]
காளான் (அ) தூலத் தலை)
குறுக்கீட்டினைத் தவிர்க்க, தாழ்ந்த குவிமுக அமைப்பு பயன்படுகிறது.
உட்சரி கூம்பு (அ) தட்டைத் தலை)
வெளிப்புறக் கூம்பிய தட்டையான முகப்பும், உள்புறஞ் சரிந்த முகப்பும் கொண்ட தலை, திருகாணியைத் திருகும் பொருளினுள்ளே மூழ்கவிடும். இவ்வமைப்பில் திருகாணியின் தலை வெளியே துருத்திக்கொண்டிருக்காது. திருகுபுரிக் கோணம் தலைக்கூம்பின் முழுக்கோண அளவாக அமையும்.
முட்டை (அ) எழுந்த தலை
கீழே உட்சரிந்த கூம்பிய பட்டை வெட்டும் உச்சி உருண்டையான தலையுடனும் உள்ள அலங்காரத் திருகாணி.[11] மேலும் இது எழுந்த உட்சரிகூம்புத் தலை எனப்படுகிறது." (UK)
ஊதல் தலை
உட்சரிகூம்பு வடிவத்தை ஒத்தது, ஆனால் தண்டிலிருந்து தலைக்கு சிறிய அளவிலான கோணமே ஊதுகுழல் போன்று அமைந்திருக்கும்.
மட்டத்தலை (Cheese head)
உருளை வடிவ வெளிவிளிம்புள்ள வட்டு அமைப்பு. தோராயமாக, இதன் உயரம் தலையின் விட்டத்தில் பாதியாக இருக்கும்.
விளிம்புவெட்டுத் தலை (fillister head)
சற்று குவிந்த உச்சியுடன் கூடிய உருளை வடிவம். இதன் உயரத்துக்கும், விட்டத்திற்கும் உள்ள விகிதம் 'மட்டத்தலையை' விட பெரியதாக இருக்கும்.
விளிம்புத் தலை
விளிம்புத் தலை உட்சரிகூம்பு வடிவத்தைத் தவிர மேலே சொன்னவற்றில் அனைத்து வகை தலையுடனும் தலையின் அடியில் ஒருங்கிணைந்த தகட்டு விளிம்புடன் அமைந்திருக்கும், இது தட்டை அணைவலயத்தின் (flat washer) பயன்பாட்டின் தேவையை நீக்குகிறது.

அதிகப்படியான திருக்கம் பயன்படும்போது இவை கழன்றுவிழ, சில திருகாணிகள் முறியும் தலையுடன் செய்யப்படுகின்றன. இது எளிதில் இணைப்போடு குறுக்கிட முடியாத காப்பைத் தருவதோடு, தகுந்தபடி இணைப்புகள் செய்யப்பட்டுள்ளனவா எனச் சரிபார்க்கவும் உதவுகிறது. எடுத்துகாட்டாக, ஊர்திகளின் திசைமாற்றித் தண்டுகளில் பற்றவைப்பு நிலைமாற்றியைக் காப்பாகச் செருகப் பயன்படும் துணிப்புவகை மரையாணிகளைக் கூறலாம்.

திருகு முடுக்கிகளின் வகைகள்[தொகு]

Part of a series on
Screw drive types
பிளவு
பிலிப்ஸ்
PH
Pozidriv (SupaDriv)
PZ
சதுர
Robertson
அறுகோணவுரு
படிமம்:Screw Head - 12-Point External.png
12-point flange
Hex socket (Allen)
Security hex socket (pin-in-hex-socket)
Torx
T & TX
Security Torx
TR
Tri-Wing
Torq-set
திருகுச்சாவி திருப்புளி
(Snake-eye)
TH
Clutch
A & G
ஒருவழி திருப்புளி
இரட்டைச் சதுரம்
மூச்சதுரம்
XZN
பலவடிவ இயக்கி
Spline drive
இரட்டை அறுகோணம்
Bristol
Pentalobe

நிகழ்காலத் திருகுகள் பலவகை முடுக்குதல் வடிவமைப்புகலப் பயன்படுத்துகின்றன. ஒவ்வொன்றுக்கும் முடுக்கவும் கழற்றவும் ஒரு தனிக் கருவி தேவைப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் காடியிட்ட திருகு முடுக்கியும் பிலிப்சு திருகு முடுக்கியும் பரவலான பயன்பாட்டில் உள்ளன; சில பயன்பாடுகளில் அறுகோணவகையும் இராபர்ட்சன் வகையும் டார்க்சு வகையும் பரவலாக பயன்படுகின்றன. ஐரோப்பாவில் போழிமுடுக்கி ( Pozidriv) பிலிப்சு முடுக்கியைப் பதிலீடு செய்துவிட்டது. தானூர்திகளைப் போன்ற பெருந்திரளாக்கத் தன்னியக்கப் பூட்டலில் சில சிறப்புவகைத் திருகு முடுக்கிகள் தேவையாகின்றன. குறுக்கீடுகளைத் தவிர்க்கவேண்டிய சூழல்களில் ஏறுமாறான திருகு முடுக்கிகள் பயன்படுத்த நேரலாம். எடுத்துகாட்டாக, வீட்டுப் பயனர் பழுதுபார்ப்பு மேற்கொள்வதைத் தவிர்க்கும் மின்னனியல் பயன்கருவிகளைக் கூறலாம்.

கருவிகள்[தொகு]

திருகை முடுக்கும் கைக்கருவி திருகுமுடுக்கி எனப்படுகிறது. அதே பணியைச் செய்யும் மின்கருவி மின் திருகுமுடுக்கி எனப்படும்; திருகு முடுக்கும் இணையேந்துடன் மின் துரப்பணங்களையும் திருகை முடுக்கப் பயன்படுத்தலாம்.திருகு இணைப்பின் பிடிதிறம் உய்யநிலையில் உள்ளபோது திருகுங்கால் கூடுதல் விசை செயல்படுவதைத் தவிர்க்க, திருக்கம் அளக்கும் அல்லது திருக்கம் கட்டுபடுத்தும் திருகு முடுக்கிகளைப் பயன்படுத்தலாம். அறுகோனத் திருகுக்குக் கவ்வி அல்லது திருகு கழற்றியைப் பயன்படுத்தலாம். இதற்கு மின்முடுக்கி பயன்படுத்தப்பட்டால், அப்போது நாம் ஒரு மரைப்படிவியைப் பயன்படுத்தலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Smith 1990, ப. 39.
  2. Oberg et al. 2000, ப. 1492.
  3. "Cambridge Dictionary of American English". Cambridge University Press. Archived from the original on 2008-12-06. பார்க்கப்பட்ட நாள் 2008-12-03.
  4. "allwords". பார்க்கப்பட்ட நாள் 2008-12-03.
  5. "Merriam Webster Dictionary bolt". பார்க்கப்பட்ட நாள் 2008-12-03.
  6. "Compact Oxford English Dictionary bolt". Oxford. Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2008-12-03.
  7. "Cambridge Advanced Learner's Dictionary bolt". Cambridge University Press. Archived from the original on 2008-12-06. பார்க்கப்பட்ட நாள் 2008-12-03.
  8. "The Fastener Resource Center - Know your Bolts". பார்க்கப்பட்ட நாள் 2011-03-13.
  9. Oberg et al. 2000, ப. 1568–1598.
  10. Oberg et al. 2000, ப. 1496.
  11. 11.0 11.1 Mitchell, George (1995), Carpentry and Joinery (3rd ed.), Cengage Learning, p. 205, ISBN 978-1-84480-079-7.

நூல்தொகை[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Screws
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:EB9 poster

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருகாணி&oldid=3558118" இலிருந்து மீள்விக்கப்பட்டது