திருப்புளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்புளி
வகைப்பாடு கை இயந்திரம்
வகைகள் பல

திருப்புளி (screw driver) அல்லது திருகாணிச் செலுத்தி அல்லது திருகாணி முடுக்கி என்பது திருகாணிகளைச் சுழற்றப் பயன்படுத்தப்படும் ஓர் எளிய இயந்திரம். திருகாணிகளின் வகையைப் பொறுத்து திருப்புளிகளில் பல வகைகள் உள்ளன. மின்னாற்றலில் இயங்கக் கூடிய திருப்புளிகளும் புழக்கத்தில் உள்ளன.

பெரும்பாலான திருகாணிகளைக் கழற்ற திருப்புளியை வலஞ்சுழியாகவும், பொருத்த இடஞ்சுழியாகவும் சுழற்ற வேண்டும். இதற்கான காரணம் மனிதனின் உடலில் உள்ள வலஞ்சுழி சுழற்றும் தசைகள் (supinators) இடஞ்சுழி சுழற்றும் தசைகளை (pronators) விட வலிமையானதாக இருப்பதே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்புளி&oldid=2229642" இலிருந்து மீள்விக்கப்பட்டது