கர்நாடக அரசு சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்நாடக அரசு சின்னம்
விபரங்கள்
பாவிப்போர்கர்நாடக அரசு
Crestஅசோக சிங்கத் தூபி
விருதுமுகம்இருதலைப்புல்லி
Supportersயாளி
குறிக்கோளுரை"सत्यमेव जयते" (சத்யமேவ ஜெயதே)

கர்நாடக அரசு சின்னம் ( coat of arms of Karnataka ) என்பது இந்திய மாநிலமான கர்நாடகத்தின் அரசு சின்னமாகும். இந்தச் சின்னம் மைசூர் இராச்சியத்தின் சின்னத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த சின்னம் கர்நாடக அரசின் அனைத்து அதிகாரபூர்வ கடிதங்களிலும் இடம்பெற்றுள்ளது. சின்னத்தின் மையத்தில் சிவப்பு நிறக் கேடயமும் அதில் வெள்ளை நிற கண்டபெருடா என்னும் இருதலைப்புல்லியும் (இருதலைப் பறவை) உள்ளது. இந்தக் கேடயத்தின் மேலே அசோகத் தூபியின் சிங்கமும் (இது இந்திய அரசு சின்னமாக) உள்ளது. அதன் பீடத்தில் நீல நிறத்தில் தர்மசக்கரமும், சக்கரத்தின் இருபுறங்களிலும் குதிரை, காளை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. கேடயத்தின் மீது கால்வைத்தபடி மஞ்சள் நிறத்தில் சிவப்பு பிடரியுடன் இரு பக்கங்களிலும் சிங்க உடலும் யானையின் துதிக்கையும் உடைய யாளிகள் (இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என தொன்மங்களில் கூறப்பட்டுள்ளது.) பச்சை இலைமீது நிற்பதுபோல் உள்ளன. இதன் கீழே தேவநாகரியில், "सत्यमेव जयते" (சத்யமேவ ஜெயதே), என்ற சமசுகிருத வாக்கியம் இடம்பெற்றுள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 2013-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131005085933/http://karunadu.gov.in/Pages/Default.aspx. பார்த்த நாள்: 2013-09-17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடக_அரசு_சின்னம்&oldid=3586496" இருந்து மீள்விக்கப்பட்டது