உள்ளடக்கத்துக்குச் செல்

கர்ட் கோபேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்ட் டோனால்ட் கோபேன் (1992)
கர்ட் கோபேன்
1992 எம்டிவி வீடியோ இசை விருதுகளில் நிர்வாணாவுடன் கோபேன் நிகழ்ச்சி நடத்துகிறார்.
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கர்ட் டோனால்ட் கோபேன்
பிற பெயர்கள்கர்ட் கேபேன்
பிறப்பு(1967-02-20)பெப்ரவரி 20, 1967
அபெர்டீன், வாசிங்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புc. ஏப்ரல் 5, 1994(1994-04-05) (அகவை 27)
சியாட்டில், வாசிங்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இசை வடிவங்கள்ராக், கிரஞ்சு
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடலாசிரியர்
இசைக்கருவி(கள்)பாடுதல், கிதார்
இசைத்துறையில்1987–1994
இணைந்த செயற்பாடுகள்நிர்வாணா இசைக்குழு

கர்ட் டோனால்ட் கோபேன் (Kurt Donald Cobain) (பிப்ரவரி 20, 1967 – சிர்கா. ஏப்ரல் 5, 1994) ஓர் அமெரிக்க இசைக்கலைஞரும், முன்னணி பாடகரும், கித்தார் கலைஞரும், பாடலாசிரியரும் மற்றும் கிரஞ்சு இசைக்குழுவான நிர்வாணாவின் நிறுவன உறுப்பினரும் ஆவார். இவரது கோபமான பாடல் எழுதுதல் மற்றும் நிறுவன எதிர்ப்பு ஆளுமை மூலம், இவரது இசையமைப்புகள் பிரதான ராக் இசையின் கருப்பொருள் மரபுகளை விரிவுபடுத்தின. இவர் எக்ஸ் தலைமுறையின் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் மிகவும் செல்வாக்கு மிக்க ராக் இசைக்கலைஞர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்படுகிறார்.

கோபேன் 1987 ஆம் ஆண்டில் கிறிஸ்ட் நோவோசெலிக் மற்றும் ஆரோன் பர்க்ஹார்டுடன் இணைந்து நிர்வாணா இசைக்குழுவை உருவாக்கினார்.

இசைப் பயணம்

[தொகு]

இசைக்குழு ப்ளீச் (1989), சப் பாப்பில் போன்ற தங்கள் முதல் இசைத் தொகுப்புகளை வெளியிட்டது. இவர்களின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நெவர்மைண்ட் (1991) என்ற இரண்டாவது இசைத் தொகுப்பிலிருந்து " ஸ்மெல்ஸ் லைக் டீன் ஸ்பிரிட் " என்ற தனிப்பாடல் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. " கம் அஸ் யூ ஆர் ", " லித்தியம் ", " இன் ப்ளூம் ", " ஹார்ட்-ஷேப்டு பாக்ஸ் ", " ஆல் அப்பாக்கலஜிஸ் ", " அபௌட் எ கேர்ள் ", " அனியூரிஸம் ", " யூ நோ யூ ஆர் ரைட் " மற்றும் " சம்திங் இன் தி வே " போன்ற பல பல நிர்வாணா பாடல்களை கோபேன் எழுதினார்.[1][2] நிர்வாணாவின் திடீர் வெற்றியைத் தொடர்ந்து இவர் தனது தலைமுறையின் குரலாகப் பாராட்டப்பட்டாலும், இது இவருக்கு சங்கடமாக இருந்தது.[3]

இறுதி நாட்கள்

[தொகு]

தனது வாழ்வின் இறுதி வருடங்களில் கோபேன் ஹெராயின் போதைப் பொருட்களின் பழக்கத்திற்கு அடிமையானது, மன அழுத்தம் மற்றும் உடல்நிலைக் கோளாறு, அவரது புகழ் மற்றும் பொதுத் தோற்றம், அதே போல தன்னையும் சக இசைக்கலைஞரான கர்ட்னி லவ் என்பவருடனான திருமணம் மூலம் சூழ்ந்துள்ள தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியிலான அழுத்தங்கள் ஆகியவற்றோடு போராடினார்.[4] இவருக்கு பிரான்சிஸ் என்ற மகள் இருந்தாள்.[5] போதைப் பொருள அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்தார். ஏப்ரல் 8, 1994 அன்று, தனது 27 வயதில் சியாட்டிலில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார்.[6] இவர் மூன்று நாட்களுக்கு முன்பே தனது தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதால் இறந்துவிட்டார் என்று காவல் துறையினர் முடிவு செய்தனர்.[7]

மரபு

[தொகு]
விரெட்டா பூங்காவிலுள்ள மர இருக்கை குறிப்பிடத் தக்க நினைவுச் சின்னமாக மாறியுள்ளது.
2005 இல், வாசிங்டனின் அபெர்டீனில் ஓர் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது, அதில் கோபேனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக "அபெர்டீனுக்கு வருக - நீங்கள் நீங்களாகவே வருக" கூறப்பட்டுள்ளது.

இவரது மரணத்தை பின் தொடர்ந்த வருடங்களில், கோபேன் மாற்று இசையின் வரலாற்றில் மிகுந்த அடையாளச் சின்னமுடைய ராக் இசையமைப்பாளர்களில் ஒருவராக நினைவுக் கூறப்படுகிறார். இவர் ரோலிங் ஸ்டோன் னினால் 12 ஆவது மிகச் சிறந்த கித்தார் இசைக் கலைஞராகவும் எக்காலத்திற்குமான 45 ஆவது பாடகராகவும் எம்டிவியினால் "இசையின் மிகச் சிறந்த குரல்களிலும் 22" தர வரிசைபடுத்தப்பட்டார். 2005 ஆம் ஆண்டில், வாசிங்டனின் அபெர்டீனில் ஓர் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. அதில் கோபேனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக "அபெர்டீனுக்கு வருக - நீங்கள் நீங்களாகவே வருக" பொறிக்கப்பட்டது.

கோபேனுக்கு கல்லறை கிடையாது என்பதால் (அவர் எரியூடப்பட்டார். இவரது சாம்பல் வாசிங்டனின் விஷ்காக் ஆற்றில் பரவலாக தூவப்பட்டது),[8] பல நிர்வாணா ரசிகர்கள் விராட்டா பூங்காவிற்கு அஞ்சலி செலுத்த வருகை தருகின்றனர். அது கோபேனின் முன்னாள் வீட்டிற்கு அருகிலுள்ளது. இவரது மறைவு நினைவு நாளின் போது, இரசிகர்கள் பூங்காவில இவரது வாழ்வு மற்றும் நினைவினை கொண்டாடக் கூடுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shoup, Brad (மார்ச் 24, 2022). "'I Will Crawl Away For Good': 20 Years Ago, Nirvana Reconquered Modern Rock With an Uncanny Old New Song". Billboard. Retrieved மார்ச் 25, 2022.
  2. Petridis, Alexis (June 20, 2019). "Nirvana's 20 greatest songs – ranked!" (in en-GB). The Guardian இம் மூலத்தில் இருந்து June 5, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200605091801/https://www.theguardian.com/music/2019/jun/20/nirvanas-20-greatest-songs-ranked. 
  3. Hilburn, Robert (ஏப்ரல் 5, 2019). "From the Archives: Nirvana's Kurt Cobain was a reluctant hero who spoke to his generation". The Los Angeles Times. Retrieved சனவரி 9, 2024.
  4. Mazullo, Mark (2000). "The Man Whom the World Sold: Kurt Cobain, Rock's Progressive Aesthetic, and the Challenges of Authenticity". The Musical Quarterly (ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்) 84 (4): 713–749. doi:10.1093/mq/84.4.713. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-4631. https://archive.org/details/sim_musical-quarterly_winter-2000_84_4/page/n188. 
  5. Hirschberg, Lynn. "Strange Love: The Story of Kurt Cobain and Courtney Love" (in en). HWD இம் மூலத்தில் இருந்து December 15, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161215104313/http://www.vanityfair.com/hollywood/2016/03/love-story-of-kurt-cobain-courtney-love. 
  6. "The27s.com roster". சனவரி 20, 2018. Archived from the original on சனவரி 20, 2018.
  7. "Kurt Cobain's Downward Spiral and Last Days". Rolling Stone (in அமெரிக்க ஆங்கிலம்). சூன் 2, 1994. Retrieved அக்டோபர் 17, 2024.
  8. கர்ட் கோபேன் (1967 - 1994) - ஃபண்ட் அ கிரேவ் மெமோரியல்

நூல் ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ட்_கோபேன்&oldid=4380920" இலிருந்து மீள்விக்கப்பட்டது