கரும்பழுப்பு காட்டுச்சில்லை
கரும்பழுப்பு காட்டுச்சில்லை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எம்பெரிசிடே
|
பேரினம்: | எம்பெரிசா
|
இனம்: | எ. சிம்செனி
|
இருசொற் பெயரீடு | |
எம்பெரிசா சிம்செனி (மார்டென்சு, 1906) | |
வேறு பெயர்கள் | |
|
கரும்பழுப்பு காட்டுச்சில்லை (Slaty bunting)(எம்பெரிசா சிம்செனி என்பது எம்பெரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.
தோற்றம்
[தொகு]ஒரு வயதுடைய கரும்பழுப்பு காட்டுச்சில்லை 13 சென்டிமீட்டர் நீளமும் 20 கிராம் எடையும் கொண்டது. இதன் இறகுகள் பழுப்பு நிறமாகவும், நுனியை நோக்கி அகலமான அசாதாரண வால் இறகுகளுடன் மிகவும் தனித்துவமாகவும் இருக்கும். இதன் அலகு ஒப்பீட்டளவில் சிறியது மற்றும் நேர்த்தியானது.
சரகம்
[தொகு]கரும்பழுப்பு காட்டுச்சில்லை சீனாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி.[1]
வாழ்விடம்
[தொகு]கரும்பழுப்பு காட்டுச்சில்லையின் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான புதர் நிலமாகும் .
உணவு
[தொகு]கரும்பழுப்பு காட்டுச்சில்லையின் உணவில் விதைகள், பூச்சிகள் மற்றும் பிற சிறிய முதுகெலும்பில்லாத உயிரினங்கள் அடங்கும்.
பாதுகாப்பு நிலை
[தொகு]கரும்பழுப்பு காட்டுச்சில்லையின் வாழ்வு உலகளவில் அச்சுறுத்தப்படவில்லை. இருப்பினும், விவசாயத்திற்காக இடம்பெயர்தல் மற்றும் தாவரங்களை அகற்றுதல் ஆகியவை சீனாவில் இந்த இனம் எதிர்கொள்ளும் சில அச்சுறுத்தல்களாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2019). "Emberiza siemsseni". IUCN Red List of Threatened Species 2019: e.T22720875A155525664. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22720875A155525664.en. https://www.iucnredlist.org/species/22720875/155525664. பார்த்த நாள்: 12 November 2021.
- மிசாச்சி, ஜான். "சீனாவை பூர்வீகமாகக் கொண்ட பறவை இனங்கள்." WorldAtlas, 31 அக்டோபர் 2016, https://www.worldatlas.com/articles/the-native-birds-of-china.html .