கருப்பசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Sangilikarupar.jpg

கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை சங்கிலி கறுப்பன் என்றும் அழைப்பதுண்டு. கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.

உருவம்[தொகு]

நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை, ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார்.[1]

நம்பிக்கை[தொகு]

கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம். இவை இந்தத் தெய்வத்தை அழைக்கும் பெயர்கள். 'காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்குக் குதிக்காலின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் பழக்கம் இருந்துவந்தது. இந்த வழக்கில் 'கருப்பு' என்னும் சொல் பேயை உணர்த்தும். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும் பொருள்களும் உண்டு. கரும்பு சாற்றைக் கருப்பஞ்சாறு என்கிறோம். அதுபோலக் கருப்புசாமியைக் கருப்பசாமி எனவும் வழங்குகிறோம். [2]

கோயில்[தொகு]

தமிழ்நாட்டு காவல் தெய்வங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முக்கிய தெய்வமாக கருப்புசாமி அருள்பாலித்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராம கோயில்களே இல்லை என கூறும் அளவிற்கு இந்த கடவுள் தமிழரின் வாழ்வில் ஒன்றியுள்ளார்.

விளைநிலங்களில்[தொகு]

விளைநிலங்களின் காவல் தெய்வமாக நாட்டுப்புற மக்கள் கருப்பனாரை வழிபடுகின்றனர். விளைநிலத்தின் ஒரு பகுதியில் மரத்தடியில் நடப்பட்ட கல்லை கருப்பனாராகக் கருதி ஆண்டுக்கொருமுறை சேவலைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.

கருப்புசாமிக்கு பிற பெயர்கள்[தொகு]

 • மார்நாடு கருப்பசாமி (சின்னப்பேராலி, விருதுநகர்)
 • சங்கிலி கருப்பன்
 • கருப்பனார் சாமி
 • குல கருப்பனார்
 • கருப்பனார்
 • பதினெட்டாம்படியன் (ஐயப்பனின் பதினெட்டு படிகளுக்கும் காவல் தெய்வமாக இவர் விளங்குவதால் இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது.)
 • சின்ன கருப்பசாமி
 • பெரிய கருப்பசாமி
 • மீனமலை கருப்பசாமி
 • முன்னோடை கருப்பசாமி
 • நொண்டி கருப்பசாமி
 • ஒண்டி கருப்பசாமி
 • கொம்படி கருப்பண்ணசாமி (வாடிப்பட்டி ஸ்ரீ கருப்பசாமி)
 • கோட்டை வாசல் கருப்பசாமி
 • அச்சன்கோவில் கருப்பசாமிu.
 • மடை கருப்பசாமீ

அடிக்குறிப்பு[தொகு]

 1. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=130
 2. கறுப்பு = சினம் - 'கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள' - தொல்காப்பியம் உரியியல். கருப்பு = கருமைநிறம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பசாமி&oldid=1810145" இருந்து மீள்விக்கப்பட்டது