உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சுழி

ஆள்கூறுகள்: 9°32′00″N 78°11′58″E / 9.5332309°N 78.199396°E / 9.5332309; 78.199396
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சுழி
—  ஊராட்சி  —
திருச்சுழி
அமைவிடம்: திருச்சுழி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°32′00″N 78°11′58″E / 9.5332309°N 78.199396°E / 9.5332309; 78.199396
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி திருச்சுழி
சட்டமன்ற உறுப்பினர்

தங்கம் தென்னரசு (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருச்சுழி (ஆங்கிலம் : Tiruchuli) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்ட தலைநகர் ஆகும். இது திருச்சுழி ஊராட்சியில் உள்ளது. இவ்வூர் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்தது. திருச்சுழி அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சட்டமன்ற தொகுதியாகும். திருச்சுழி நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

இந்த ஊர் அருப்புக்கோட்டைக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், இரமண மகரிசி அவதரித்த புண்ணியதலமாகும். இங்குள்ள திருச்சுழி திருமேனிநாதர் கோயில் சிவாலயம், தென்னிந்தியாவில் உள்ள பழம்பெரும் கோயில்களில் ஒன்று. ரமண மகரிசி ஆசிரமம் ஒன்றும் இந்த கிராமத்தில் உள்ளது.

ODAM (Organisation of Development Action and Maintenance) எனப்பெயர் கொண்ட தன்னார்வ அமைப்பு, திருச்சுழியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்களை நிர்ணயித்து சேவை புரிகிறது. மேலும் ஊருக்கு வெளியே 7 கிலோமீட்டர் தூரத்தில் 'உயிரி எரிபொருள்' மையத்தை இந்த அமைப்பு நிறுவியுள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7688 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 3871 ஆண்கள், 3817 பெண்கள் ஆவார்கள். 1827 வீடுகளும் உள்ளன.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://census2001.tn.nic.in/pca2001.aspx-Rural[தொடர்பிழந்த இணைப்பு] - Virudhunagar District;Tiruchuli Taluk;tiruchuli Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சுழி&oldid=4070664" இலிருந்து மீள்விக்கப்பட்டது