வைரிசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் கோயில்
வைரிசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் வைரிசெட்டிபாளையம் கிராமத்தில் (அஞ்சல் குறியீட்டு எண் 621012) அமைந்துள்ள அம்மன் கோவிலாகும்.[1] இவ்வூர் உப்பிலியாபுரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத் தலைமையகத்திலிருந்து வடக்கு நோக்கி 67 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் பெருமாள் ஆவார். அன்னகாமாட்சியம்மன் மற்றும் சப்த கன்னிமார்கள் கருவறையிலேயே அருள்பாலிக்கின்றனர். மாசி பெரியசாமியும் லாடசாமியும் தனிச்சன்னிதி கொண்டுள்ளார்கள். அழைக்கின்றனர்.
அன்னகாமாட்சியம்மன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
அமைவிடம்: | தெற்குதெரு, வைரிசெட்டிபாளையம், துறையூர் வட்டம்[2] |
சட்டமன்றத் தொகுதி: | துறையூர் |
மக்களவைத் தொகுதி: | பெரம்பலூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | மாசி பெரியண்ண சுவாமி |
சிறப்புத் திருவிழாக்கள்: | சிவன்ராத்திரி ஆடி18_ஆடி28 |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வாசலில் சிவபெருமான், பார்வதி மற்றும் இரு குழந்தைகளான முருகன் மற்றும் விநாயகருடன் காட்சிதருகிறார். மாசி பெரியசாமி சிவாம்சமானவர் என்பதால் இவ்வாறு சுதைசிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வாசலின் நேரே மூலவர் சந்நிதி அமைந்துள்ளது.
இக்கோயிலின் மூலவராக திருமகள், பூமாதேவி உடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். மூலவரின் வலப்புறத்தில் மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி ஆகியோர் மண் கலய உருவங்களாகக் காட்சிதருகின்றனர். கருவரையில் பத்துக்கும் மேற்பட்ட தெய்வங்கள் குடிகொண்டிருந்தாலும், பூசாரிகள் மற்ற தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டுவது இல்லை.
சன்னதிகள்
[தொகு]இக்கோயிலில் வெள்ளையம்மாள், வைரசெட்டி, வீரபத்திரன், காத்தவராயன், உதிர கருப்பு போன்ற எண்ணற்ற நாட்டார் தெய்வங்களின் சந்நிதிகள் அமைந்துள்ளன. கருப்புசாமி இங்கு புல்லாங்குழல் ஊதுவது போல காட்சிதருகிறார். இவரை முத்து கருப்பண்ணசாமி என்று
இங்குள்ள கன்னிமார்களும் உருவ வடிவில் இல்லாமல் மண் கலய வடிவிலேயே காட்சிதருகின்றனர். இக்கோயில் மூலவராக பெருமாள் இருந்தாலும், சிவன் கோயிலாகவே இது அறியப்படுகிறது. உற்சவ காலங்களில் சிவன், அம்பிகை வாகன ஊர்வலம் நடக்கிறது. இக்கோயிலை அன்னகாமாட்சியம்மன் என்றே அழைக்கிறனர்.
மாசி பெரியசாமி
[தொகு]அருள்மிகு மாசி பெரியசாமி கோவில் வைரிசெட்டிபாளையம் |
---|
கோயிலின் மற்றொரு வாசலுக்கு நேராக மாசி பெரியசாமி சந்நதி உள்ளது. இந்த வாசலில் கருவறையில் உள்ள மாசி பெரியசாமியின் சுதைச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் இரு வேங்கைகள் சுதைகளும் உள்ளன.
உள்ளிருக்கும் சந்நிதியில் மாசி பெரியசாமி வேங்கை வாகனத்தின் மீது ஒரு காலை ஊன்றியும் மற்றொரு காலை தரையில் ஊன்றியும் காட்சி கொடுக்கிறார். அவருடைய வலதுகையில் இருக்கும் வேல் வேங்கையைக் குத்தியவாறும், இடது கையில் தண்டாயுதத்தினை தரையில் ஊன்றியும் இருக்கிறார். அவரின் இருபுறமும் இரு முனிவர்கள் உள்ளார்கள். மாசி பெரியசாமி கருந்தாடி மற்றும் முறுக்குமீசை வைத்துள்ளார். நெற்றியில் திருநீற்று பட்டையும், அதில் குங்குமம் இடப்பட்டுள்ளது. வழிபடும் பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீரு தரப்படுகிறது.
அவருடைய சந்நதியிலேயே அவருக்கு வலது பக்கத்தில் லாட சன்னியாசி அமர்ந்துள்ளார்.
பிற சந்நிதிகள்
[தொகு]இக்கோயிலில் எண்ணற்ற நாட்டார் தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன. மூலவர் அருகே அன்னகாமாட்சியோடு சப்த கன்னிமார்கள் இருந்தாலும் தனிச் சந்நிதியிலும் சப்த கன்னிமார்கள் உள்ளார்கள். காத்தவராயன், வெள்ளையம்மாள், மருதைவீரன், முனிகள், கருப்புகள் ஆகியவர்களோடு இத்தளத்திற்கு வைரிசெட்டி எனப் பெயர் வரக் காரணமான செட்டியாருக்கும் தனிசந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ தினமலர் கோயில்கள்
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)