கருந்தலைச் சில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருந்தலைச் சில்லை
Black-headed Munia.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: எசுடிரில்டிட்டே
பேரினம்: உலோஞ்சுரா
இனம்: உ. மலாக்கா
இருசொற் பெயரீடு
உலோஞ்சுரா மலாக்கா
(லின்னேயஸ், 1766)
வேறு பெயர்கள்

லோக்சியா மலாக்கா லின்னேயஸ், 1766

கருந்தலை சில்லை (Tricoloured munia)(உலோஞ்சுரா மலாக்கா) என்பது வங்காளதேசம்,[2] இந்தியா, இலங்கை, பாக்கித்தான் மற்றும் தென்சீனாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பறவையாகும். இந்த இனம் டிரினிடாட், ஜமைக்கா, ஹிஸ்பானியோலா, புவேர்ட்டோ ரிக்கோ, கியூபா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளிலும் கரீபியன் தீவுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விளக்கம்[தொகு]

கசுகொட்டை முனியா போன்ற இந்த சிற்றினம் கருப்பு தலை சில்லை என்று அறியப்படுகிறது. முதிர்ச்சியடையாத பறவைகள் வெளிறிய பழுப்பு நிற மேற்பகுதிகளைக் கொண்டுள்ளன. முதிர்வடைந்த பறவைகள் கருமையான தலையைக் கொண்டிருக்கவில்லை. மேலும் புள்ளிச் சில்லை போன்ற பிற சில்லைகளின் முதிர்ச்சியடையாதவற்றுடன் குழப்பமடையக்கூடிய ஒரே மாதிரியான சிறகு குஞ்சகீழ்ப்பகுதிகளைக் கொண்டுள்ளன. கருந்தலைச் சில்லையின் உடல் நீளம் சுமார் 10 செ.மீ. ஆகும். இதன் தலை கருப்பாகவும், எஞ்சிய உடலின் மேற்பகுதி செம்பழுப்பு பிட்டத்துடன், மேலும் சற்றுக் கூடுதலாகப் பழுப்பாக இருக்கும். தொண்டை, மார்பு, வயிற்றின் நடுப்பகுதி, வாலடி தொடை ஆகியன கருப்பு நிறத்திலும் மார்பின் பக்கங்கள் வெண்மையாகவும் காணப்படும்.

உணவும் பழக்கமும்[தொகு]

நெல் வயல்களை அடுத்த நீர் தேங்கியுள்ள இடங்களில் புல்விதைகளையும் நெல்லையும் இரையாக உண்ணும். புள்ளிச் சில்லை கூட்டத்துடன் சேர்ந்து இரை தேடும். இனப்பெருக்கம் செய்யாத பருவத்தில் 100 வரையான கூட்டமாகக் காணலாம். சதுப்பான நாணற்புதர்கள் கொண்ட நஞ்சை நிலங்களை விரும்பித் திரியும்.

இனப்பெருக்கம்[தொகு]

இது இனப்பெருக்கம் செய்யும் பருவத்தில் கருங்கீற்றுத் தூக்கணாங் குருவிகளுடன் உறவு கொண்டதாக அவை கூடுகட்டத் தொடங்கியவுடன் அக்கூடுகளில் நுழைந்து பார்க்கவும் அவற்றோடு கலந்து பறந்து திரியவும் செய்யும் இங். இங். என மெல்லிய குரல் ஒலி எழுப்பும். அக்டோபர் முதல் மே பந்து வடிவில் கூடமைத்து மென்மையான இளம்புல்லால் மெத்தென்று ஆக்கி 5 முட்டைகள் இடும்.

வயல் வெளிகளில் திரியும் கருந்தலைச் சில்லை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருந்தலைச்_சில்லை&oldid=3476908" இருந்து மீள்விக்கப்பட்டது