கருத்துத் திருட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


1995 இல் ராண்டம் ஹவுஸ் கம்பேக்ட் அன்அப்ரிட்ஜ்டு டிக்சனரி யில் விளக்கப்பட்டபடி, "மற்றொரு உரிமையாளரின் மொழிநடை மற்றும் சிந்தனைகளுக்கான நெருக்கமான போலித் தோற்றம் அல்லது பயன்பாடுடன் அதனை தன் சொந்த படைப்பாக குறிப்பிடுவது" கருத்துத் திருட்டு எனப்படும்.[1] கல்விப்பிரிவுக்குள், மானவர்கள், பேராசிரியர்கள், அல்லது ஆராய்ச்சியாளர்களால் செய்யப்படும் கருத்துத் திருட்டு நேர்மையற்ற கல்வியியல் எனக் கருதப்படும், அல்லது கல்வியியல் மோசடி மற்றும் குற்றம் புரிந்தவர்கள் கல்வியியல் கண்டனத்துக்கு உரியவர்கள், அதோடு வெளியேற்றப்பட வேண்டியவர்களாவர். இதழியலில், கருத்துத்திருட்டு என்பது இதழியல் தர்மத்தை அத்துமீறுதல், மற்றும் கருத்துத் திருட்டு செய்து பிடிபடும் பத்திரிகையாளர்கள் தற்காலிக நீக்கம் முதல் பணி நீக்கம் வரையான கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டும். கல்வியியல் அல்லது இதழியல் சூழல்களில் கருத்துத் திருட்டில் பிடிபடும் சில தனிநபர்கள் தாங்கள் மேற்கோள்கள் அல்லது தகுந்த நற்குறிப்பு வழங்கத் தவறி தெரியாமல் கருத்துத் திருட்டு செய்துவிட்டதாகவே முறையிடுகிறார்கள். கல்வியிலும் இதழியலிலும் கருத்துத் திருட்டு என்பதற்கு பல நூற்றாண்டு கால வரலாறு இருந்தாலும், இணையம் வந்தபின் அதில் மின் உரைகளாக கட்டுரைகள் கொடுக்கப்படுகையில், மற்றவர்களின் படைப்புகள் நகலெடுக்கப்படும் செயல்பாடு மிக எளிதாகிவிட்டது.

கருத்துத் திருட்டு என்பது காப்புரிமை அத்துமீறல் போன்றதல்ல. இரு சொற்களும் ஒரே குறிப்பிட்டச் செயல்பாடுகளுக்குப் பயன்பட்டாலும், அவை வெவ்வேறு வகையான அத்துமீறல்களாகும். காப்புரிமை அத்துமீறல் என்பது ஒருவரின் காப்புரிமை உரிமங்களை மீறி, காப்புரிமை பாதுகாக்கப்பட்ட பொருளை ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்துவதாகும். மறு பக்கத்தில், கருத்துத் திருட்டு என்பது கருத்தைத் திருடியவரின் அங்கீகாரத்துக்கும் உழைப்பற்ற வளர்ச்சியை பெற்றுத் தருகிறது, அதுவும் அந்த வளர்ச்சி தவறான உரிமத்துவத்தால் கிடைக்கிறது

பெயர் வரலாறு[தொகு]

பிளேகியாரிசம் (கருத்துத் திருட்டு) (1615-25) > பிளேகியாரி (1590 - 1600) > லத்தீன் பிளேகியாரஸ் கடத்தல் காரர், பிளேகியக் கடத்தல் > பிளேகா (பொறிவைத்தல், வலை) > PLAK அடிப்படையாக, நெய்ய (கிரேக்கம் பிளீகின், இலத்தீன் பிளக்சர் (நெய்ய)).[2]

ஒப்புதல்கள்[தொகு]

கல்விரீதியான[தொகு]

சில பாடங்களை நல்ல முறையிலும் விரைவாக முடிக்க பல மாணவர்கள் கஷ்டப்படுவதாக உணர்கிறார்கள், புதிய தொழில்நுட்பங்களின் (இணையம்) மூலம் மற்ற ஆதாரங்களில் இருந்து தகவலை நகலெடுத்து ஒட்டி கருத்துத் திருட்டு செய்துவிடமுடியும். இது பல காரணங்களுக்காக ஆசிரியர்களால் எப்போதும் கண்டுபிடிக்கப்படும். முதலில், மாணவர்களின் ஆதாரங்களின் தேர்வு அடிக்கடி நிஜமற்றதாக இருக்கும்; ஒரே பிரபலமான ஆதாரத்தில் இருந்து பல மாணவர்கள் அதே பகுதியை நகலெடுத்திருப்பதை திருத்துபவர்கள் பெற்றுக் கொள்ளக்கூடும். இரண்டாவதாக, ஒரு மாணவர் தன் சொந்த "நடை"யைத் தான் பயன்படுத்தியிருக்கிறாரா என எப்போதும் எளிதாகச் சொல்லிவிடலாம். மூன்றாவதாக, சரியற்ற ஆதாரங்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம், அல்லது தவறான தகவல் அடங்கியிருக்கலாம். நான்காவது, சமர்க்கிப்பட்ட பணி முதலில் ஒரு ஆன்லைன் கருத்துத் திருட்டு கண்டறியும் நிபுணரிடம் முதலில் சமர்ப்பிக்கப்படுவதை பேராசிரியர்கள் வலியுறுத்தலாம்.[3]

கல்வி உலகத்தில், மாணவர்களால் செய்யப்படும் கருத்துத் திருட்டு என்பது மிகக் கடுமையான குற்றமாகும், அது அந்த குறிப்பிட்ட பணிக்கான மதிப்பெண் தர நிர்ணயத்தில் தோல்வியடையச் செய்யப்பட வேண்டும் (குறிப்பாக உயர்நிலைப் பள்ளி நிலை) அல்லது அந்த பாடத்தில் தோல்வியடையச் செய்யப்பட வேண்டும் (குறிப்பாக கல்லூரி அல்லது பல்கலைக்கழக நிலையில்).[சான்று தேவை] தொடர்ச்சியாக செய்யப்படும் கருத்துத் திருட்டு, அல்லது ஒரு மாணவர் ஏதாவது கடுமையான கருத்துத்திருட்டு செய்யும் போதெல்லாம் (எ.டு. ஒரு திருடப்பட்ட பகுதியை தன் சொந்த பணி என சமர்ப்பித்தல்), அந்த மாணவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும். பல பல்கலைக்கழகங்களில், கல்விப் பட்டங்கள் அல்லது விருதுகள் கருத்துத் திருட்டுக்கான தண்டனையாக ரத்து செய்யப்பட்ய வேண்டும்.

உயர் நிலைப் பள்ளிகளில் கருத்துத் திருட்டு அடிக்கடி நடப்பது தொடர்பாக ஒரு சிறிய கல்விரீதியான ஆராய்ச்சி உண்டு. ஆராய்ச்சியில் பெரும்பாலும் மேல்நிலைப் பள்ளி வந்தபின் தான் கருத்துத் திருட்டு செய்யப்படுவது தெரியவந்தது.[4] ஏமாற்றும் பல முறைகளில் (பிளேகியாரிசம், தரவு கண்டறிதல் மற்றும் பரீட்சையின் போது ஏமாற்றுதல் உட்பட) மற்றவர்களை விட மாணவர்கள் கருத்துத் திருட்டு செய்ததை ஒத்துக் கொள்கிறார்கள்.[சான்று தேவை] "எவ்வளவு" அடிக்கடி கருத்துத் திருட்டு (ஒரு பணியின் அதிகப்படியானதை நகலெடுத்தல் அல்லது ஒரு வலைத்தளத்தில் இருந்து முழு பேப்பரையும் விலைக்கு வாங்குதல்) செய்வீர்கள் என்று கேட்கப்பட்டபோது இந்த எண்ணிக்கை வெகுவாக குறைவாகவே இருந்தது. சமீப காலமாக கருத்துத் திருட்டு கண்டறியும் மென்பொருளின் பயன்பாடு வந்தபின் (கீழே பார்க்கவும்) இந்த செயல்பாடு நிலவுவதன் துல்லியமான படத்தை அது கொடுத்து விடுகிறது

பேராசிரியர்கள் மற்றும் ஆராச்சியாளர்கள் கருத்துத் திருட்டில் ஈடுபடும் போது, தற்காலிக நீக்கம் முதல் வெளியேற்றப்படுவது வரையான தண்டனைகளுக்கு உள்ளாகிறார்கள், அதோடு அவர்களது மீதுள்ள நம்பிக்கைக்கும் நேர்மைக்கும் இழப்பு ஏற்படுகிறது.[5][6] மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீதான கருத்துத் திருட்டுக் குற்றச்சாட்டுகள், அக ஒழுக்கக் குழுக்கள் மூலம் கடுமையாக விசாரிக்கப்பட்டு, அதில் மாணவர்களும் பேராசிரியர்களும் அதற்கு உட்படவும் ஒத்துக் கொள்ளப்படுகிறார்கள்.[7]

இதழியல்[தொகு]

இதழியலின் முக்கியமான நாணயமாக இருப்பது மக்களின் நம்பிக்கைதான், அதன்படி ஒரு பத்திரிகையாளர் அவரது ஆதாரங்கள் பற்றிய நேர்மையான உறுதிப்பாடில் இருந்து தவறுகையில், அது அவர் சார்ந்துள்ள செய்தித்தாள் அல்லது தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியின் நேர்மைத்தன்மையை குறைக்கிறது மற்றும் நம்பகத்தன்மையை தாழ்த்துகிறது. பத்திரிகை நிறுவனங்கள் கருத்துத் திருட்டு பற்றிய குற்றச்சாட்டுகள்ள் குறித்து ஆய்வு செய்கையில் அதற்கு உட்படும் பத்திர்கையாளர்களை அவர்களது பணிகளில் இருந்து பணி நீக்கம் செய்வதுண்டு.

ஆன்லைன் ஆதாரங்களில் உள்ள மின் உரைகளில் இருந்து எளிதாக மறுபதிப்பு செய்துவிட முடிவதால் தான் பல நிருபர்கள் கருத்துத் திருட்டு செயல்பாடுகளுக்கு உள்ளாகிறார்கள்: பல வலைத்தளங்களில் இருந்து கட்டுரைகளை "நகலெடுத்து ஒட்டும்" பத்திரிகையாளர்கள் பிடிபட்டுள்ளார்கள்)[சான்று தேவை].

ஆன்லைன் கருத்துத் திருட்டு[தொகு]

கருத்துச் சுரண்டல் என்பது இணைய வலைத்தளங்களில் இருந்து விஷயங்களை நகலெடுத்து ஒட்டி, அதனால் வலர்ந்த வளைத்தளங்களும் [8] வலைப்பதிவுகளும்[9] பாதிக்கப்படுகின்றன

கருத்துத் திருட்டைக் கண்டுபிடிக்க உதவ இலவச ஆன்லைன் கருவிகள் கிடைக்கின்றன,[10] ஆன்லைன் நகலெடுத்தலை வரையறுக்க வலது கிளிக் செய்தல் முடக்கப்படுதல், மற்றும் வலைத்தளங்களில் உள்ள காப்புரிமைகள் சம்பந்தமான எச்சரிக்கை பேனர்கள் அமைத்தல் போன்ற பல விதமான அணுகுமுறைகளும் முயற்சிக்கப்பட்டு வருகின்றன. காப்புரிமை மீறல் உள்ளிட்ட கருத்துத் திருட்டு ஏற்படுகையில், படைப்புக்கான உரிமம் கொண்ட உரிமையாளர்கள் அத்துமீறிய தள உரிமையாளருக்கு அல்லது அத்துமீறிய வலைத்தளத்தை பதிவேற்றம் செய்யும் ISPக்கு ஒரு DMCA அகற்றுதல் அறிவிப்பை அனுப்புவதன் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.

கருத்துத் திருட்டு என்பது அப்படியே உரையை நகலெடுப்பது மட்டுமல்ல, அக்கருத்தை வெளியிட குறிப்பிட்ட வார்த்தைகள் அல்லது கட்டமைப்புகளை பயன்படுத்தியதோடு மற்றொருவரின் கருத்தை தன்னுடையதாக வெளியிடுவதும் அடங்கும். சுருக்கமாகச் சொன்னால், அப்படிப்பட்ட கருத்துத்திருட்டு கண்டறிதல் சேவைகளால் அப்படியே அப்பட்டமாக வார்த்தைக்கு வார்த்தை நக்லெடுத்த உரையை மட்டுமே கண்டறிய முடியும்.

மற்ற சூழல்கள்[தொகு]

பொதுவாக, கருத்துத் திருட்டு திருடுதல் அல்லது களவாடுதல் என சாதாரணமாக எப்போதும் குறிப்பிடப்பட்டாலும், அது நீதிமன்றங்களில் ஒரு குற்றமாக அமைக்கப்படவில்லை.[11] அதுபோல, பொதுவான சட்டத்திலும் கருத்துத் திருட்டு ஒரு கிரிமினல் குற்றமாக நிற்பதில்லை. அதற்குபதில், கருத்துத்திருட்டின் உரிமைக் கோரல்கள் ஒரு சிவில் வழக்கு விஷயமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது, அதில் பாதிக்கப்பட்டவர் ஒரு உரிமைக் கோரிக்கை வழக்கு மூலம் தீர்த்துக் கொள்ளலாம். கருத்துத் திருட்டை உண்டாக்கும் நடவடிக்கைகள் சில நேரங்களில் காப்புரிமை அத்துமீறல்களாக, முறையற்ற போட்டியுணர்வாக, அல்லது நியாய உரிமங்களின் கொள்கை அத்துமீறல்களாக அணுகப்படுகினறன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணத்தால் அறிவுசார் சொத்தின் தேவை அதிகரித்து, காப்புரிமை அத்துமீறல்கள் கிரிமினல் குற்றங்களாக என்ற விவாதம் எழுகிறது.

சுய-கருத்துத் திருட்டு[தொகு]

சுய கருத்துத் திருட்டு ("மறுசுழற்சியாகும் மோசடி" என்றும் அறியப்படும் [12]) என்பது குறிப்பிடத்தக்க, ஒத்துப்போகும், அல்லது ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரது படைப்பை போன்ற ஒத்துப்போகும் விஷயங்களை மறு உபயோகம் செய்து, அவரது அசல் பணியைக் குறிப்பிடாமல் விடுவது போன்றதாகும். இது போன்ற கட்டுரைகள் எப்போதும் டூப்ளிகேட் அல்லது பலநிலை பதிப்பு என்று குறிப்பிடப்படும். இந்த நன்னடத்தை பிரச்சனையுடன் சேர்த்து, இதற்கான முதல் பணியின் காப்ப்புரிமை மற்றொன்றுக்கு மாற்றப்பட்டுவிட்டால், இது சட்டத்துக்கு புறம்பானதாக கருதப்படலாம். குறிப்பாக, சுய கருத்துத் திருட்டு என்பது கல்விசார்ந்த பதிப்புகள் அல்லது கல்வி பாடப்பணிகள் போன்றவற்றில் ஏதாவது ஒரு பதிப்பில் புதிய விஷயம் ஒன்று இருந்து அது அமைப்புரீதியாக ஒரு கடுமையான நன்னடத்தை விவகாரமாகவே கருதப்படும் [13]. இது சமுதாய, தொழில்சார்ந்த மற்றும் கலாச்சார கருத்துகளை கொண்ட பொதுவாக செய்திதாள்கள் மற்றும் பத்திரிகைகளில் பதிப்பிக்கப்படும் பொது-ஆர்வ உரைகள் (சட்ட கருத்துள்ளவை தவிர்த்து) போன்றவற்றிற்கு பொருந்தாது.

கல்விரீதியான துறைகளில், ஒரு ஆசிரியர் தான் காப்புரிமையுடன் வெளியிட்ட விஷயங்களை தன் அடுத்தடுத்த பதிப்புகளிலும் மறுபயன்பாடு செய்கையில், முந்தைய பதிப்பை துணை மேற்கோள் காட்டாமல் விடுவது சுய கருத்துத்திருட்டை ஏற்படுத்தும்.[14] மறுபயன்படுத்தப்படும் படைப்பின் வரையறை சட்டரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது (நல்ல பயன்பாடாகவே) கருதப்படுகிறது, என்பதால் சுய கருத்துத் திருட்டு என்பதைக் கண்டுபிடிப்பது எப்போதும் கடினமானது.[15]

சுய கருத்துத் திருட்டின் மையக்கோட்பாடு[தொகு]

"சுய-கருத்துத் திருட்டு" என்பது சுய-முரண்பாடு கொண்டதாக அல்லது ஒரு கூர்மையானபுத்திசாலித்தனத்தால் சவாலிபடப்படுகிறது[16].

உதாரணத்திற்கு, ஸ்டெப்னி ஜே. பேர்டு [17] என்பவர் கருத்துத் திருட்டு என்பதன் அர்த்தமே மற்றவரின் படைப்பை பயன்படுத்துவதுதான் என்பதால் சுய-கருத்துத் திருட்டு என்பதே ஒரு தவறான சொல்வழக்கு என வாதிடுகிறார்.

இருந்தாலும், இந்த சொல் சில முறையற்ற பதிப்புகளாக இருக்கும் வாய்ப்புள்ள குறிப்பிட்ட வடிவங்களைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. "சுய-கருத்துத் திருட்டை" "இரட்டையான அல்லது மறுபடியும் பதிப்பிக்கப்படுபவையாக" சில நேரங்களில் ஏற்படக்கூடிய நல்லொழுக்க விஷயங்களாகவே பேர்டு சுட்டிக்காட்டுகிறார். அதற்காக கல்விச் சூழலில் அதனை அவர் குறிப்பிடுகையில், "சுய கருத்துத் திருட்டு" என்பது ஒரு மாணவர் தான் எழுதிய விஷயத்தை "ஒரே கட்டுரையை நற்பெயர் வாங்கும் பொருட்டு இரு வேறு பாடத்திட்டங்களில்" மறுசமர்ப்பணம் செய்யலாமே என்கிறார். டேவிட் பி.ரெஸ்நிக் இதனை தெளிவுபடுத்தும் விதமாக, "சுய கருத்துத் திருட்டில் நேர்மை தவறுதல் இருக்கலாம், ஆனால் அதில் அறிவுத் திருட்டு இல்லை" என்கிறார்.[18]

பேட்ரிக் எம் ஸ்கான்லானின் படி [19]:

"சுய-கருத்துத் திருட்டு" என்பது சில குறிப்பிட்ட நாணயத்துடனான ஒரு சொல் என்கிறார். மிகப் பரவலாக, பயோமருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பதிப்பித்தல் சார்ந்த கலந்துரையாடால்களில் பயன்படுத்தப்படுகிறது, அப்படியான சூழல்களில் மிக கடுமையான பதிப்பி-அல்லது-அழித்துவிடு போன்ற கோரிக்கைகளின் போது அது ஆராயாத அவசர முடிவு மற்றும் "கொத்துக்கறி-துண்டுகளாக" மாறிய பதிப்பாக மாறிவிடுவதுண்டு, ஒரு ஒற்றை ஆராய்ச்சியின் முடிவுகள் பலவகை கட்டுரைகளின் இடையே "மிகக் குறைவான பதிப்பு எண்ணங்களாக" முடிவு பெறும் [20]. ரோய்க் (2002) இல் சுய கருத்துத் திருட்டு சம்பந்தமான நான்கு வகைகள் உட்பட ஒரு பயனுள்ள வகைப்படுத்தல் முறை வழங்கப்பட்டது: ஒரே கட்டுரைக்கு ஒரு பத்திரிகைக்கும் மேற்பட்ட பிரதி பதிப்பு; ஒரு ஆய்வை பல பதிப்புகளில் பிரித்துப் போடுவது, என்பது எப்போதும் கொத்துக்கறி துண்டம்; உரை மறுசுழற்சி; மற்றும் காப்புரிமை அத்துமீறல்" என அழைக்கப்படும்.

சுய-கருத்துத் திருட்டும் நன்னடத்தை விதிகளும்[தொகு]

சில கல்விரீதியான பதிப்புகளில் சுய கருத்துத் திருட்டை குறிப்பாக சுட்டிக்காட்டும் நன்னடத்தை விதிகள் உண்டு. உதாரணத்திற்கு, சர்வதேச தொழிற் படிப்புகள் பத்திரிகை .[21]

அசோசியேஷன் ஆஃப் கம்பியூட்டிங் மெஷினரி (ACM) போன்ற சில தொழில்ரீதியான நிறுவனங்கள் சுய-கருத்துத் திருட்டு தொடர்பான கோட்பாடுகளை மிகக்குறிப்பாக கையாளுகின்றன.[22]

மற்ற நிறுவனங்களில் சுய கருத்துத் திருட்டு தொடர்பான மிகக்குறிப்பிட்ட சுட்டிக்காட்டல் செய்யப்படுவதில்லை:

அமெரிக்க பொலிட்டிகல் சையின்ஸ் அசோசியேசன் (APSA) என்ற நிறுவனம் கருத்துத்திருட்டை தன் நன்னடத்தை விதிகளில் "மற்றவரின் படைப்ப்புகளை தன் சொந்த படைப்பு என வேண்டுமென்று தெரிந்தே செயல்படுத்தல்" என விவரிக்கிறது. அதில் சுய-கருத்துத் திருட்டு குறிப்பிடப்படவில்லை. அதில் ஒரு தீசிஸ் அல்லது விளக்கவுரை "மொத்தமாக அல்லது பகுதியாக" பதிப்பிக்கப்படுகையில், அதன் ஆசிரியர் "அதன் மூலங்களின் உறுதிப்பாடுக்கான கட்டாய ஒழுங்குநிலைக்குள் இயல்பாக இல்லை" என்றும் குறிப்பிடுகிறது.

அமெரிக்கன் சொசைட்டி பார் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன் (ASPA) பதிப்பித்துள்ள நன்னடத்தை விதிகளில் அதன் உறுப்பினர்கள்: "தங்களது படைப்பு அல்லது பணிகளின் மூலம் மற்றவர்கள் பலனடைகிறார்களா என்பதில் உறுதியாக இருப்பதற்கு" அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறார்கள், என்று குறிப்பிட்டுள்ளது, ஆனால் அதில் சுய கருத்துத் திருட்டு பற்றிய குறிப்பு எதுவும் அளிக்கப்படவில்லை.

மறுபயன்பாடை நியாயப்படுத்தும் காரணிகள்[தொகு]

1994 இல் பமீலா சாமுவேல்சன் முன்பு பதிப்பிக்கப்பட்ட படைப்பின் மறுபயன்பாட்டில் சுய- கருத்துத்திருட்டு என்ற குற்றம் எழாமல் சாதகப்படுத்தக்கூடிய பல காரணிகளை கண்டறிந்தார்.[15] அவர் இந்த ஒவ்வொரு காரணிகளையும் சுய-கருத்துத் திருட்டுக்குறிய நன்னடத்தை விவகாரத்துடன் தொடர்புபடுத்துகிறார், அதில் காப்புரிமையின் நேர்மையான பயன்பாட்டில் உள்ள சட்டச் சிக்கலை தனியாகக் கையாளுகிறார். முன்னர் பதிப்பிக்கப்பட்ட படைப்புகளின் மறுபயன்பாடு தொடர்பான சாக்குப்போக்கு கேட்கப்படக்கூடிய மற்ற காரணிகளில் சாமுவேல்சன் கீழ்கண்டவற்றை பட்டியலிடுகிறார்:

 1. இரண்டாவது பணிக்கு உதவக்கூடிய அளவுக்கு அடிப்படைப்பணி செய்யப்பட முந்தைய பணி மறுமேற்கோள் காட்டப்பட தேவைப்படுதல்.
 2. இரண்டாவது பணிக்கு புதிய வகையில் உதவக்கூடிய அளவுக்கு அடிப்படைப்பணி செய்யப்பட முந்தைய பணி மறுமேற்கோள் காட்டப்பட தேவைப்படுதல்.
 3. புதிய ஆதாரங்கள் அல்லது விவாதங்களுடன் எழுதப்படும்படிக்கு முந்தைய பணியின் பகுதிகள் திரும்ப திரும்ப சுட்டிக்காட்டப்பட வேண்டியிருத்தல்.
 4. ஒவ்வொரு பணிக்குமான வாசகர்கள் வெவ்வேறானவர்கள் என்பதால் ஒரே படைப்பை வெவ்வேறு இடங்களில் பதிப்பித்தால் அச்செய்தி அனைவரையும் சென்றடையும்.
 5. ஒரு கருத்தை முதல் முறையே மிகச்சிறந்த விதத்தில் சொல்லிவிட்டதால் அதனை இரண்டாவாது முறை வேறு விதத்தில் சொல்வது அர்த்தமற்றது என ஆசிரியர் எண்ணலாம்.

ஒழுக்கம் சார்ந்த சமுதாயங்களுக்கு இடையே ஒன்றிணைக்க முயற்சிக்கையில் "பலவகை வாசகர்களுக்கான" அடிப்படைக் கோட்பாடில் நம்பிக்கை கொண்டிருந்ததாக சாமுவேல்சன் குறிப்பிடுகிறார். பல்வேறு சட்டரீதியான மற்றும் தொழில்நுட்ப சமுதாயங்களுக்கான தன் படைப்பை குறிப்பிடுகையில்: "ஒரு கட்டுரையில் இருந்து மற்றொன்றுக்கு ஒரு விஷயத்தை எடுக்கக்கூடிய பத்திகள் அல்லது பத்திகளின் தொடர்ச்சிகள் எப்போதும் உள்ளன". உண்மையைச் சொன்னால், நான் அவற்றை எடுப்பதுண்டு" என்கிறார். அவரே "தன் தொழில்நுட்ப கட்டுரைகளுக்கு -- ஒரு அடிக்குறிப்பு மற்றும் ஒரு தன்னிலைப் பகுதியைச் சேர்த்து சில மாற்றங்கள் செய்து ஒரு சட்டப் பரீசிலனை கட்டுரையாக மாற்றி" அதனை பலவகை வாசகர்களுக்கு ஏற்ப மாற்ற்றும் பழக்கம் கொண்டவர் என்கிறார்.[15]

தவறான பிரதிநிதித்துவம் என்பது சுய-கருத்துத் திருட்டின் அடிப்படை என சாமுவேல்சன் குறிப்பிடுகிறார். கருத்துகள் மற்றும் ஆராய்ச்சி விஷயங்களை விட விவரமளிக்கும் படைப்புகளை மறுபயன்பாடு செய்தல்பற்றி தான் கொஞ்சம் வருத்தம் அடைவதாக கூறுகிறார்.[15] அவர் மேலும் குறிப்பிடுகையில், "இதுவரை சுய-கருத்துத் திருட்டு வழக்குகள் எதிலும் கோரப்படாமல் இருந்தாலும், காப்புரிமைச் சட்டத்தை முறைப்படி கையாளுதல் பல நல்ல பதிப்பாளர்களுக்கு தங்கள் முந்தைய படைப்புகளில் இருந்து சில பகுதிகளை மறுபதிப்பு செய்யும் எழுத்தாளர்களுக்கு எதிரான காப்புரிமை அத்துமீறல் வழக்குகளில் ஒரு பாதுகாப்பு அறனாக விளங்கும்" என்கிறார்.[15]

ஒரு நடைமுறைப் பிரச்சனை[தொகு]

சட்டரீதியான மற்றும் நன்னடத்தை பிரச்சனைகளில், கருத்துத் திருட்டு ஒரு நடைமுறைப் பிரச்சனையாக அடிக்கடி நிலவுகிறது, அதில் ஒரு எழுத்தாளரால் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்களை அலசி ஆராய்வது பயனளிக்கும், ஆனால் கருத்துத் திருட்டு இதனை கடினமாக்குகிறது. இது ஏன் பயனுள்ளது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன:

 • ஒரு எழுத்தாளர் ஆதாரத்தை எப்படி மாற்றிச் சொல்வது அல்லது பாயன்படுத்துவது என்பதில் தவறு இழைத்திருக்கலாம், அதற்காக மூலத்தை ஆராய்ந்து இந்த பிழைகளை கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
 • எழுத்தாளர்கள் பொதுவாக கையில் இருக்கும் பணிக்கு நேரடி தொடர்புடைய முந்தைய பணிகளின் பகுதிகளை மட்டுமே வெளியிடுவார்கள். மூலங்களின் மற்ற பகுதிகள் ஒத்துப்போவது போல் இருக்கும் அல்லது தனது படைப்பின் பிந்தைய சேர்ப்புகளாக மற்றும் பொதுக்குறிப்புகளுக்கு ஒத்ததாக இருக்கும்.
 • நவீன தானியங்கும் அடைவு முறைகள் பரவலாகி வருவதால், படைப்புகளிடையே உள்ள குறிப்புகள் படைப்புகளின் அதிகாரத்தன்மைகள் மதிப்புமிக்க தகவலை வழங்குவதோடு, படைப்புகள் எவ்வளவு ஒற்றுமையாக உள்ளன என்பதைக் காட்டுகின்றன; இது ஒரே மாதிரியான படைப்புகளை கண்டுபிடிக்கவும் உதவுகிறது.

நிறுவன பதிப்புகள்[தொகு]

நிறுவனங்கள் மொத்தமான பெயர்குறிப்பிடாத படைப்புகளை வழங்குகையில், குறிப்பிட்ட நபரின் படைப்புத்திறனுக்கு பெயர் சார்ந்த சன்மானம் எதுவும் வழங்காததால் கருத்துத் திருட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரையில் பிரச்சனை இல்லாதது. உதாரணத்திற்கு, அமெரிக்க வரலாற்று சங்கத்தின் "தொழில்முறை நடத்தைக்கான தரநிலை அறிக்கை" (2005) இன் படி உரைநூல்கள் மற்றும் உதவிக்குறிப்பு புத்தகங்களைப் பொறுத்தவரையில், பாடப்புத்தகங்களும் என்சைக்ளோபீடியாக்களும் மற்ற நிபுணர்களின் பணிகளின் தொகுப்பு என்பதால், அவை சொந்த ஆராய்ச்சி என குறிப்பிடப்படுவதற்கான நிஜ தரநிலைகளுக்கு உட்படுவதில்லை, அதோடு மற்றவர்களின் படைப்புகள் மீது அதிகப்படியான "சார்பு எல்லைக்கு" அனுமதிக்கப்படலாம்.[23] அப்படி ஒரு புத்தகம் மற்ற உரையில் உள்ள அதே வார்த்தைகளையோ, சொற்றொடர்களையோ, பத்திகளையோ பயன்படுத்தவில்லை என்றாலும், அல்லது மற்ற உரையின் அமைப்பு மற்றும் இயக்கத்தை அப்படியே பின்பற்றாவிட்டாலும், அந்த உரைகளின் எழுத்தாளர்கள் "சமீபத்திய அல்லது அதுபோன்ற கண்டுபிடிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகளின் ஆதாரங்களை உறுதிபடுத்தி, தொழில் சார்ந்த பொதுவான புரிந்துகொள்ளலின் ஒரு பகுதியாகவும் இல்லை என்பதையும் உறுதிசெய்யும்படி" எதிர்பார்க்கப்படுகிறார்கள்.[23]

ஒரு நிறுவனத்துக்குள், அதன் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆவணங்கள், தரங்கள் மிக தளர்வானவை ஆனால் தொடர்ந்து நிலைப்பதில்லை. ஒருவர் ஒரு அறிக்கை மூலம் உதவினாலும், அதற்கான பலனை அவர் எதிர்பார்க்கலாம். ஒரு பத்தியானது ஒரு சட்ட அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டால், அதற்குரிய மேற்கோள் கீழே எழுதப்பட வேண்டும். தொழிநுட்ப விளக்கப்புத்தகங்கள் எப்போதுமே வழக்கமாக எந்த மேற்கோளும் இல்லாமல் மற்ற புத்தகங்களில் இருந்து விஷயங்களை நகலெடுப்பதுண்டு, ஏனென்றால் அவற்றில் அறிவியல் கண்டுபிடிப்பு சார்ந்த ஒரு ஒற்றுமை உணர்வு இருப்பதாக அவை கருதுகின்றன, (நிரூபிக்கப்பட்டபடி, இலவச மற்றும் திறந்தநிலை மூல மென்பொருள் திட்டப்பணிகளில்) விஞ்ஞானிகள தங்கள் படைப்பை இலவசமாக பகிர்ந்து கொள்கிறார்கள்.

மைக்ரோசாப்டால் வெளியிடப்பட்ட தொழில்நுட்ப பதிப்புகளுக்கான மைக்ரோசாப்டின் நடைக்கான கையேடு மூன்றாம் பதிப்பு (2003)இல் கருத்துத் திருட்டைப் பற்றி குறிப்பிடவே இல்லை, அது போலவே பிலிப் ரூபன்சின் சைன்ஸ் அன்ட் டெக்னிகல் ரைட்டிங்: எ மேன்யுவல் ஆஃப் ஸ்டைல் , இரண்டாம் பதிப்பு (2000) என்ற வெளியீடும் உள்ளது. அனுமதிக்கப்பட்ட இலக்கியத்துக்கும் அனுமதிக்கப்படாத மூல விதி கருத்துத் திருட்டுக்கும் இடையே ஒரு சிறு கோடு தான், ஆனால் மொத்தத்தில் அவை பிரச்சனையற்றவை. எந்த ஒரு தொழில்நுட்ப களத்தினப் போல, மற்றவர்கள் பொது அறிவுக்கு என வழங்கியதை கணிப்பொறி நிரலிடல் பயன்படுத்திக் கொள்கிறது.

பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் படைப்பில் சொற்றொடர் மாற்றியமைத்தல் மற்றும் மறுபதிப்பு செய்தல், பல்வேறு கல்வி சார்ந்த பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள் கட்டுரைகளுக்கு என்று மாற்றியமைத்துக் கொடுத்தல், பொதுமக்களுக்கேற்ப தங்கள் படைப்பை பிரித்து வெளியிடுதல் போன்றவை பொதுவாக நடைபெறுபவை தான். இந்த ஆராய்ச்சியாளர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது: ஒரு கட்டுரை அதன் முந்தையதில் இருந்து பாதியளவுக்கு ஒரே மாதிரியாக இருந்தால், அது பொதுவாக நிராகரிக்கப்பட்டுவிடும். கல்விசார்ந்த எழுத்தில் தனிநபர் பரிசீலனை என்ற செயல்முறையின் செயல்பாடுகளில் "மறுசுழற்சி" முறையைத் தடுப்பது அதன் செயல்பாடுகளில் ஒன்றாகும்.

பிரபலங்கள் பொதுவாக பெயர் சொல்லாத பேச்சு எழுத்தாளர்களை பயன்படுத்துவதுண்டு. ஒரு பேச்சில் மற்றவரின் கருத்து திருடப்பட்டது தெரியவந்தால், அதனால் தவறான கண்ணோட்டத்துக்கு உட்படப்போவது அந்த பிரபலம் தான். உதாரணத்திற்கு, துணை ஜனாதிபதியும் முன்னாள் டெலாவேரும் செனட்டருமான ஜோ பிடன் தன் பிரச்சார பேச்சுகளின் பகுதிகளில் பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் தலைவர் நீல் கிண்ணாக் மற்றும் ராபர்ட் கென்னடியின் பேச்சுகளைப் போலவே பேசியது கண்டுபிடிக்கப்பட்ட்டதால் 1988 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்தே விலக்கப் பட்டார், (ஆனால் அமெரிக்க செனட்டில் நீடித்தார்).

மேலும் பார்க்க[தொகு]

 • கல்விரீதியான நேர்மையின்மை
 • கூட்டம்
 • ஒப்பந்த ஏமாற்றுதல்
 • காப்பிஸ்கேப் (இணைய கருத்துத் திருட்டை கண்டறியும் வலைத்தளம்)
 • காப்புரிமை
 • பலன் (ஆக்கப்பூர்வ கலைகள்)
 • கிரிப்டோம்னீசியா
 • எஸ்ஸே மில்
 • நல்ல பயன்பாடு
 • நகைச்சுவை களவாடல்
 • பத்திரிகை மோசடிகள் (கருத்துத்திருட்டு, சீர்படுத்துதல், வெட்டுதல்)
 • கோஸ்ட்ரைட்டர்
 • கருத்துத் திருட்டு முரண்பாடுகளின் பட்டியல்
 • பல பதிப்பு
 • இசை கருத்துத் திருட்டு
 • தனிப்பட்ட எல்லைகள்
 • கருத்துத் திருட்டு கண்டறிதல்
 • அறிவியல் நடத்தைக் கேடு
 • மூல விமர்சனம்

குறிப்புதவிகள்[தொகு]

 1. Stepchyshyn, Vera; Robert S. Nelson (2007). Library plagiarism policies. Assoc of College & Resrch Libraries. பக். 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0838984169.  இல் மேற்கோளிடப்பட்டது
 2. கூகிள்.காம் கூகிள்.காம்
 3. Klein A. (June 8, 2007). "Opinion: Why Do They Do It?". The New York Sun இம் மூலத்தில் இருந்து 2007-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071201214729/http://www.nysun.com/article/56158. பார்த்த நாள்: 2007-12-11. 
 4. Hart, M.; Friesner, Tim (December 15, 2004), Plagiarism and Poor Academic Practice – A Threat to the Extension of e-Learning in Higher Education?, Electronic Journal of E-Learning, archived from research the original on 2007-12-19, retrieved 2007-12-11 {{citation}}: Check |url= value (help)
 5. காக், N. (1999). கல்விரீதியான கருத்துத் திருட்டு பற்றிய வழக்கு. கம்யூனிகேசன் ஆப் த ACM, 42(7), 96-1048.
 6. காக், N., & டேவிசன், R. (2003) IS ஆராய்ச்சி சங்கத்தில் கருத்துத்திருட்டு பற்றிய அலசல்: கருத்துத் திருட்டு பற்றிய காரணிகள் மற்றும் அவற்றை எப்படி அணுகுவது பற்றிய பார்வை பரணிடப்பட்டது 2009-03-14 at the வந்தவழி இயந்திரம். MIS காலாண்டு , 27(4), 511-532.
 7. கிளார்க், R. (2006). கல்வியாளர்களின் கருத்துத் திருட்டு: தோற்றத்தை விட சிக்கலானது. தகவல் முறைமைகளுக்கான சங்கத்தின் பத்திரிகை , 7(2), 91-121.
 8. உரிமத்துவம் வலையில் தொலைந்தது. யுஎஸ்ஏ டுடே.
 9. ஆன்லைன் கருத்துத் திருட்டு வலைப்பதிவு உலகத்தை தாக்குகிறது. பாஸ்டன்.காம்
 10. CNET.com Webpronews.com பரணிடப்பட்டது 2007-02-21 at the வந்தவழி இயந்திரம்
 11. "லூசியானா மாநில பல்கலைக்கழகம்" இம் மூலத்தில் இருந்து 2008-06-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080625002719/http://faculty.law.lsu.edu/stuartgreen/pdf/j-green2.pdf. 
 12. உதாரணத்திற்கு டெல்லாவேலி, ராபர்ட் பி., பேங்க்ஸ், மார்கஸ் ஏ மற்றும் எல்லிஸ், ஜெஃப்ரி ஐ.(2007). "கருத்துத் திருட்டு தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்: மோசடியை மறுசுழற்சி செய்வது எப்படி." ஜேர்னல் ஆஃப் அமெரிகன் அகடமி ஆஃப் டெர்மடாலஜி , தொகுதி. 57 (3), செப்டம்பர், pp.527. doi:10.1016/j.physletb.2003.10.071
 13. பார்க்கவும் என் கட்டுரைகளை வாக்கியமாற்றம் செய்யவும் அதனை ஒப்புமை செய்யவும் எனக்கு அனுமதியளியுங்கள் , என்ற தலைப்பில் டைம்ஸ் உயர் கல்வி துணைப்பதிப்பில் ரெபேக்கா ஆட்வுட் எழுதியது 3 ஜூலை 2008
 14. Hexham, I. (2005). "Academic Plagiarism Defined" இம் மூலத்தில் இருந்து 2009-11-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091130200848/http://www.ucalgary.ca/~hexham/study/plag.html. 
 15. 15.0 15.1 15.2 15.3 15.4 சாமுவேல்சன், P. (1994). "சுய-கருத்துத் திருட்டா நல்ல பயன்பாடா?" கம்யூனிகேசன் ஆப் த ACM, , 37(August): 21-25.
 16. புரூம், மேரியன் E. (2004). "சுய-கருத்துத் திருட்டு: புத்திசாலித்தனம், நல்ல பயன்பாடு அல்லது அறிவியல் நடத்தைக் கேடு?" நர்சிங் அவுட்லுக் , Vol. 52 (6), November, pp.273-274. [1]
 17. சுய-கருத்துத் திருட்டும் இரட்டை மற்றும் மறுபடி செய்யப்படும் பதிப்புகள்: என்ன பிரச்சனை?[தொடர்பிழந்த இணைப்பு]
 18. ரெஸ்நிக், டேவிட் பார்க்கவும் B. (1998). அறிவியல் நன்னெறிகள்: ஒரு அறிமுகம் , லண்டன்: ரூட்லெட்ஜ். p.177, ஆறாம் அத்தியாயத்திற்குரிய குறிப்புகள், குறிப்பு 3. கூகிள் புத்தகங்கள் வழியாக ஆன்லைனில்
 19. ஸ்கான்லான், பாட்ரிக் M. (2007). "எ சாங் பிரம் மைசெல்ப்: சுய கருத்துத் திருட்டின் கட்டமைப்பு." பிலேஜியரி: கருத்துத் திருட்டு, சீர்செய்தல், மற்றும் தவறுசரிசெய்தல் போன்றவற்றிற்கான குறுக்கு-ஒழுக்கநிலை படிப்புகள் , Vol. 2 (1), pp.1-11
 20. பிளாங்கட், பிளானாகின், & யங், 1995; ஜெபர்சன், 1998; காஸிரர் & ஏஞ்சல், 1995; லோவ், 2003; மெக்கார்த்தி, 1993; ஷீன்& பலடுகு, 2001; வீலர் 1989
 21. "JIBS நன்னடத்தை விதி" இம் மூலத்தில் இருந்து 2010-07-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100723212122/http://www.palgrave-journals.com/jibs/jibs_ethics_code.html. 
 22. "ACM Policy and Procedures on Plagiarism". October 2006. http://www.acm.org/publications/policies/plagiarism_policy. 
 23. 23.0 23.1 "Statement on Standards of Professional Conduct". American Historical Association. 2005-01-06. http://www.historians.org/PUBS/Free/ProfessionalStandards.cfm. பார்த்த நாள்: 2009-04-16. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்துத்_திருட்டு&oldid=3793964" இருந்து மீள்விக்கப்பட்டது