உள்ளடக்கத்துக்குச் செல்

பொல்லாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொல்லாக்கு (Tort) என்பது ஒருவகையான அகவியத் தவறாகும் (civil wrong). எப்போது ஒரு நபர் மற்றவருக்கு உரிதான சட்டக் கடமையை முறித்துக் கொள்கிறாரோ அப்போது அகவியத் தவறு எழுகிறது. சட்டக் கடமை எப்பொழுது ஒருவரை ஒரு குறிப்பிட்ட ரீதியில் செயல்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறதோ அப்பொழுது சட்டக் கடமை எழுகிறது. எவ்வாறு இவ்வாறு கேட்டுக்கொள்ளப்படும் என்றால் (i) ஆளும் மன்றத்தினால் இயற்றப்படும் ஓர் எழுத்துருச் சட்டம் மற்றும் (ii) நிச்சித ரீதியில் செயல்படும்படியான முந்தைய நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றால். முதலாவதில் இருந்து சட்டப்பூர்வக் கடமையும், இரண்டாவதில் இருந்து தீர்ப்பராக்கக் கடமையும் எழுகிறது. கடமைகள் விசாலமாக இருப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது அவை: (i) மற்றுள்ள ஆட்களுக்கு உரியக் கடமைகள் (ii) குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமல்லாது உரியக் கடமைகள். முதல் வகை சிலருக்கான கடமைகளும் அத்தகைய கடமையை முறிப்பது உரிமை மீறலை உருவாக்குகிறது. உரிமைக்கொண்டாடுபவர் இத்தகைய கடமையினாலான உரிமையை விட்டுவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாவது வகை ஒரு தனிநபரின் பயனுக்கானது அல்ல; ஆனால் சமுதாயம் (அல்லது அதன் பிரிவு) முழுமையின் பயனுக்கானது ஆகும். இத்தகைய கடமையினால் ஆன உரிமையை வேண்டாம் என வைக்க முடியாது. இத்தகைய கடமை முறிப்பு பொது தவறை ஏற்படுத்தித் தரும்.

ஒரு தீர்ப்பராக்க கடமை, மற்றுள்ளவருக்கு பணம் செலுத்த வேண்டியது அன்றியுள்ள ஏதேனும் செய்வதற்கு மற்றுள்ளவருக்கு உரிதான ஒப்பந்தமற்ற பொதுச் சட்டக் கடமையாகும். தீர்ப்பராக்க கடமை இரு வகைப்படும் அவை: (i) பொதுச் சட்டக் கடமை (ii) பட்சபாதமற்ற கடமை. யார் ஒருவர் ஒரு பட்சபாதமற்ற கடமையில் முறிவொன்றை ஏற்படுத்துகிறாரோ அவர் பொல்லாக்கொன்றை செய்யவில்லை, அதேவேளையில் பொதுச் சட்ட கடமையை முறிப்பது பொல்லாக்காகும்.

பொதுச் சட்ட கடமை இரண்டு பிரிவுகளின் கீழ் வரும் அவை : (i) ஒப்பந்தத்தினலான கடமை (ii) ஒப்பந்தத்தினலாகாத கடமை. ஒப்பந்தத்தினலான கடமையை முறிப்பது ஒரு பொல்லாக்காகாது, அதேவேளையில் ஒப்பந்தத்தினலாகாத கடமையை முறிப்பது பொல்லாக்கொன்றிற்கு ஏற்றத்தை தரும்.[1]

பெயர்காரணம்

[தொகு]

வேண்டாத பழி, வெறுப்பு, தீங்கு ஆகியப்பொருளில் வரும், ஆகாத, தகாத செயல்களைக் குறிக்கும் பெயர்சொல்லாகும் பொல்லாப்பு (ஒலிப்புமுறை: ISO 15919:/Pollāppu/). இது ஆங்கிலச் சொல்லான டோற்ட் (tort) என்பதை தமிழில் குறிப்பிட பொல்லாக்கு எனப் பயன்படுகிறது. டோற்ட் என்றச் சொல் பிரன்ஜில் தோன்றியதாகும். இது இலத்தின் சொல்லான டோற்ட்டஸ் என்பதிலிருந்து தோன்றியதாகும்.

வரையறை (Definition)

[தொகு]

பொல்லாக்கு என்பது பொதுச் சட்ட நடவடிக்கை செய்யுள், 1852 (Common Law Procedure Act, 1852)-ல் "ஒப்பந்தம் சாரதா ஒரு தவறு" எனக் கூறப்பட்டுள்ளது. ஜேம்ஸ்[2]-ன் கூற்றின்படி இது ஒரு சிறந்த பொது வரையறையாகும், ஆனால் இது மிகவும் தெளிவானதல்ல மற்றும் தொடங்குகிறவர்களுக்கு ஒளியூட்டமாகவும் உள்ளது. இந்த வரையறை தெளிவானது என்பதை விட தந்திரமானது எனக்கூறுவதே சரியானதாக இருக்கும். தொடரில் வரையறை தெளிவானதோ முழுமையானதோ அல்ல மற்றும் இது துல்லியமானதாகும்.

சால்மண்டின் கூற்றின்படி 'ஒரு பொல்லாக்கு என்பது, குறிப்பாக ஒப்பந்த மீறல், பொருப்புரிமை (Trust) மீறல் மற்றும் இதற்கு ஒத்த பொருப்பு மீறல் ஆகியனவை அல்லாது இலப்பீட்டிற்கான நடவடிக்கை எடுத்தலை தீர்வாகக் கொண்ட, ஓர் அகவியத் தவறு ஆகும்.

ஃபிராசரின் (Fraser) கூற்றுப்படி, 'இது ஒரு தனிப்பட்ட நபரின் பொதுப்பட்ட உரிமை ஒன்றின் மீறலில், பாதிப்புற்ற தரப்பு நீதிக்கோறும் வேலையில் இலப்பீட்டிற்கான ஓர் உரிமையை வழங்கும்'.

காலவரம்பு செய்யுள், 1963 (Limitation Act,1963-India)-ன் பிரிவு 2(m): பொல்லாக்கு என்பது குறிப்பாக ஒப்பந்த முறிப்பு அல்லது பொருப்புரிமை முறிப்பு அல்லாத அகவியத் தவறு.

மேற்கோள்

[தொகு]
  1. <Nicholas J McBride and Roderick Bagshaw explain the concept of a tort. Tort Law Ch.1 at pp. 3-4, first Indian Reprint, 2003, Published by Pearson Education (Singapore) Pvt Ltd.
  2. பி.எஸ்.ஜேம்ஸ், பொதுச் சட்டத்தின் பொதுக் கோட்பாடு (இரண்டாம் பதிப்பு 1964 ஆங்கிலம்) படலம் 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொல்லாக்கு&oldid=2718547" இலிருந்து மீள்விக்கப்பட்டது