தண்டத்தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தண்டத்தொகை (fine) என்பது ஒரு நீதிமன்றம் [1] அல்லது பிற அதிகாரம் பொருந்திய அமைப்பினால் ஒரு குற்றத்திற்கான தண்டனையாக செலுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யும் பணத்தினைக் குறிப்பதாகும். [2] [3] [4][5] அபராதத்தின் அளவு ஒவ்வொரு வழக்கிலும் அதன் தன்மையினைப் பொறுத்து தீர்மானிக்கப்படலாம், ஆனால் அது பெரும்பாலும் முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. [6]

சிங்கப்பூரில் உள்ள ஒரு எச்சரிக்கைப் பலகையில், சக்கரக் கவ்விகளுடன் அசையாத வாகனங்களை விடுவிப்பதற்கான கட்டணத்தைக் குறிப்பிடுகிறது.
ஒரு தானுந்து நிறுத்துமிடத்தில் உதவியாளர் சட்டவிரோத வாகன நிறுத்தத்திற்கு அபராதம் விதிக்கிறார்

குற்றங்கள், குறிப்பாக சிறு குற்றங்கள், அல்லது ஒரு உரிமைகோரலின் தீர்வு போன்றவற்றிற்கான நிதித் தண்டனைகளுக்கு இந்த வார்த்தை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

நாடு வாரியாக அபராதம்[தொகு]

இங்கிலாந்து மற்றும் வேல்சு[தொகு]

குற்றவியல் நீதிமன்றச் சட்டம் 1980 இல், அபராதம் என்ற சொற்றொடர் எந்தவொரு தண்டனையின் கீழ் செலுத்த வேண்டிய எந்தவொரு பண அபராதம் அல்லது பண இழப்பீடு அல்லது பணப் பறிப்பு ஆகியவற்றை உள்ளடக்குகிறது.[7]

குற்றவியல் நீதிமன்றச் சட்டத்தின் 32வது பிரிவில், "அபராதம்" என்ற வெளிப்பாடு பண அபராதத்தை உள்ளடக்கியது, ஆனால் பணப் பறிப்பு அல்லது பண இழப்பீட்டினை உள்ளடக்கவில்லை. [8]

நெதர்லாந்து[தொகு]

குற்றவியல் சட்டம்[தொகு]

டச்சு குற்றவியல் பிரிவானது (டச்சு: Wetboek van Strafrecht (WvSr)) சட்டத்தின் ஒவ்வொரு விதி மீறலுக்கும் அபராதத்திற்கான குறிப்பிட்ட தொகைகள் வசூலிக்கப்படுவது இல்லை. மாறாக கீழ்கானும் வகைகளில் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

வகை அபராதத்தின் உச்சவரம்பு(ஐரோப்பிய நெதர்லாந்து)[9]
அபராதத்தின் அதிகபட்ச உயரம்(கரீபியன் நெதர்லாந்து)
முதலில் €410 $280
இரண்டாவது €4,100 $2,800
மூன்றாவது €8,200 $5,600
நான்காவது €20,500 $14,000
ஐந்தாவது €82,000 $56,000
ஆறாவது €820,000 $560,000

சான்றுகள்[தொகு]

  1. Amato, Albert (2010). "Reference Guide to Reinsurance 2010 Edition". Business Insurance: 219. 
  2. Epstein, Isidore (1936). "The Babylonian Talmud ...: Seder Nashim. 4 v. 1936". The Babylonian Talmud (Soncino Press) 4: 191. 
  3. "American Jobs Creation Act of 2004". Conference Report to Accompany H.R. 4520 (U.S. Government Printing Office): 675. 2004. 
  4. Willison, David (1819). The Edinburgh Review: 446. 
  5. Wolf, Samuel Marione; McLure, J. C.; Lewis, William Wallace; Barksdale, C. D.; Wetmore, Silas MacBee (1922). Code of Laws of South Carolina, 1922. 3. பக். 256. 
  6. Bray, Samuel (2012). "Announcing Remedies". Cornell Law Review 97. 
  7. The Magistrates' Courts Act 1980, section 150(1)
  8. The Magistrates' Courts Act 1980, section 32(9)
  9. Justitie, Ministerie van Veiligheid en (2015-11-20). "Besluit van 10 november 2015 tot wijziging van de bedragen van de categorieën, bedoeld in artikel 23, vierde lid, van het Wetboek van Strafrecht". zoek.officielebekendmakingen.nl.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டத்தொகை&oldid=3803104" இலிருந்து மீள்விக்கப்பட்டது