வழக்கு மூலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வழக்கு மூலம் (Cause of action – vazhakku moolam) அனைத்து வழக்குகளுக்கும் அது உரிமை சார்ந்ததாயினும் அல்லது குற்றம் சார்ந்ததாயினும் அதை நீதிமன்றங்கள் ஏற்று நடத்த இன்றியமையாத ஒன்றாகும். வழக்கு மூலம் என்றால் சட்டத்தில் வழக்கொன்றை பதிவு செய்வதற்கான காரணக் காரியம் அல்லது காரியங்களாகும். ஒரு வழக்கு மூலம் எனப்படுவது ஒரு தனிநபருக்கு அல்லது அமைப்புக்கு மற்றவருக்கு எதிராக சட்டப்படி பரிகாரம் காண்பதற்கு உரிமை அளிக்கும் அந்த சங்கதிகள் அல்லது சட்ட தேற்றத்தின் ஒரு கணம் ஆகும். ஆங்கிலத்தில் நடவடிக்கைக்கான காரணக்காரியம் எனப் பொருள்படும் சொல்லாடலான Cause of Action என்பதின் தமிழாக்கம் ஆகும். வழக்கு மூலம் என்னும் சொல்லாடல். இந்த சொல்லாடலானது உரிமைசார்ந்து செயல்படுமுறையின் தொகுள், 1908 (CPC,1908 - இந்திய சட்டம்) -இல் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பழனி நீதிமன்ற லோக் அதாலத்.jpg

ஆள்வரை, வரம்புகை மற்றும் வழக்கு நிராகரிப்பு ஆகிய மூன்றையும் தீர்மானிப்பதற்கான முக்கிய காரணி ஆகும் வழக்கு மூலம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழக்கு_மூலம்&oldid=3600103" இருந்து மீள்விக்கப்பட்டது