உள்ளடக்கத்துக்குச் செல்

கருஞ்சிவப்பு கடல் விசிறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருஞ்சிவப்பு கடல் விசிறி

Vulnerable  (NatureServe)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
ஆக்டோகோராலியா
வரிசை:
அல்சையோனாசியே
குடும்பம்:
கோர்கோனிடே
பேரினம்:
கோர்கோனியா
இனம்:
கோ. வென்டலினா
இருசொற் பெயரீடு
கோர்கோனியா வென்டலினா
லின்னேயஸ், 1758[2]

கோர்கோனியா வென்டலினா (Gorgonia ventalina) என்பது பொதுவான கடல் விசிறி என்றும் கருஞ்சிவப்பு கடல் விசிறி என்றும் அழைக்கப்படுவது கடல் விசிறியின் சிற்றினமாகும். இது கோர்கோனிடே குடும்பத்தில் உள்ள எண்கோரல் ஆகும். இது மேற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் கரிபியக் கடலில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

கோ. வென்டலினா

கோ. வென்டலினா என்பது பல முக்கிய கிளைகள் மற்றும் சிறிய கிளைகளை இணைக்கும் பின்னல்வளை வேலைப்பாட்டைைக் கொண்ட விசிறி வடிவ காலனித்துவ பவளம் ஆகும். இதன் சட்டகம் கால்சைட்டு மற்றும் கோர்கோனியன், பசைநார்ப் புரதம் போன்ற கலவைகளால் ஆனது. பலகால் உயிரிகள் மேற்பொதிக்கப்பட்ட புறவிதழ் வட்டங்கள் கிளைகளுடன் இரண்டு வரிசைகளில் உள்ளன. பல சிறிய கிளைகள் விசிறியின் இறக்கையில் சுருக்கப்பட்டுள்ளன. இது வெள்ளி கடல் விசிறியிலிருந்து (கோர்கோனியா பிளாபெல்லம்) இந்தச் சிற்றினத்தை வேறுபடுத்துகிறது. இது பெரும்பாலும் முக்கிய விசிறியிலிருந்து பக்கவாட்டில் வளரும் சிறிய துணை விசிறிகளைக் கொண்டுள்ளது. சுமார் 1.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. வெள்ளை, மஞ்சள் அல்லது வெளிர் ஊதா என வேறுபட்ட நிறங்களில் காணப்படுகிறது. முக்கிய கிளைகள் பெரும்பாலும் ஊதா நிறத்தில் இருக்கும், கிளைகள் செங்கோணத்தில் அமைந்திருக்கும்.[3][4]

பரவலும் வாழிடமும்[தொகு]

ஊதா கடல் விசிறி மேற்கு அட்லாண்டிக் மற்றும் கரீபியன் பகுதிகளில் பெர்முடா மற்றும் புளோரிடா மற்றும் மெக்சிகோ வளைகுடாவிலிருந்து குராசோ வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. இது ஆழமற்ற நீரில் கரைக்கு அருகில் வலுவான அலை நடவடிக்கை மற்றும் ஆழமான வெளிப்புறப் பவளப்பாறை திட்டுகளில் வலுவான நீரோட்டங்களுடன் சுமார் 15 m (49 அடி) ஆழம் வரை வளரும். [3]

சூழலியல்[தொகு]

கோ. வென்டலினா வடிகட்டி உண்ணக்கூடியன. ஒவ்வொரு பாலிப்பும் தன் எட்டு உணர்நீட்சிகளை நீட்டி உணவைச் சேகரிக்கின்றன. இதன் திசுக்களில் ஒன்றிய வாழ்வினை ஒளிச்சேர்க்கை மேற்கொள்ளும் இருகசை உயிரியான, சிம்பியோடினியம் சிற்றினம் சூரிய ஒளியைப் பயன்படுத்தி கரிம கார்பன் சேர்மங்களை உருவாக்குகின்றன. இவை விருந்தோம்பி பவளத்திற்குக் கிடைக்கும் பயன்பாடாக உள்ளது.[5]

கோ. வென்டலினாவின் சட்டகம் கடினமான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. இவை இரைகெளவல் விலங்குகளுக்கு விரும்பத்தகாதவையாக உள்ளது. இது இதன் திசுக்களில் விரும்பத்தகாத சில இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்களையும் கொண்டுள்ளது. நுடிபிராஞ்ச் திரிடோனியா காம்னெரோரம் இந்த பாதுகாப்புகளால் தடுக்கப்படவில்லை. இவை பெரும்பாலும் பவளத்துடன் தொடர்புடையதாகக் காணப்படுகிறது. பவளத்தை உண்ணும் போது, இதன் திசுக்களில் இப்பவளத்தின் வளர்சிதை மாற்றப் பொருட்கள் அதிகரிக்கின்றது. இது சாத்தியமான தீங்குயிரிகளுக்கு விரும்பத்தகாததாக ஆகிறது.[5] ஏனென்றால் , திரிடோனியா காம்னெரோரம் ஜூலியான்புரான் என்ற வேதிப்பொருளால் நிகழ்கிறது.[6]

இந்த பவளம் சில சமயங்களில் அசுபெர்கில்லசு சிடோவி என்ற பூஞ்சையால் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இதனால் ஆசுபெர்கில்லோசிசு தொற்று ஏற்படுகிறது. இதன் காரணமாகச் சேதமடைந்த திட்டுகள், பித்தப்பைகள், திசுக்களின் ஊதா நிறத்துடன் பவளம் மரணமடையும் நிலை கூட ஏற்படுகிறது. கரிபிய கடல் பகுதியில் உள்ள பவளப்பாறைகள் மீது பல புற ஒட்டுண்ணிகள் காணப்படலாம். இவை குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய முகத்துவாரங்களில் குறைந்த உப்புத்தன்மை கொண்ட நீர் காரணமாகத் தோன்றுகிறது.[5] திராசுடோசைட்ரிடே குடும்பத்தில் உள்ள லேபிரிந்துலோமைசீட்சு வகுப்பின் ஒட்டுண்ணியானது பல்வேறு நீல புள்ளிகள் ஏற்ப்பட காரணமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[7]

2017ஆம் ஆண்டில் இரண்டு சூறாவளிகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய நாட்டின் விர்ஜினியா தீபகற்ப ஆய்வில் இதன் எண்ணிக்கை அடர்த்தியாக உள்ளது எனத் தெரிகின்றது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "NatureServe Explorer 2.0". explorer.natureserve.org. பார்க்கப்பட்ட நாள் 29 January 2023.
  2. van Ofwegen, Leen (2012). "Gorgonia ventalina Linnaeus, 1758". WoRMS. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் 2012-10-10.
  3. 3.0 3.1 Colin, Patrick L. (1978). Marine Invertebrates and Plants of the Living Reef. T.F.H. Publications. p. 171–174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86622-875-6.Colin, Patrick L. (1978).
  4. "Gorgonia ventalina (Linnaeus 1758)". Coralpedia. பார்க்கப்பட்ட நாள் 2012-10-09.
  5. 5.0 5.1 5.2 Tabitha A. Baker. "Common Sea Fan (Gorgonia ventalina)". Marine Invertebrates of Bermuda. பார்க்கப்பட்ட நாள் 2012-10-09.Tabitha A. Baker.
  6. Cronin, Greg, et al.
  7. Burge, Colleen A, et al.
  8. Edmunds, Peter J. “High Ecological Resilience of the Sea Fan Gorgonia Ventalina during Two Severe Hurricanes.”