கரிச்சான் விசிறிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிச்சான் விசிறிவால்
படம் ஜான் கவுல்ட் & வில்லியம் கர்ட்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
சைட்டோரிஞ்சசு

மெய்யர், 1874
இனம்:
சை. பாபுயென்சிசு
இருசொற் பெயரீடு
சைட்டோரிஞ்சசு பாபுயென்சிசு
மெய்யர், 1874

கரிச்சான் விசிறிவால் (Drongo fantail) என்பது குள்ள கரிச்சான் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் விலங்கியல் பெயர் சேடோர்கிஞ்சசு பாபுயென்சிசு என்பதாகும். நியூ கினி தீவில் உள்ள ஒரு பாசரின் பறவை சிற்றினம் ஆகும். இது சைட்டோரிஞ்சசு பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினமாகும்.[2] இந்த சிற்றினம் நீண்ட காலமாக டிக்ரூரிடே என்ற கரிச்சான் குடும்பத்தில் வைக்கப்பட்டது. ஆனால் இது பத்துக்குப் பதிலாகப் பன்னிரண்டு வால் இறக்கைகளைக் கொண்டிருப்பதன் மூலம் இந்தக் குடும்பத்தில் உள்ள மற்ற பறவைகளிடமிருந்து வேறுபடுகிறது. மூலக்கூறு பகுப்பாய்வானது, கரிச்சான் குடும்பத்திலிருந்து இந்த சிற்றினத்தை வெளியே நகர்த்துவதை ஆதரிக்கிறது. இதற்குப் பதிலாக இதை ஒரு சகோதர சிற்றினமாக பிஜியின் பட்டுவாலில் வகைப்படுத்த அனுமதிக்கின்றது. மேலும் இந்த இரண்டு சிற்றினங்களும் விசிறிவால் குடும்பமான ரைபிதுரிடேயில் உள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Chaetorhynchus papuensis". IUCN Red List of Threatened Species 2018: e.T22706924A130425991. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706924A130425991.en. https://www.iucnredlist.org/species/22706924/130425991. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Gill, Frank; Donsker, David, eds. (2018). "Orioles, drongos, fantails". World Bird List Version 8.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018.
  3. Irested, Martin; Fuchs, J; Jønsson, KA; Ohlson, JI; Pasquet, E; Ericson, Per G.P. (2009). "The systematic affinity of the enigmatic Lamprolia victoriae (Aves: Passeriformes)—An example of avian dispersal between New Guinea and Fiji over Miocene intermittent land bridges?". Molecular Phylogenetics and Evolution 48 (3): 1218–1222. doi:10.1016/j.ympev.2008.05.038. பப்மெட்:18620871. http://www.nrm.se/download/18.7d9d550411abf68c801800012645/Irestedt%2Bet%2Bal%2BLamprolia.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிச்சான்_விசிறிவால்&oldid=3717521" இலிருந்து மீள்விக்கப்பட்டது