கயானாப் பூங்கா
கயானாப் பூங்கா | |
---|---|
![]() | |
6°48′22″N 58°08′47″W / 6.80605°N 58.146311°W | |
திறக்கப்பட்ட தேதி | 1952 |
அமைவிடம் | சியார்ச்டவுண், கயானா |
வலைத்தளம் | Guyana Zoo Website |
கயானாப் பூங்கா (Guyana Zoo) என்பது கயானா நாட்டின் தலை நகரமான சியார்ச்டவுண் நகரில் அமைந்திருக்கும் விலங்குக் காட்சிச்சாலை ஆகும். அலுவலகப் பூர்வமாக கயானா விலங்கியல் பூங்கா எனப்படும். இப்பூங்கா 1952 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனால் இதன் பெரும்பாலான நிலப்பகுதி 1895 ஆம் ஆண்டு முதல் தாவரவியல் பூங்காவாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆர்ப்பி கழுகுகள் மற்றும் கடற்பசுக்கள் இப்பூங்காவில் பிரபலமாக அறியப்படுகின்றன.[1]
2005 ஆம் ஆண்டில் தோராயமாக இப்பூங்காவில் 25 பணியாளர்கள் பணியாற்றினர்.[2]
கால்கரி பூங்காவுடன் கயானா பூங்காவும் கூட்டுசேர்ந்து இணையாகச் செயல்படுகின்றன.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Meet the Animals". Georgetown, கயானா: Guyana Zoological Park இம் மூலத்தில் இருந்து 10 மார்ச் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100310214825/http://www.sdnp.org.gy/guyanazoo/meet_the_animals.htm. பார்த்த நாள்: 7 January 2010.
- ↑ "About the Zoo". Georgetown, கயானா: Guyana Zoological Park இம் மூலத்தில் இருந்து 12 மார்ச் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100312110837/http://www.sdnp.org.gy/guyanazoo/about_the_zoo.htm. பார்த்த நாள்: 7 January 2010.
- ↑ "Guyana Zoo". கால்கரி, கனடா: Calgary Zoo. http://www.calgaryzoo.org/index.php?option=com_content&task=view&id=196&Itemid=165. பார்த்த நாள்: 7 January 2010.