கம்தானா

ஆள்கூறுகள்: 17°55′N 77°32′E / 17.91°N 77.53°E / 17.91; 77.53
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்தானா
கம்பிதானா
கிராமம்
கம்தானா is located in கருநாடகம்
கம்தானா
கம்தானா
கர்நாடகாவில் கம்தானாவின் அமைவிடம்
கம்தானா is located in இந்தியா
கம்தானா
கம்தானா
கம்தானா (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°55′N 77°32′E / 17.91°N 77.53°E / 17.91; 77.53
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பீதர்
வட்டம்பீதர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்11,179
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30

கம்தானா (Kamthana) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவிலுள்ள பீதர் மாவட்டத்தின் பீதர் வட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும்.[1][2] பண்டைய கிராமமான இது, பீதருக்கு 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இது வரலாற்று பார்சவநாத தீர்த்தங்கரர் சமணக் கோவிலுக்கு புகழ் பெற்றது. வழக்கமாக ஆண்டுதோறும் பிப்ரவரியில் தேர்த் திருவிழா இங்கு நடைபெறும். .

வரலாறு[தொகு]

கி.பி 753 ஆம் ஆண்டில் இராஷ்டிரகூட இளவரசர் தந்திதுர்கன் தன்னை இறையாண்மை சக்தியாக அறிவித்தார். மல்கெடாவை தலைநகராக அறிவித்து அங்கு ஒரு சைனக் கோவிலைக் கட்டினார்.[3] நிசிதிகளின் கல்வெட்டுகளில் கம்தானாவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடுபேறு அடைவதற்காக உண்ணா நோன்பிருந்து உயிர்விடும் சல்லேகனை என்ற நடவடிக்கையில் ஈட்பட்டிருந்ததாகத் தெரிவிக்கிறது. கம்தானா என்றால் மன்னிக்கும் இடம் என்று பொருள்.

பார்சவநாத தீர்த்தங்கர சமண கோயில்[தொகு]

கம்தானா சைனமதத்தின் மையமாக இருந்துள்ளது. இங்கு சைன முனிவர்கள் வடக்கிருத்தல் நடவடிக்கையில் இருந்துள்ளதாகத் தெரிகிறது. பரியங்கசனா பாணியில், சுமார் 115 செ.மீ உயரமும் 55 செ.மீ அகலமும் கொண்ட பார்சவநாதர் தீர்த்தங்கர சிலை ஏழு தலைகள் கொண்ட பாம்பு சிலையின் கீழ் இங்குள்ள ஒரு குகையில் நிறுவப்பட்டுள்ளது. இது சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. குகையில் ஒரு சிறிய விளக்கு இரவும் பகலும் எரிகிறது. விளக்கின் ஒளி சுவரில் பூசப்பட்ட 1,000 கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. சிலையின் மார்பில் சிறீவத்சம் (வட இந்திய பாரம்பரியம்), என்ற வைர வடிவ அடையாளம் காணப்படுகிறாது.[4]

இந்த கோயில் ஒரு பிரபலமான குருகுலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக, இது மாணவர்களுக்கு மத மற்றும் மதச்சார்பற்ற கல்வியை இலவசமாக வழங்கியது. ஐதராபாத்தின் நிசாம்களின் ஆட்சியில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக குருகுலமும் கோயிலும் மிகுந்த சிறப்பாக செயல்பட்டு வந்தது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] கம்தானாவின் மக்கள் தொகை 9634 ஆகும். இதில் 4956 ஆண்களும் 4678 பெண்களும் உள்ளனர் .

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Village code= 449500 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  2. "Yahoomaps India". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Kamthana, Bidar, Karnataka
  3. "BIDAR DISTRICT IMPORTANT HISTORICAL EVENTS". Archived from the original on 2007-07-01. பார்க்கப்பட்ட நாள் 2013-03-06.
  4. "To Kamthana they flock". Deccan Herald. 2013-02-04. பார்க்கப்பட்ட நாள் 2013-03-06.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்தானா&oldid=3806337" இலிருந்து மீள்விக்கப்பட்டது