உள்ளடக்கத்துக்குச் செல்

கபிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபிஸ்
மாகாணம்
மாகாண வரைபடம்
மாகாண வரைபடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்மேற்கு விசயாசு
நேர வலயம்ஒசநே+8 (பிசீநே)

கபிஸ் (Capiz) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், மேற்கு விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் ரொக்சாஸ் ஆகும். இது 1901 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் அந்தோனியோ டெல்ரொசாரியோ (Antonio del Rosario ) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 2,594.64 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக கபிஸ் மாகாணத்தின் சனத்தொகை 761,384 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 52ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 38ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 473 கிராமங்களும், 16 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் பிலிப்பினோ ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் கடற்கரையின் நீளம் 80 கி.மீ ஆகும். இங்கு பல மீன்குளங்கள் உள்ளன. இதனால் இம்மாகாணம் "பிலிப்பீன்சின் மீன்குளத் தலைநகரம்" எனப் பொதுவாக சிறப்பித்துக் கூறப்படுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |https://www.webcitation.org/6DpMOBTiK?url= ignored (help)
  2. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-04.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

[தொகு]

அதிகாரபூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-06-12 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிஸ்&oldid=3928535" இலிருந்து மீள்விக்கப்பட்டது