கன்கார் ஆறு
கன்கார் ஆறு | |
---|---|
பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப்பிரதேசம், சார்க்கண்டு, சத்தீசுகர் |
மண்டலம் | விந்தியா |
மாவட்டம் | சோன்பத்ரா மாவட்டம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | கிதா-தோதா |
⁃ அமைவு | குதியா பீடபூமி, சத்தீசுகர் |
முகத்துவாரம் | சோன் ஆறு |
⁃ அமைவு | சோன்பத்ரா மாவட்டம், உத்தரப்பிரதேசம் |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
வடிநிலம் | சோன் ஆறு |
கன்கார் ஆறு (Kanhar River)(இந்தி: कनहर नदी) என்பது சோன் ஆற்றின் துணை ஆறாகும். இது இந்தியாவின் சத்தீசுகர், சார்க்கண்டு மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் பாய்கிறது.
ஆற்றோட்டம்[தொகு]
சத்தீசுகரின் ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள குதியா பீடபூமியில் உள்ள கிதா-தோதாவில் கன்கார் ஆறு உருவாகிறது. இது ஆரம்பத்தில் வடக்கு நோக்கிப் பாய்ந்து சார்க்கண்டின் பாலமு பகுதியில் காட்வா மாவட்டத்துடன் எல்லையை உருவாக்குகிறது. பின்னர் சத்தீசுகரின் சுர்குஜா மாவட்டம் வழியாக 100 கிலோ மீட்டர்கள் பாய்ந்து கர்வா மாவட்டத்தில் சோனுக்கு இணையாகச் சென்று வடமேற்கில் திரும்பி உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் பிரிவில் உள்ள சோன்பத்ரா மாவட்டம் வழியாகப் பாய்கிறது. இது கோட்டா கிராமத்தின் வடகிழக்கில் சோன் ஆற்றுடன் இணைகிறது. சுமார் 400 கிலோமீட்டர்கள் (250 mi) ஆற்றுப் பாதையில் 75% தூரம் இந்த ஆறு பாறை படுக்கையைக் கடந்து மலைப்பாதை, வனப்பகுதிகள் வழியாகப் பாய்கிறது.[1][2][3]
துணையாறுகள்[தொகு]
கன்காரின் துணை நதிகள்: தீம், லான்வா, பாண்டு, கோய்டா, ஹதினாலா, சூரியா, சனா, செந்தூர், குர்சா, கல்புல்லா, சேமர்கர், ரிகர் மற்றும் செர்னா நல்லா. [1] [3]
அருவி[தொகு]
ஆற்றின் பாதையில் பல அருவிகள் அமைந்துள்ளன. கொத்தாலி கிராமம் (பல்ராம்பூர்) அருகில் 61 மீட்டர் உயரமுடைய பாவை அருவி அமைந்துள்ளது.[1] குர்-சிந்து நீர்வீழ்ச்சி சினியா சமூகா பகுதியில் கர்வாவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சத்தீசுகர், சார்க்கண்டு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் எல்லைகளின் சந்திப்பில் 30 மீட்டர் உயர சுக்தாரி அருவி அமைந்துள்ளது.[4]
திட்டங்கள்[தொகு]
கன்கார் நீர்மின் திட்டம் மற்றும் கன்கார் ஆறு மேம்பாட்டுத் திட்டம் கர்வா மாவட்டத்தில் உள்ள பாராதிக்கில் உள்ள கன்கார் நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டுள்ளன. சீனியா கிராமத்திற்கு அருகில் மற்றொரு அணை/ நீர்த்தேக்கம் உள்ளது.[5] கன்கார் சிஞ்சாய் பரியோஜனா சோகன் பத்ரா மாவட்டத்தின் தெகசில் துதியில் சுகவமான் கிராமத்திற்கு அருகிலுள்ள கன்ஹாருடன் பேகன் ஆற்றின் சங்கமத்தின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "The Kanhar". Surguja district administration இம் மூலத்தில் இருந்து 30 August 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100830171019/http://surguja.nic.in/historical_background.htm#top.
- ↑ "Gazetteer of Palamu District" இம் மூலத்தில் இருந்து 2011-07-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110721172839/http://www.palamu.nic.in/gazette/general_gazette.doc.
- ↑ 3.0 3.1 Das, S. N.; Inoke, R.; Rao, B. R. M.; Singh, B. M. (1988). "Land irrigability studies for watershed management in Kanhar sub-basin (Sone Basin) using airborne data". Journal of the Indian Society of Remote Sensing 16 (2): 33–38. doi:10.1007/BF03014303.
- ↑ Upkar Prakashan Editorial Board (September 2010). Jharkhand General Knowledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788174822468. https://books.google.com/books?id=6brLiXCJfsoC&q=Kanhar+River&pg=PA57. பார்த்த நாள்: 2010-07-02.
- ↑ "Kanhar Pumped – Storage Hydroelectric Project" இம் மூலத்தில் இருந்து 2011-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110708102355/http://www.bshpcltd.com/plan.htm.
- ↑ "Project - Kanhar Sinchai Pariyogna" இம் மூலத்தில் இருந்து 2011-02-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110228043120/http://irrigation.up.nic.in/dp/ksp.htm.