உள்ளடக்கத்துக்குச் செல்

கதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதன் என்பவர் ஒக்தாயி கானின் மகனாவார். இவரது தாய் ஒக்தாயி கானின் காமக்கிழத்தியரில் ஒருவராவார். இவர் செங்கிஸ்கானின் பேரன் மற்றும் குயுக் கானின் சகோதரர் ஆவார். மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பின்போது கதன், சகதையின் மகனான பைதர் மற்றும் படுவின் அண்ணனான ஓர்டா கான் ஆகியோர் போலந்தைத் தாக்கிய மங்கோலிய பிரிவுக்கு தலைமை தாங்கினார். 

1251 ஆம் ஆண்டு கதன் மோங்கே கானை ககானாக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டார். ரீன் கிரவுசெட் என்ற வரலாற்று ஆசிரியரின் கூற்றுப்படி குயுக்கின் தலைமைத் தளபதியான எல்ஜிகிடையை பிடிப்பதற்கு கதன் மோங்கே கானுக்கு உதவியிருக்கலாம். கதன் குப்லாய் கானுக்கு விசுவாசமாக இருந்தார். அரிக் போகேவுடன் நடந்த டொலுய் உள்நாட்டுப் போரில் குப்லாய்க்கு கதன் உதவி செய்தார். அரிக் போகேயின் தளபதி அலந்தரை அந்த உள்நாட்டுப் போரில் கதன் கொன்றார்.

பல நடுக்கால நூல்களில் கதன், கய்டு என்பவருடன் குழப்பிக் கொள்ளப்படுகிறார். இதன் காரணமாக ஐரோப்பிய படையெடுப்புகளில் யார் கலந்து கொண்டார் என்ற குழப்பம் ஏற்படுகிறது.[1]

உசாத்துணை[தொகு]

  1. Chambers, James. The Devil's Horsemen: The Mongol Invasion of Europe. Atheneum. New York. 1979. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-689-10942-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதான்&oldid=3460226" இலிருந்து மீள்விக்கப்பட்டது