கண்ணாடிச் சவப்பெட்டி (விசித்திரக் கதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணாடிச் சவப்பெட்டி
நாட்டுப்புறக் கதை
பெயர்: கண்ணாடிச் சவப்பெட்டி
தகவல்
பகுதி: ஜெர்மனி

" தி க்ளாஸ்காஃபின் " தமிழில் கண்ணாடி சவப்பெட்டி என்பது க்ரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்ட ஒரு ஜெர்மானிய விசித்திரக் கதை யாகும். இது கதை வகை 163ஐ ஒத்ததாகும். [1] ஆண்ட்ரூ லாங் அதை பச்சை நிற தேவதை என்ற புத்தகத்தில் படிகச் சவப்பெட்டி என்ற தலைப்பில் சேர்த்தார். [2]இது ஆர்னே-தாம்சன் வகை 410, தூங்கும் அழகி கதை வகையைச் சேர்ந்ததாகும். மற்றொரு மாறுபாடு இளைய அடிமை என்பதாகும். [3]

சுருக்கம்[தொகு]

ஒரு தையல்காரரின் பயிற்சியாளர் ஒரு காட்டில் தொலைந்து போனார். இரவு வந்ததும், ஒரு ஒளி பிரகாசிப்பதைக் கண்டு, அதைத் தொடர்ந்து ஒரு குடிசைக்குச் சென்றார். அவ்விடத்தில் ஒரு முதியவர் வசித்து வந்தார். தையல்காரர் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால் அவரை இரவு அவரது இடத்தில் தங்க அம்முதியவர் அனுமதித்தார். காலையில், தையல்காரர் ஒரு பெரிய மான் மற்றும் ஒரு காட்டுப்பன்றிக்கு இடையே சண்டை நடப்பதைக் கண்டார். மான் வென்ற பிறகு, தையல்காரரைக் கட்டிக்கொண்டு, தன் கொம்புகளில் தூக்கிச் சென்றது. அவரை ஒரு கல் சுவரின் முன் நிறுத்தி, அதிலிருந்த ஒரு கதவுக்கு எதிராகத் தள்ளியது. கதவின் உள்ளே, அவரை ஒரு கல்லின் மீது நிற்கச் சொன்னது. அது அவருக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறியது. அவரும் அவ்வாறு செய்தார். அக்கல் மூழ்கி, அவர் ஒரு கீழிருந்த பெரிய மண்டபத்தினுள் விழுந்தார். அங்கிருந்த ஒரு குரல் அவரை ஒரு கண்ணாடிப் பெட்டியைப் பார்க்கச் செய்தது. பெட்டியில் ஒரு அழகான பெண் இருந்தாள். அவள் அப்பெட்டியைத் திறந்து அவளை விடுவிக்கச் சொன்னாள். அவரும் அவ்வாறே செய்தார்.

கன்னி அவரிடம் பின்வருமாறு தன் கதையக் கூறினாள். அவள் ஒரு பணக்காரரின் மகள். அவளுடைய பெற்றோர் இறந்த பிறகு, அவள் தன் சகோதரனால் வளர்க்கப்பட்டாள். ஒரு நாள், ஒரு பயணி இரவில் தங்கி, அவளைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்ல மந்திரம் பயன்படுத்தினான். அவள் மந்திர விரட்டியின் பயன்பாட்டைக் கண்டுபிடித்து அவனுடைய திட்டத்தை நிராகரித்தாள். பழிவாங்கும் நோக்கில், மந்திரவாதி தனது சகோதரனை மானாக மாற்றி, கண்ணாடிச் சவப்பெட்டியில் சிறைபிடித்து, அவர்களைச் சுற்றியுள்ள அனைத்து நிலங்களையும் மந்திரம் போட்டான்.

அக்கண்னாடிப் பெட்டியைத் திறந்ததால் அக்கன்னி விடுதலை பெற்றாள். அம்மான் கொன்ற காட்டுப்பன்றி மந்திரவாதி ஆவான். தையல்காரரும் கன்னியும் மந்திரித்த மண்டபத்திலிருந்து வெளிவந்து, அந்த மான் மீண்டும் சகோதரனாக மாறியிருப்பதைக் கண்டனர். இறுதியில் தையல்காரருக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

பகுப்பாய்வு[தொகு]

கண்ணாடி சவப்பெட்டி ,இச்னோ வொய்ட் டுடன் ஒப்பிடப்பட்டது. இது கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பெண்ணின் மையமான சிறபட்டுள்ள பெண் என்ற கருவைப் பகிர்ந்து கொள்கிறது.

"தி கிளாஸ் காஃபின்" முதன்முதலில் 1837 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் விசித்திரக் கதைகளின் தொகுப்பில் தோன்றியது. தொகுப்பில் உள்ள மற்றவைகளைப் போல இது சேகரிக்கப்பட்ட நாட்டுப்புறக் கதை அல்ல. மாறாக, 1728 ஆம் ஆண்டு சில்வானஸ் எழுதிய டாஸ் வெர்வோன்டே ம்யூட்டெர்-சோஹ்ங்கென் நாவலில் உள்ள ஒரு பகுதியிலிருந்து க்ரிம் சகோதரர்கள் இக்கதையைத் தழுவினார்கள். அவர்கள் அதை உண்மையான கதையுடன் சில தொடர்பு படுத்தியே எழுதியுள்ளனர்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]