இச்னோ வொய்ட்
இசுனோ வொய்ட் | |
---|---|
அலெக்சாண்டர் சிக் வரைந்த இச்னோ வொய்ட் ஓவியம் | |
நாட்டுப்புறக் கதை | |
பெயர்: | இசுனோ வொய்ட் |
தகவல் | |
Aarne-Thompson Grouping: | 709 |
Country: | ஜெர்மனி |
இச்னோ வொய்ட் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் செருமன் நாட்டின் விசித்திரக் கதையாகும். இப்போது இது மேற்குலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட கதையாகும். கிரிம் சகோதரர்கள் 1812ஆம் ஆண்டு கிரிம்சின் விசித்திரக் கதைகள் என்ற பெயரில் முதன் முதல் பதிப்பித்தனர். விசித்திரக் கதை மாய கண்ணாடி, நச்சு ஆப்பிள், கண்ணாடி சவப்பெட்டி, கெட்ட ராணி, ஏழு சித்திரக் குள்ளர்கள் போன்றவற்றை உள்ளடக்கியது. ஏழு சித்திரக் குள்ளர்களுக்கும் தனி பெயர்கள் 1912ஆம் ஆண்டு நியூயார்க் நகரின் பிராட்வே தெருவில் நடந்த இச்னோ வொய்ட்டும் ஏழு சித்திரக் குள்ளர்களும் என்னும் நாடகத்தில் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு வேறு பெயர் 1937இல் வெளிவந்த வால்ட் டிசுனியின் ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் என்ற திரைப்படத்தில் கொடுக்கப்பட்டது. கிரிம்மின் இக்கதை பொதுவாக இச்டோ வொய்ட் என்று குறிப்பிடப்படும், [1] இதை கிரிம்மின் சகோதரர்களின் இச்னோ வொய்ட்டும் சிவப்பு ரோசாவும் என்ற கதையுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.
கதை
[தொகு]கதையின் ஆரம்பத்தில் திறந்திருந்த காலதர் அருகில் ஊசியின் துணைகொண்டு துணியை தைத்துக்கொண்டு உள்ளார். அப்போது ஊசியானது குத்தியதில் 3 சொட்டு இரத்தம் வெளியில் அப்போது பெய்த பனியில் விழுகிறது. ராணி எனக்கு இந்த பனியின் நிறத்தை ஒத்த வெண்மை நிறமும் இரத்த நிறத்தில் சிவந்த உதடுகளையும் கருமையான கூந்தலையும் கொண்ட பெண் பிறக்கவேண்டுமென தனக்குள் கூறிக்கொள்கிறார். சிறிது காலத்துக்கு பின் குழந்தை பெற்றார் அக்குழந்தை வெண்மை நிறத்தொடும் சிவப்பு உதடோடும் கருமையா முடியோடும் இவரின் எண்ணப்படியே இருந்தது, அதற்கு இச்னோ வொய்ட் என்று பெயரிட்டார்கள் சிறிது காலத்திலேயே ராணி இறந்துவிட்டார்.
ஓர் ஆண்டு கழித்து இச்னோ வொய்ட்டின் தந்தை அழகான பெண்னை மறு மணம் புரிந்துகொண்டார். இப்புதிய ராணி கெட்ட எண்ணம் உடையவராகவும் தன் தோற்றத்தில் பெருமை கொண்டவராகவும் இருந்தார். அவர் ஓர் மாயக்கண்ணாடி வைத்திருந்தார். அடிக்கடி அதனிடம் என் கையிலுள்ள மாயக்கண்ணாடியே இவ்வுலகில் யார் அழகானவர் என்று கேட்பார் அதுவும் நீங்கள் தான் உலகிலேயே அழகானவர் என்று கூறும். அப்பதிலை கேட்டு இன்புருவார். அப்போது இச்னோ வொய்ட் வளர்ந்து கொண்டிருந்தார், ஒவ்வொரு நாளும் அவர் அழகும் அதிகமாகி கொண்டிருந்தது. அவர் ராணியை விட அழகு மிக்கவராக மாறியிருந்தார். அப்படியான பின் ஒரு நாள் ராணி தன் மாயக்கண்ணாடியிடம் உலகில் யார் அழகானவர் என கேட்க அக்கண்ணாடி இச்னோ வொய்ட் தான் உலகிலேயே அழகானவர் என கூறியது.
இது ராணிக்கு அதிர்ச்சியை தந்தது. இதனால் இச்னோ வொய்ட் மீது ராணிக்கு பொறாமை வளர்ந்தது, ஒரு கட்டத்தில் வெறுப்பு உச்ச கட்டத்தை அடைந்து ராணி சில கொலைகாரர்களை அழைத்து இச்னோ வொய்ட்டை அடர்ந்த காட்டின் உள்பகுதிக்கு கூட்டிச் சென்று அங்க்கு அவளை கொன்று விடுமாறு கூறினார்.கொலை செய்ததுக்கு சாட்சியாக இச்னோ வொய்ட்டின் நுரையீரலையும், கல்லீரலையும் கொண்டு வந்து காட்ட சொல்கிறார். அடர்ந்த காட்டுக்குள் இச்னோ வொய்ட்டை கொலைகாரர்கள் கூட்டி செல்கிறார்கள். வொய்ட்டின் தலையை வெட்ட கத்தியை தூக்கிய பின் அவரால் கொலைசெய்ய மனமில்லாமல் போகிறது, அப்போது ராணியின் திட்டத்தை வொயிட் அறிந்து கொலைகாரர்களிடம் கண்ணீர் விட்டு கெஞ்சுகிறார். தன்னை கொல்லாமல் விட்டுவிட்டால் தான் காட்டுக்குள் ஓடிவிடுவதாகவும் நாட்டு பக்கமே வரப்போவதில்லை என்றும் சொல்கிறார். தயக்கத்துடன் கொலைகாரர்கள் அவரை கொல்லாமல் தப்பிச்செல்ல விட்டு விடுகின்றனர். அவரின் நநுரையீரலக்கும், கல்லீரலக்கும் பதிலாக காட்டு விலங்கின் நுரையீரலையும், கல்லீரலையும் கொண்டு செல்கின்றனர்.
காட்டினுள் அலைந்து திரியும் அவர் ஏழு விசித்திரக் குள்ளர்களின் சிறிய குடிசையை காண்கிறார். வீட்டில் யாரும் இல்லாததால் அவர் அங்கிருந்த சிறிய உணவை தின்றுவிட்டு சிறிது நீரையும் வைனையும் அருந்திவிட்டு ஏழு படுக்கைகளில் தனக்கு வசதியாக உள்ள படுக்கையில் உறங்கினார். குள்ளர்கள் வீடு திரும்பியதும் யாரோ நுழைந்துள்ளார்கள் என்பதை பொருட்கள் அவர்கள் வைத்த மாதிரி இல்லாமல் கலைந்து உள்ளதை வைத்து கண்டறிகிறார்கள். யார் நுழைந்திருப்பார்கள் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் போது இச்னோ வொயிட் தூங்குவதை கண்டறிகிறார்கள். வொயிட் எழுந்ததும் அவர்களிடம் என்ன தனக்கு நேர்ந்தது என்று கூறுகிறாள். குள்ளர்கள் இவள் மீது பரிதாபப்பட்டு தங்களுக்கு வீட்டுவேலைகள் செய்ய ஒப்புக்கொண்டதால் குடிசையில் தங்க அனுமதிக்கிறார்கள். அவர்கள் மலைக்கு செல்லும் போது வொயிட் தனியாக உள்ள போது எச்சரிக்கையாக இருக்கும் படி கூறுகிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bartels, Karlheinz (2012). Schneewittchen – Zur Fabulologie des Spessarts. Geschichts- und Museumsverein Lohr a. Main, Lohr a. Main. pp. 56–59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-934128-40-8.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிமூலத்தில் இச்னோ வொய்ட் பற்றிய ஆக்கங்கள்
- பொதுவகத்தில் இச்னோ வொய்ட் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Text of "Little Snow-white" from "Household Tales by Brothers Grimm" on Project Gutenberg