உள்ளடக்கத்துக்குச் செல்

கடல் கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடல் கழுகு
புதைப்படிவ காலம்:இயோசீன் - தற்போதைய
வெண்தலைக் கழுகு
(Haliaeetus leucocephalus)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Haliaeetus

Savigny, 1809
இனம் (உயிரியல்)

Haliaeetus leucogaster
Haliaeetus sanfordi
Haliaeetus vocifer
Haliaeetus vociferoides
அதீனா மீன் கழுகு
Haliaeetus albicilla
வெண்தலைக் கழுகு
Haliaeetus pelagicus
சிறிய மீன் கழுகு
சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு

கடல் கழுகு (ஒலிப்பு) (Sea eagle) அசிபிட்ரிடே எனும் குடும்பத்தையும் காலியட்டசு எனும் பேரினத்தையும் சோ்ந்ததாகும். இவற்றில் எட்டு இனங்கள் உள்ளன. கடல் கழுகின் உடல் பகுதி காவி நிறமாகவும் வால் பகுதி வெண்மையாகவும் உள்ளன. அலகும் காலும் மஞ்சள் நிறமாக இருக்கும். விாிந்த நிலையில் இறக்கைகளின் இரு முனைகளுக்கு இடைப்பட்ட அளவு, ஆண் கழுகுக்கு 7 அடியும் பெண் கழுகுக்கு 8 அடியும் இருக்கும். இவற்றின் குரல் ஒலி ஒரே மாதிாியாக இருப்பதில்லை.

கடல் கழுகுகள் பலவகையான உணவுப் பொருள்களை உட்கொள்கின்றன. கடல் கழுகின் உணவாக 50- 60 சதவீதம் பறவைகளும், 25-30 சதவீதம் மீன்களும் அமைகின்றன. ஒரு கழுகு, ஒரு நாளைக்கு உண்ணும் உணவு ஏறக்குறைய ஒரு கிலோவாகும். ஆண் கழுகு ஏறக்குறைய 9 கிலோ எடையும், பெண் கழுகு ஏறக்குறைய 11 கிலோ எடையும் இருக்கும். கடல் கழுகு இயல்பாக வலசை போவதில்லை. ஆண் பெண் ஆகிய இரு கழுகுகளும் அவற்றின வாழிட எல்லைக்குட்பட்ட 20-100 சதுர கி.மீ.களுக்குள்ளேயே ஆண்டு முழுவதும் தங்குகின்றன.

இனச்சேர்க்கை கூட்டிற்கு அருகிலேயே நடைபெறுகிறது. பொிய மரக்கிளைகளிலோ குன்றின் மீதோ கூடுகட்டுகின்றன. ஒருமுறை வேயப்பட்ட கூடு பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஆண் கழுகு கூட்டிற்குத் தேவையான பொருள்களைத் தேடி கொண்டு வர, பெண் கழுகு கூட்டை அடைக்கிறது. பெண் கழுகு ஏறத்தாழ ஐந்து அவுன்சு எடையுள்ள இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடுகின்றது. பொதுவாக பெண் கழுகே அடைகாக்கும் பணியில் ஈடுபடுகிறது. சில வேளைகளில் ஆண் கழுகும் இப்பணியில் பங்கு கொள்கிறது. முட்டைகளிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் மூன்று அல்லது நான்கு அவுன்சு எடைகொண்டவை, இவை பத்து வார காலத்திற்குப் பிறகே பறக்க இயலும். இக்குஞ்சுகள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரே முதிர்ச்சியடைவதால் இவற்றின் பிறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. இந்திய கடல் பகுதியில் காலியேசிட்டல் அல்பிசில்லா, காலியீட்டசு லுாகோகாசுடர் ஆகிய இனங்கள் காணப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கடல் கழுகு". அறிவியல் களஞ்சியம் (2007) தொகுதி 7. (திருவள்ளுவர் ஆண்டு 2022, மார்கழி - திசம்பர் 1991). Ed. பேராசிாியர். கே. கே. அருணாசலம், அறிவியல் களஞ்சிய மையம், தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். தஞ்சாவூர்: தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். 147 - 148. அணுகப்பட்டது 6 சூலை 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_கழுகு&oldid=3928462" இலிருந்து மீள்விக்கப்பட்டது